Tag Archive: தமிழினி

கடிதங்கள்

அன்புள்ள ஜெ இந்தவருடம் புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். உங்கள் வாசகி நான். முக்கியமாக உங்கள் புத்தகத்தை வாங்கத்தான் போனேன். இந்தப்புத்தகக் கண்காட்சியில் உங்களுடைய ஒரு படம்கூட இல்லை. உங்கள் புத்தகங்களை நான் தமிழினி, உயிர்மை ,நற்றிணை ,கிழக்கு, வம்சி, கயல்கவின் எல்லா பதிபக்கங்களிலும் வாங்கினேன். அவர்கள் எவரெவரோ எழுத்தாளர்களின் படங்களெல்லாம் வைத்திருந்தார்கள். உங்கள் படம் மட்டும் இல்லை. தமிழினியில் கேட்டேன். அவர் எங்க எழுத்தாளர் இல்லை, அவர் புக்கை போடுறோம் அவ்வளவுதான் என்று ஒருவர் சொன்னார். நற்றிணையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71480

வீரகதைப்பாடல்கள்

அன்பு ஜெயமோகன், நலந்தானே. தமிழினியில் இலியட் குறித்த தங்கள் கட்டுரையை வாசித்தேன். ட்ராய் ( பிராட் பிட்) திரைப்படமாகக்  காட்டப்பட்டதை விட உங்கள் மொழிபெயர்ப்பில் நிறைய சாரமிருந்ததாக உணர்கிறேன். தமிழில் உள்ள வீரகதைகள் பற்றிப் பேசவே இந்தக் கடிதத்தை எழுதத் துவங்கினேன். மதுரை வீரன், பொன்னர் சங்கர் பற்றிய பாடல்கள் நிறைய கோவில்களில் இன்றும் பாடப்பட்டு வருகின்றனதானே. ‘மன்னான் சின்னாண்டி கதைப்பாடல்கள்’ என்னும் சிறிய புத்தகத்தை 9 வருடங்களுக்கு முன்பு திருவல்லிக்கேணி சாலையோர பழம்புத்தகங்களிலிருந்து கண்டெடுத்தேன். இன்னமும்  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20582

தமிழினி

‘அன்னா ஹஜாரேவுக்கு இது புதிது அல்ல. அவருடைய போராட்டம் நாற்பது ஆண்டு கால வரலாற்றைக் கொண்டது. தனது சொந்த கிராமத்தை சீர்திருத்தி வளப்படுத்துவதில் தொடங்கிய அவருடைய சமூக, அரசியல் விழிப்புணர்வு போராட்டம் இன்றும் தேசம் தழுவிய ஒரு பெரும் போராட்டமாக வளர்ந்து நிற்கிறது.’ காந்தியம் இன்னும் சாகவில்லை என்ற கட்டுரையில் எம்.கோபாலகிருஷ்ணன் [மணல்கடிகை நாவலாசிரியர்] எழுதுகிறார் தமிழினி பதிப்பகத்தின் வெளியீடான தமிழினி மாத இதழின் இணையப்பதிப்பு இப்போது வெளிவந்துகொண்டிருக்கிறது. தமிழினி பெரும்பாலும் தமிழாய்வுகள், பண்பாட்டாய்வுகளை முன்னிறுத்தும் இதழ் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19858

தமிழினி இணைய இதழ்

தமிழினி புத்தக வெளியீட்டு நிலையம் கடந்த பத்தாண்டுகாலமாக தமிழின் மிக முக்கியமான இலக்கிய மையம். புதிய எழுத்தாளர்களின் புதிய ஆக்கங்களை கண்டடைந்து வெளியிடுவதில் முன்னணியில் நிற்பது. என்னுடைய படைப்புகள் பெரும்பாலும் தமிழினியில் வெளியானவையே. சு வேணுகோபால், சு வெங்கடேசன், கண்மணி குணசேகரன், ராஜ் கௌதமன், ஜோ டி க்ரூஸ் போன்ற பல படைப்பாளிகளை கண்டடைந்து முன்னிறுத்தியது தமிழினி தமிழினி மாத இதழ் மூன்றாண்டுகாலமாக வெளி வருகிறது. பழந்தமிழ் ஆய்வுக்கும் வரலாற்றாய்வுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் இதழ். இப்போது தமிழினி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13485

தமிழினி கட்டுரை

திரு. ஜெயமோகன், வணக்கம். கோபால் ராஜாராமின் மகள் திருமணத்தில், ஹரன் பிரசன்னாவுடன் உங்களைச் சந்தித்திருக்கிறேன். ”பண்பாட்டைப் பேசுதல்” கட்டுரையில் திரு. எஸ். இராமச்சந்திரனின் தமிழினி கட்டுரை பற்றி விரிவாக எழுதியிருப்பதற்கு நன்றி. அக்கட்டுரையை http://www.sishri.org/ramanuja.html என்ற இணைப்பில் படிக்கலாம். இத்தகவல் உங்கள் வாசகர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். நன்றி, ஜி. சாமிநாதன், ஆய்வாளர், South Indian Social History Research Institute Chennai – 600044 வணக்கம் சாமிநாதன் நான் அந்த நிகழ்ச்சியில் உங்கள் பெயரை தவறாக எழுதிவிட்டேன் என்று நினைக்கிறேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3176

