Tag Archive: தனசேகர்

மாசாவின் கரங்கள்

பதாகை நடத்திய சிறுகதைப்போட்டியில் நண்பர் தனசேகர் எழுதி மாசாவின் கரங்கள் என்னும் கதை முதல் பரிசு பெற்றிருக்கிறது.நுட்பமாகவும் செறிவாகவும் எழுதப்பட்ட ஒரு பைபிள் கதை. பழைமையான நீதிக்கதைகளின் அழகை அடைந்துள்ளது அது தனசேகர் முன்னரே இந்தத் தளத்தில் புதியவர்களின் கதைகள் என்று வெளியிடப்பட்ட கதைவரிசையில் அறிமுகமானவர் தனசேகர் அறிமுகம் உறவு தனசேகர் எழுதிய கதை உறவு தனசேகர் எழுதியகதைமீதான கடிதங்கள் 1 கடிதங்கள் 2

Permanent link to this article: https://www.jeyamohan.in/79278

உறவு பற்றி…

அன்புள்ள தனா கதை நன்றாக வந்துள்ளது. தாம்பத்தியம் என்பதன் இரு எல்லைகளை அவை ஒன்றுடன் ஒன்று பெரிதாக உரசாமலேயே கதையில் சொல்லியிருக்கிறீர்கள். கதைமாந்தரை விவரிக்காமலேயே காட்டிவிடவும் முடிந்திருக்கிறது. சிறுகதையின் இலக்கணம் அதுதான். அது மெல்லிய தீற்றல்களாக மட்டுமே கதையைச் சொல்ல வற்புறுத்தும் கதைவடிவம். அந்த இலக்கணத்தை மீறவேண்டுமென்றால் ஆழமான ஆன்மீக அலைக்கழிப்புகள் அல்லது அபூர்வமான உணர்வெழுச்சிகள் தேவை. இக்கதை உறவுகளின் பின்னலில் ஓர் ஊடும் பாவும் சந்திக்கும் தருணம் மட்டுமே. ஆகவே ஜப்பானிய மூங்கில் ஓவியங்கள் போல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36339

உறவு -தனசேகர்- மேலும் கடிதங்கள்

அன்புள்ள ஜெ., உறவு கதை படித்தேன்..மிக இயல்பாக ஆரம்பித்து ,உச்சம் அடைந்து பின் வடிவது என..உக்கிரமான காமம் போலே.. மிக நுண்ணிய சடாரென மனதின் ஓர் நரம்பை சுண்டிவிடும் “ஆஸ்பத்திரில குடுத்த மாத்திரைய அங்கனக்குள்ளயே முழுங்கிட்டு சரியாப்போயிரும்லன்னு கேட்டு சிரிக்கிறா.. ’ ஒரு சேர செவிட்டில் அறையும் நிலையாமையும், களங்கமற்ற அன்பின் சாந்தத்தையும் கண்முன்னே காட்சி விரித்தது. வேறன்ன சொல்ல .. இணைய வெளி எங்கும் அனானியாக சுற்றி திரிந்து காறி உமிழ்ந்து கலாய்க்கும் என் தலைமுறையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37975

உறவு,தனசேகர்-கடிதங்கள்

ஜெ, உங்கள் பதிலுக்கு நன்றி. நலமாகவே இருக்கிறேன். உங்கள் தளத்தில் உங்களுக்கு வரும் கடிதங்கள், விவாதங்களைப் படித்துவிட்டு கடிதம் எழுத உட்கார்ந்து பின்னர் தவிர்த்திருக்கிறேன் என்பதே உண்மை. கொஞ்சம் கொஞ்சமாக ஒரு சாமியார் மனோபாவத்திற்கு வந்து கொண்டிருக்கிறேன் என நினைக்கிறேன். வயதாகிக் கொண்டிருக்கிறது பாருங்கள்! :) ஆம்; தனசேகருக்குள் ஒரு முதிர்ச்சியான கதையாசிரியன் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். ‘உறவு’ ஒரு சிக்கலான கதை. ஆனால் அதை அவர் சொன்ன விதம் எனக்குப் பிடித்திருந்தது. கதையைப் படிக்கையில் ஏனோ அடூர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37917

புதியவர்களின் கதைகள் 1, உறவு -தனசேகர்

கையிலிருந்த‌ பெட்டியை எடுத்து வெளியே வைத்துவிட்டு வீட்டின் க‌த‌வைப் பூட்டினேன். பெட்டியைத் தூக்க‌ அது க‌ன‌மாக‌ இல்லை. ஐந்து வருடச் சம்பாத்தியம் க‌ன‌மில்லாம‌ல் இப்பெட்டியில் கிட‌க்கிறது. அவள் சிறுவாடு சேர்த்ததெல்லாம் என்ன செய்தாள் என்று சரியாகத் தெரியவில்லை. சின்னமனூரில் அவுகப்பன் மூலமாக வட்டிக்கு குடுத்திருக்கலாம். ஐநூறு, ஆயிரமென.. அதிகம் போனால் பத்தாயிரத்திற்கு மேல் இருக்காது. ’அதப்பெறக்கி தின்னுட்டு போறா கண்டாரோழி..அந்த மட்டுக்கும் ஒழிஞ்சா செரி’ குளிரில் உடல் வெடவெடத்தது. வாச‌ல் வ‌ழி கீழிற‌ங்கி யூக‌லிப்ட‌ஸ் ம‌ர‌ங்க‌ள் இருப‌க்க‌மும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36328

தனசேகர்

தனசேகர் மதுரை மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்தவர். கணிப்பொறித்துறை ஊழியராக இருந்தார். அப்போது பரீக்‌ஷா ஞாநியின் நாடகக்குழுவில் நடித்து வந்தார். பின்னர் திரைத்துறையில் ஆர்வம் ஏற்பட்டு இப்போது மணிரத்னத்திடம் உதவியாளராக இருக்கிறார். கடல் படத்தின் உதவி இயக்குநர் கதைகள் எழுதியிருக்கிறார்

Permanent link to this article: https://www.jeyamohan.in/36531

நாஞ்சில்நாடன் பாராட்டுவிழா பதிவுகள்

முந்தைய பதிவு திருவண்ணாமலை மூன்றாம் தேதி மதியம் கும்பமுனி சென்னை விஜயம், ஆழ்துயிலில். இரவெல்லாம் இலக்கியம் பேசிய இளைஞர்கள் சிங்கத்தைச் சாய்த்துவிட்டார்கள். பிரதாப் பிளாஸாவில் அறை போட்டோம். மூன்று அறைகள். நானும் முனியும் ஒரே அறையில். நாஞ்சில்நாடன் பெட்டியை திறந்து பொருட்களை எடுத்து விலாவரியாக அடுக்கியபின் சற்றே நிம்மதி அடைந்து ‘என்னத்த ஏற்புரைன்னு இருக்கு ஜெயமோகன். அங்கிண பேசினதையே இங்கிணயும் பேசிப்போடலாம்னு நெனைச்சா அங்க வந்த கும்பலிலே பாதி இங்கயும் வந்திடுது…என்னமாம் தப்பா பேசினா கிருஷ்ணன் வேற கூண்டுலே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11434