Tag Archive: தமனர்

‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-5

4. கலிமுகம் விடைபெறுவதற்காக முதற்புலரியில் பாண்டவர்களும் திரௌபதியும் தமனரின் குடிலுக்குள் சென்றார்கள். அவர் அப்போதுதான் துயிலெழுந்து முகம் கழுவிக்கொண்டிருந்தார். அவர்களைக் கண்டதும் “இப்பொழுதிலேயா? நீராடி உணவருந்தி கிளம்பலாமே?” என்றார். “நாங்கள் நடந்து செல்லவிருக்கிறோம். பெருங்கோடை. சூரியன் சினப்பதற்குள் பாதி தொலைவைக் கடந்து சோலை ஒன்றை கண்டடைந்துவிடவேண்டும்” என்றார் தருமன். “ஆம், அதுவும் மெய்யே. நான் நடந்து நெடுநாட்களாகின்றது” என்றார் அவர். வணங்கி முறைமைச்சொற்கள் உரைத்து எழுகையில் நகுலன் “நிஷத நாட்டுக்கும் விதர்ப்பத்திற்கும் இடையே பிறிதொரு பூசல்முனை உள்ளது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/98818

‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-4

3. மெய்மைக்கொடி “நிஷதமும் விதர்ப்பமும் ஒருவரை ஒருவர் வெறுத்தும் ஒருவரின்றி ஒருவர் அமையமுடியாத இரு நாடுகள்” என்றார் தமனர். “விந்தியமலையடுக்குகளால் அவை ஆரியவர்த்தத்திலிருந்து பிரிக்கப்பட்டுள்ளன. மகாநதியாலும் தண்டகப்பெருங்காடுகளாலும் தென்னகத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளன. நீண்ட பொது எல்லை. தவிர்க்கவே முடியாத வணிகப்புழக்கம். நிஷதத்தின் காடுகள் பாரதவர்ஷத்தின் எந்த நாட்டையும்விட பன்னிரு மடங்கு மிகையானவை. அவர்களோ காட்டாளரின் வழிவந்தவர்கள். வடக்கே சர்மாவதியின் கரைகளில் இருந்து தெற்கே சென்ற நிஷாதர்களின் முதற்குலம் அவர்கள் என சொல்லொன்று உண்டு. வணிகப்பொருட்களை அளித்து மலைப்பொருட்களை வாங்கிவரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/98810

‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-3

2. பிறிதோன் தமனரின் குருநிலையில் நூலாய்வுக்கும் கல்விக்குமென தனிப்பொழுதுகள் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. அவருடைய நான்கு மாணவர்களும் எப்போதும் அவருடன்தான் இருந்தனர். விழித்திருக்கும் பொழுதெல்லாம் அவர் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அவர் கற்பிப்பதுபோல தோன்றவில்லை. சிலசமயம் நகையாடுவதுபோல, சிலசமயம் கதைகள் சொல்வதுபோல, அவ்வப்போது தனக்குள் என பேசிக்கொள்வதுபோலவே இருந்தது. இரவில் அவர்கள் அவருடைய குடிலிலேயே படுத்துக்கொண்டனர். ஒருவன் விழித்திருக்க பிறர் அவருக்கு பணிவிடை செய்தபின் அவர் துயின்றதும் தாங்களும் துயின்றனர். வேதமுடிபுக் கொள்கை சார்ந்த குருநிலை என்பதனால் வேள்விச்சடங்குகளோ நோன்புகளோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/98782

‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-2

1. குருதிச்சாயல் புலர்காலையில் காலடிச் சாலையின் ஓரமாக கட்டப்பட்டிருந்த வழிவிடுதி ஒன்றிலிருந்து பாண்டவர்களும் திரௌபதியும் கிளம்பினார்கள். முந்தையநாள் இரவு செறிந்த போதுதான் அங்கே வந்துசேர்ந்திருந்தனர். அது அரசமரத்தின் அடியில் கட்டப்பட்டிருந்த சிறிய மரப்பட்டைக்கூரையிடப்பட்ட மண் கட்டடம். வழியருகே அது விதர்ப்ப அரசன் அமைத்த விடுதி என்பதைச் சுட்டும் அறிவிப்புப்பலகை அரசமுத்திரையுடன் அமைந்திருந்தது. செம்மொழியிலும் விதர்ப்பத்தின் கிளைமொழியிலும் எழுதப்பட்டிருந்த அறிவிப்புக்குக் கீழே மொழியறியா வணிகர்களுக்காக குறிவடிவிலும் அச்செய்தி அமைந்திருந்தது. அது ஆளில்லா விடுதி. உயரமற்ற சோர்ந்த மரங்களும் முட்புதர்களும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/98759