தமிழினி ஐந்தாமிதழ்

தமிழினி ஐந்தாம் இதழ் வெளிவந்திருக்கிறது. தனித்தமிழார்வலர்களால் கொண்டாடப்படவேண்டிய இதழ். கொண்டாடியதாக தெரியவரவில்லை. தனித்தமிழின் பலவிதமான சாத்தியக்கூறுகளை நாம் இவ்விதழில் காண்கிறோம். தாசில்தார் சான்றிதழையும் பெயருடன் இணைத்துக் கொண்டுள்ள கரு.ஆறுமுகத்தமிழன் அன்றாட அரசியல் விமரிசனங்களை கலப்பிலா தமிழில் எழுதுகிறார். ராஜ சுந்தரராஜன் [அரச அழகரசன்?] திரை விமரிசனங்களை தூய தமிழில் எழுதுகிறார். தமிழால் எல்லாமே முடியும் என்பதற்கும் ,முடியத்தான் வேண்டுமா என்பதற்கும் ஆதாரம் இவை. ஆனால் இதழின் நிழல் ஆசிரியரான வசந்தகுமார் [ இளவேனில்மைந்தன்?] எழுதுவதேயில்லை. இவ்விதழில் முக்கியமான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/495

தமிழினி இரண்டாமிதழ்

தமிழினி மாத இதழின் இரண்டாவது இலக்கம் வெளிவந்திருக்கிறது. வழக்கமாக சிறு பத்திரிகைகளில் எழுதும் எழுத்தாளர்கள் அதிகமில்லாமல் வேறு ஒரு வகையான எழுத்தாளர்கள் எழுதுவதனால் ஒரு தனித்துவம் தெரியக்கூடிய இதழாக உள்ளது இது. இதழில் சிறப்புக் கட்டுரை என்று குமரிமைந்தன் எழுதிய ‘தமிழன் கண்ட ஆண்டுமுறைகள்’ ஐத்தான் சொல்லவேண்டும். தமிழருக்கு தொன்மையானதும் தனித்துவமானதுமான ஒரு வானியல் இருந்தது என்று விரிவான ஆதாரங்களுடன் வாதிடும் குமரிமைந்தன் அதுவே சித்திரை முதல் எண்ணப்படும் ஆண்டுக்கணக்கு என்கிறார். இந்த வானியலே பின்னர் இந்தியாவெங்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/269

இதழ்களும் மதிப்பீடுகளும்- ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் …..நீங்கள் ஆனந்தவிகடன் குமுதம் போன்ற பெரிய பத்திரிகைகளில் எழுதியிருக்கிறீர்கள். அவை இப்போது நீங்கள் சொல்லும் ethics கொண்டவையா என்ன?… அன்புள்ள சடகோபன் உங்கள் கேள்வி முதல் நோக்கில் தர்க்கப்பூர்வமானவையாகப்படும். ஆனால் தமிழ்ச் சூழலை சற்று அறிந்தவர்களுக்கு இக்கேள்வியே எழாது. விகடனும், குமுதமும் வணிக நிறுவனங்கள். வணிக மதிப்பை மட்டுமே முன்னிறுத்துபவை. அவை எந்த இலக்கிய மதிப்பீட்டையும் முன்வைப்பதில்லை. எல்லா வணிக ஊடகங்களும் அவை எதிர்கொள்ளும் சமூகத்தில் உள்ள எல்லா போக்குகளையும் எப்படியோ பிரதிநிதித்துவப்படுத்தும். குமுதத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/233

தமிழினி மாத இதழ்

பதிப்பகங்களில் தமிழினிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதன் ஆசிரியர் வசந்தகுமாரின் தனிப்பட்ட ரசனையின் தேர்வில் தேறிய படைப்புகளே அதில் நூலாக வெளிவருகின்றன. ஆகவே தமிழினி நூல்கள் மேல் வாசகர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு எப்போதுமுள்ளது. தமிழில் தொடர்ச்சியாக புதிய எழுத்தாளர்களை கண்டெடுப்பதும் அறியப்படாத முக்கியமான எழுத்தாளர்களை மீட்டு முன்னிலைப்படுத்துவதும் தமிழினியின் பணிகளாக எப்போதும் இருந்து வருகின்றன தமிழினி பதிப்பக வெளியீடாக வந்துள்ள ‘தமிழினி’ மாத இதழ் வழக்கமான தமிழ் சிற்றிதழ்களிலிருந்து முற்றாக மாறுபட்ட தடத்தில் இயங்கவிருப்பது தெரிகிறது. தமிழ் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/172