Tag Archive: தலித்

ஒடுக்கப்படுகிறார்களா பிராமணர்கள்?

பத்ரி சேஷாத்ரி பிராமணர்கள் தமிழகத்தில் நடத்தப்படும் விதம் பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் எழுதிய கட்டுரை இணையத்தில் கடும் விமர்சனத்திற்குள்ளாகியது என்றார்கள். முக்கியமான சில எதிர்வினைகளை மட்டும் தேர்ந்து அளிக்கும்படி சொன்னேன். தொலைபேசியில் நான் சொன்ன கருத்துக்களை எழுதியே ஆகவேண்டும் என்று அரங்கசாமி சொன்னார்.அனேகமாக அனைவரும் எதிர்வினை ஆற்றிவிட்டமையால் என் கருத்தை எழுதலாமென்று தோன்றியது. பத்ரி சேஷாத்ரியின் கட்டுரை ஏற்கனவே வேறு சொற்களில் அசோகமித்திரனால் சொல்லப்பட்டதுதான். வெவ்வேறு பிராமணர்கள் அதை எழுதியிருக்கிறார்கள். பொதுவாக தமிழ்பிராமணர்களின் ஆதங்கம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/67150

காந்தியும் தலித்துக்களும்

மிகையான எளிமைப்படுத்துதலின் சாத்தியம் இருந்தாலும், காந்தியமும் இந்திய மார்க்சியமும் தலித்துகளின் பிரச்சனைகளை நிலம் மற்றும் அற மதிப்பீடு சார்ந்தே எதிர்கொள்கின்றன என்பதே என் வாதம். இவை ஒன்றையொன்று சாராமல் தனித்து இருக்கவில்லை டி.ஆர்.நாகராஜ் எழுதிய கட்டுரை. காந்தி டுடே இணைய இதழில்

Permanent link to this article: https://www.jeyamohan.in/63046

நூறுநாற்காலிகளின் யதார்த்தம்

அன்புள்ள ஜெயமோகன் , வணக்கம், சென்ற வாரம் தான் நூறு நாற்காலிகள் கதையை உங்கள் தளத்தில் படித்தேன். மனதில் கொப்பளிக்கும் உணர்வுகளை சொல்லவே முடியவில்லை, மிகவும் கனமாக உணர்கிறேன். கடந்த ஒரு வாரமாக கடுமையான பணிச்சூழலுக்கு நடுவேயும் அந்த கதை மனதில் ஓடிக்கொண்டே இருந்தது, அதன்பிறகு எதனையும் வாசிக்க முடியவில்லை. நான் பிறந்து வளர்ந்த தலித்துகள் அதிகம் வாழும் சூழலில் ஆதிக்க சாதி அடக்குமுறைகளையெல்லாம் நான் பார்த்ததே இல்லை, (கூட்டமாக இருப்பவர்களே ஆதிக்க சாதி இந்த காலத்தில்) …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62088