Tag Archive: தமிழ் மின்னிதழ்

மின்தமிழ் அட்டை – ஒரு விவாதம்

அன்பு ஜெயமோகன், சரவண கார்த்திகேயன் கொண்டுவரும் தமிழ் மின்னிதழில் உங்கள் நேர்காணலைப் படித்தேன். அடர்த்தியான சொற்களில் அமைந்து வாசகனைத் தொந்தரவு செய்யும் சிற்றிதழ் பாணி தவிர்த்த கேள்விகள் மனதுக்கு மிக நெருக்கமாக இருந்தன. கூடவே, அக்கேள்விகள் வணிக இதழ்களுக்கான மேலோட்டமான பார்வையையும் கொண்டிருக்கவில்லை. அதற்காகவே சரவண கார்த்திகேயனைப் பாராட்டுகிறோம். மின்னிதழின் பெரும்பான்மையான பக்கங்களை உங்களின் நேர்காணலுக்காகவே ஒதுக்கி இருந்தது உறுத்தியது; உங்களைத் துதிபாடுவது போன்ற அட்டைப்படமும் நெருடலைத் தந்தது. மற்றபடி, நேர்காணலின் சில பதில்கள் வழியாகவே உங்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69954

தமிழ் மின்னிதழ்

சி.சரவணக்கார்த்திகேயன் ஆசிரியத்துவத்தில் வெளியாகும் மின்னிதழான ’தமிழ்’ நேற்று பிரசுரமாகியிருக்கிறது. இதை பரீக்‌ஷா ஞாநி வெளியிட்டிருக்கிறார். வெளியீட்டு விழாவும் இணையத்திலேயேதான் இணையத்தில் உதிரி குறிப்புகளாக வெளியாகிக்கொண்டிருக்கும் எழுத்துக்களை ஒரே இடத்தில் பிரசுரிப்பது இதன் நோக்கம். பொதுவாக இணையதளம் என்பதே இணையஇதழாக இங்கே கொள்ளப்படுகிறது. ஆனால் இவ்விதழ் இணையம் மூலம் வாசிக்கக் கிடைக்கும் இதழ்.தரவிறக்கம் செய்தோ நேராகவோ வாசிக்கலாம் ஏற்கனவே வெளிவந்த சில இணையஇதழ்கள் கணிசமான பங்காற்றியிருக்கின்றன. குறிப்பாக சொல்வனம் இதழ் தமிழ் இணையஇதழ்களில் முக்கியமானது என நினைக்கிறேன் பதாகை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69786