Tag Archive: தமிழ் இலக்கியச்சூழல்

வாசிப்பும் எழுத்தும் எதிர்வினையும்

எட்டு வருடங்களுக்கு முன்பு ஒரு குளிர்கால மாலையில் ஊட்டி மலைப்பாதையில் நித்ய சைதன்ய யதியும் நானும் நடந்துகொண்டே பேசிக்கொண்டிருந்தோம். நான் நித்யாவிடம்  சி ஜி யுங் குறித்து அவரது கருத்து என்ன என்றேன். அதை தன் பல நூல்களில் பலவாறாகச்சொல்லியிருப்பதாக அவர் சொன்னார். நான் ஒட்டுமொத்தமாக அவரது கருத்தைக் கேட்டேன். அவர் அதை சொல்வது கஷ்டம் என்றார். பிறகு எதிரே தெரிந்த மலையைக் காட்டி இதன் வடிவம் என்ன என்றார். நான் ஒழுங்கற்ற கூம்பு வடிவம் என்றேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/757

கனிமொழி வணக்கம்

பதினைந்துவருடம் முன்பு சுபமங்களா இதழில் கனிமொழி கருணாநிதி என்ற பேரில் ஒரு கவிதை வெளிவந்தபோது நான் கோமல் சாமிநாதனை அழைத்து ஒரே விஷயத்தைக் கேட்டேன். தன் பெயருடன் தந்தை பேரை இணைத்துத்தான் கனிமொழி அக்கவிதையை அனுப்பினாரா என. ஆம் என்றார். அது ஒரு கவிஞர் ஒருபோதும் செய்யக்கூடிய செயலல்ல. தன் மொழியின் படைப்புத்திறனின் திறனால் மட்டுமே கவனிக்கப்பட விரும்புதலே படைப்பாளிகளின் அடிப்படை இயல்பு. பிற அடையாளங்கள் வைத்து அங்கீகாரம் பெற அவர்கள் விரும்ப மாட்டார்கள். எழுத ஆரம்பித்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/231