Tag Archive: தஞ்சை பிரகாஷ்

‘ஸ்ரீரங்க’வின் ‘முதலில்லாததும் முடிவில்லாததும்’

  மறைந்த தஞ்சை பிரகாஷ் சொன்ன சம்பவம் இது. கொல்லூரில் இருந்து ஹாசன் நோக்கி குடும்பத்துடன் அவர் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது பேருந்தில் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவரிடம் இயல்பாக பேச்சு வளர்ந்தது. பிரகாஷ் அனேகமாக எல்லா இந்திய மொழிகளையும் பேசக் கூடியவர். அம்மனிதர் தன்னை ஓர் இலக்கியவாதி என்று அறிமுகம் செய்து கொண்டார். பெயர் ரங்காச்சாரி. பிரகாஷ் தன்னை ஒரு தமிழ் இலக்கியவாசகர் என்று சொன்னார். தமிழ் இலக்கியம் பற்றித் தனக்கு அதிகமாக தெரியாது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/224/

தஞ்சை பிரகாஷ் -கடிதம்

அன்புள்ள திரு மங்கையர்க்கரசி அவர்களுக்கு, தஞ்சை பிரகாஷ் பற்றி நான் எழுதிய விமர்சனக்குறிப்பைத்தான் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். ஆனால் அதிலுள்ளவை அல்ல நீங்கள் சொல்பவை. தஞ்சைப்பிரகாஷ் அவரது இளமைப்பருவ நோயைப்பற்றியும் அது இயற்கைசிகிழ்ச்சைமுறைப்படி குணமானதைப்பற்றியும் அதன் பின் சிலநாள் அச்சிகிழ்ச்சைமுறையின் உதாரணமாக அவர் சுட்டப்பட்டது பற்றியும் என்னிடம் பல நண்பர்கள் நடுவே நேரில் சொன்னதை மட்டுமே எழுதியிருக்கிறேன். அவரே அவற்றை குறிப்பிட்டும் இருக்கிறார். அவை அவரே சொன்னவை என்பதனாலேயே உங்கள் சொற்களை விட எனக்கு நம்பகமானவை. அவரது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80602/

தஞ்சை பிரகாஷ், ஜி.நாகராஜன், இலக்கியப்பட்டியல்- கடிதங்கள்

அன்பின் ஜெ, நலம் தானே? நான் உங்களுக்கு அலைபேசியில் தெரிவித்தபடி, என் வசம் இருக்கும் மலையாளப் புத்தகங்களின் பட்டியலை விரைவில் அனுப்புகிறேன். ஒரு நாயர் நண்பர் இந்த வார இறுதியில் பெயர் விவரங்களைப் படித்து சொல்ல வருகிறார். உங்களுக்கு வேண்டியதை அனுப்பி வைக்கிறேன். அண்மையில் நாகர்கோவிலைக் கடந்து திருவட்டார் செல்லும் போது உங்களை சந்திக்காமல் வந்தது நான் தவற விட்ட வாய்ப்பு. உள்மனசில் நீங்கள் தான் விஸ்வரூபமாய் இருந்தீர்கள். உள்ளே ஆதிகேசவன் புரண்டுவிடுவாரோ என்று தான் எதிர்பார்த்தேன்! …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79821/

ஜி.நாகராஜன் என்னும் கலைஞன்

ஜெ, உங்கள் தஞ்சை பிரகாஷ் பற்றிய கட்டுரை எனக்கிருந்த குழப்பங்களைத் தீர்த்துவைத்தது. நானும் தஞ்சை பிரகாஷ் எழுதிய இருநாவல்களை வாசித்து என்னது இது என்று நினைத்தவன். ஆனால் இன்னொரு கும்பல் சமீபமாக ஜி.நகாராஜனை போலி என்றும் பாவலா எழுத்தாளர் என்றும் சொல்ல ஆரம்பித்திருக்கிறது. ஜி.என் பற்றி உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன். ஜி.என் பாலியலைத்தான் எழுதினார். அவர் எழுத்து ஏன் நுட்பமானதாக இருக்கிறது என அறிய விரும்புகிறேன், ஏனென்றால் அப்படி முன்னரே சொல்லியிருக்கிறீர்கள். சண்முகம் அன்புள்ள சண்முகம், ஜி.நாகராஜனை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79605/

பாலுணர்வெழுத்து தமிழில்…

ஜெ பாலுணர்வு சார்ந்த எழுத்தில் தஞ்சை பிரகாஷின் இடம் பற்றி எழுதியிருந்தீர்கள். தமிழிலே இதுவரை எழுதியவர்களில் பாலுணர்வு எழுத்தை நுட்பமாகவும் கூர்ந்தும் எழுதியவர்கள் யார் யார் என்று சொல்லமுடியுமா? தஞ்சை பிரகாஷ் பற்றிய உங்கள் கருத்தே எனக்கும். [ஆனால் இந்த பாலுணர்வு எழுத்து என்ற உங்களுடைய கலைச்சொல் தான் எனக்கு சம்மதமாக இல்லை. ஸாரி. ஆனால் புரியவேண்டுமே என்பதற்காக பயன்படுத்துகிறேன்]. சாரங்கன் அன்புள்ள சாரங்கன், தமிழில் பாலுணர்வு எழுத்தை எழுதுவதற்கு பலவகையான மனத்தடைகள் எழுத்தாளரிடமும் வாசகரிடமும் உள்ளன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79580/

தஞ்சை பிரகாஷ் – புனைவுகளும் மனிதரும்

ஜெ சமீபகாலமாக நான் ஆர்வத்துடன் தேடி கண்டுபிடித்து வாசித்த எழுத்தாளர் தஞ்சைப்பிரகாஷ். மிகப்பெரிய ஏமாற்றம். இதுதான் இலக்கியம் என்றால் நான் வாசித்த உலக இலக்கியமெல்லாம் இலக்கியமே இல்லை. டஸ்டயேவ்ஸ்கியும் ஜேம்ஸ் ஜாய்ஸும் எல்லாம் எழுத்தாளர்களே இல்லை. மிகமிக அமெச்சூரான நடை. ஒரு சின்ன விஷயத்தைக்கூட காட்சியாக காட்டவோ நுண்மையாகச் சித்திரிக்கவோ தெரியவில்லை. சொல்லும்முறையில் ஒரு ஒழுங்கோ ஓட்டமோ இல்லை.சும்மா உட்காந்து திண்ணைப்பேச்சு பேசுவதுபோல பேசிக்கொண்டே போகிறது நடை. உள்ளடக்கம் என்றுபார்த்தால் வெறும் daydreams மட்டும்தான். இந்தவகையான கற்பனை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79412/