Tag Archive: தமிழ் ஹிந்து

நமது கோட்டையின் கொடி

இலக்கியவாதி இலக்கியமேதை என்ற பிரிவினை அடிக்கடி இலக்கியத்தில் செய்யப்படுகிறது. எப்படி அதை வரையறைசெய்வது? இலக்கியவாதி என்பவன் இலக்கியத்தை அறிந்தவன், அதில்பயிற்சிபெற்று தன் வாழ்க்கைநோக்கையும் அனுபவங்களையும் ஒட்டி எழுதுபவன். உண்மையில் பயிற்சி எடுத்துக்கொண்டால் எவரும் ஒரு நாவலை எழுதிவிடமுடியும் என்பார்கள். நாம் வாசிக்கும் பெரும்பாலானவர்கள் இலக்கியவாதிகள்தான் இலக்கியமேதை என்பவரை மேலும் விரிந்த பொருளில் புரிந்துகொள்ளவேண்டும். படைப்புலகம் என்ற சொல்லாட்சியை மிக அலட்சியமாகப் பயன்படுத்துவது நம் வழக்கம். உண்மையில் உலகம் என்று சொல்லத்தக்க படைப்புவெளி இலக்கியமேதைகளுக்கு மட்டுமே உரியது. பல்வேறுவகையான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78693

நாளைக்கான நாளிதழ்

செய்தித்தாள்கள் என்ற அமைப்பு அச்சுக்கலை அளித்த கொடை. அச்சுக்கலைதான் உண்மையில் உலகை பேச்சிலிருந்து எழுத்து நோக்கிக் கொண்டுவந்தது. முன்பெல்லாம் எப்போதைக்குமான பதிவுகளே எழுத்தில் இருந்தன. அன்றாடப்பதிவுகள் செவிவழியாகப் பகிரப்பட்டன. ஆகவே செய்திகள் எப்போதும் ஒலியாகவே இருந்தன. செய்தித்தாள் நம் அறிதலில் பெரும்புரட்சியை உருவாக்கியது. செய்தி எழுத்தில் பதிவாகிப் பகிரப்பட்டபோது அதற்கு ஆவணமதிப்பு வந்தது. ஒவ்வொருநாளும் நாம் செய்தியில் நம் நாட்டையும் சமூகத்தையும் உலகையும் கண்கூடாகப் பார்த்துக்கொள்கிறோம். இன்று காஷ்மீரில் கடையடைப்பு அஸாமில் தொழிற்சங்கப்போராட்டம் கோவாவில் திரைவிழா, நியூயார்க் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78699

தமிழ்ஹிந்து

தமிழ் ஹிந்து நான் விரும்பி வாசிக்கும் இணையதளங்களில் ஒன்று. அதில் ம.வெங்கடேசன் எழுதிவந்த ‘புரட்சியாளர் அம்பேத்கார் மதம் மாறியது ஏன்?’ என்ற கட்டுரை சமீபத்தில் நான் வாசித்த முக்கியமான கட்டுரைகளில் ஒன்று. இந்த அளவுக்கு விரிவான தரவுகளுடன் அரசியல்தளத்தில் எவரும் எழுதுவதில்லை என்பதே உண்மை. இங்கே ஒரு தார்மீகக்கோபத்தை பாவனைசெய்துகொண்டாலே போதும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. நம் அரசியல் அக்கப்போர்க்காரர்களால் அக்கட்டுரையை ஆதாரபூர்வமாக எதிர்கொள்ள முடியாதென்பதையே அதற்கு எதிராக வந்த மௌனம் காட்டியது. அதேபோல இப்போது வெங்கடேசன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26272

ஆழ்வார் பாடல்கள்…

அன்புள்ள ஜெ, ஊட்டி சந்திப்பில் நான் பேசிய வைணவப் பாடல்கள் குறித்து சுருக்கமாக எழுதியிருக்கிறேன் – முதல் பாகம் – சில ஆழ்வார் பாடல்கள் – 1 http://www.tamilhindu.com/2010/09/some-azhwar-poems-1/ அடுத்த பாகம் திங்கட்கிழமை வரும். அன்புடன், ஜடாயு

Permanent link to this article: https://www.jeyamohan.in/8079

இரு கட்டுரைத்தொடர்கள்

அன்புள்ள ஜெயமோகன், தமிழ் ஹிந்து என்னும் இணையதளத்தை வாசிக்கிறீர்களா? அது என்னுடைய மிகப்பிடித்தமான இணைய இதழ். அதில் நீங்கள் ஏன் எழுதக்கூடாது? ஜெயச்சந்திரன் ஏர்வாடி அன்புள்ள ஜெயச்சந்திரன், அந்த இணைய இதழை நான் தொடர்ந்து வாசித்துவருகிறேன். இரு கட்டுரைத்தொடர்கள் அதில் மிக முக்கியமானவை. ‘ஓடிப்போனானா பாரதி?’ என்ற கட்டுரைத்தொடர் மிகமிகச் சமநிலையுடன், முழுக்க முழுக்க தகவல்களுடன், ஓர் ஆய்வுக்கட்டுரை எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இருக்கிறது. ஆங்கிலேயர் சுதந்திரப்போரட்ட வீரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தபோது இந்தியா இதழின் ஆசிரியராக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2545