Tag Archive: தமிழ் புதுக்கவிதை

அப்துல் ரகுமான் – பவள விழா

வானம்பாடி இயக்கத்தின் முதன்மைக் கவிஞர்களில் ஒருவரான அப்துல் ரகுமான் அவர்களுக்கு இன்றும் நாளையுமாக சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் பவளவிழா கொண்டாடப்படுகிறது. கவிக்கோ கருவூலம் என்னும் நூலும் வெளியிடப்படுகிறது. அதற்கான அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றேன் கவிஞர் என்பதுடன் அரசியல் பிரமுகர் என்னும் அடையாளமும் கொண்டிருப்பதனால் மிகப்பெரிய விழாவாக இது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மு.கருணாநிதி உட்பட முக்கியமான அரசியல்வாதிகளும் மனுஷ்யபுத்திரன் போன்ற இலக்கியவாதிகளும் பங்குகொள்கிறார்கள் . நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துக்கள். தமிழ்ப்புதுக்கவிதை இயக்கம் ஒன்றுக்கும் மேற்பட்ட முன்னுதாரணங்களைக் கொண்டு உருவானது. முன்னோடிகளாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80118

தேவதேவனின் வீடு:ஒரு குறிப்பு

[ஜெயமோகன் எழுதிய ‘ நவீனத்துவத்திற்கு பின் தமிழ் கவிதை: தேவதேவனை முன்வைத்த’ என்ற நூலில் இருந்து] தேவதேவன் கவிதைகளின் மொழியே அனேகமாக தமிழின் மிக எளிமையான கவிமொழி. அதன் அப்பட்டத் தன்மையும் நேரடியான பாவனையும் நம்மை அயர வைக்கிறது. ஆனால் தமிழில் மிக, மிக குறைவாக உள்வாங்கப் பட்ட கவிஞர்களில் ஒருவர் அவர். காரணம் அவர் பேசும் எந்த விஷயமும் நம்மால் ஏற்கனவே தெளிவாக அடையாளம் காணப் பட்டதோ, பேசப் பட்டதோ அல்ல. அன்றாட வாழ்வுக்கும், அன்றாட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20