Tag Archive: தஞ்சை

தஞ்சை கடிதங்கள்

Sir, i happened to read your excellent post on Raja Raja cholan. It was a splendid one. You have neatly presented this article. I have one clarification. How can we conclude that there were slaves during raja raja cholan. How did we decide agri labourers are slaves? What is the diff b/w european slaves and …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9042

தஞ்சை கடிதங்கள்

அனபின் ஜெயமோகன், தங்களுடைய தஞ்சை தரிசனம் 5 கட்டுரையை வாசித்தேன். ஆதித்த கரிகாலன் தொடர்பாக நீங்கள் சற்று விரிவாக எழுதினால் தெளிவு பெறுவேன். கல்கியின் பொன்னியின் செல்வன், பேரா.தி.வை.சதாசிவ பண்டாரத்தாரின் பிற்கால சோழர் சரித்திரம் நூலையே பெரும்பாலும் அடிப்படையாகக் கொண்டது. நீங்கள் கல்கியே பெருமைக்காக உத்தம சோழன் , ஆதித்த கரிகாலனைக் கொலை செய்யவில்லை என எழுதியிருப்பது தவறு. சதாசிவ பண்டாரத்தார் அவ்வாறு எழுதியிருக்கிறார். அதற்கு சில காரணங்களும் கூறியுள்ளார். முதல் காரணம், உத்தம சோழரின் தாயும், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9019

தஞ்சை தரிசனம் – 7

கடைசிநாள் , அக்டோபர் 22. முந்தையநாள் மாலையிலேயே குடந்தைநகர் ஆதிகும்பேஸ்வரர் கோயிலை சென்று பார்த்தோம். தமிழகத்தின் கோயில்நகரங்கள் இரண்டுதான். ஒன்று காஞ்சி இன்னொன்று குடந்தை. இரு நகரங்களிலும் சுற்றுகாக முந்நூறுக்கும் மேல் கோயில்கள் உள்ளன. கும்பகோணத்தில் மிக முக்கியமான கோயில்கள் நான்கு. கும்பேஸ்வரர், சாரங்கபாணி, சக்ரபாணி,ராமசாமி கோயில்கள். புராதனமானது கும்பேஸ்வரர் கோயில் சாரங்கபாணி கோயில் கும்பேஸ்வரர் தமிழில் அமுதேசுவரர் என்றும் குழகர் என்றும் அழைக்கப்படுகிறார். தாயார் மங்களாம்பிகை. கும்பேஸ்வரர் கோயில் லிங்கம் மிகப்புராதனமானது. சிவலிங்கங்களில் பழைமையானவை ஆண்குறி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8963

தஞ்சை தரிசனம் – 6

அக்டோபர் இருபத்தொன்றாம் தேதி காலையில் திருவாரூருக்கு கிளம்பினோம். திருவாரூர் என் மாமனார் இபோது வசிக்கும் ஊர் என்பதனால் எங்கள் வீட்டில் அடிக்கடி பாடல்பெற்ற தலம். மாமனார் வீட்டுக்குச்சென்றால் மகளும் பெற்றோரும் குலாவுவதற்கு வசதியாக நான் வெளிநடப்பு செய்து திருவாரூர் ரதவீதையை சுற்றிவருவேன். எந்த ஒரு நகருக்கும் இப்படிப்பட்ட மாபெரும் ரதவீதியும் குளமும் ஒரு பெரும்கொடையாகவே இருக்கமுடியும். மேலைநாடுகளில் பெரும்பணச்செலவில் இம்மாதிரி அமைப்புகளை உருவாக்குகிறார்கள். ஒருநகரத்தின் மையத்தில் அகன்ற அழகிய திறந்தவெளியும் பொதுவான கலைக்கூடமும் இருப்பதென்பது மக்களின் அகவாழ்க்கைக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8949

தஞ்சை தரிசனம் – 5

அக்டோபர் இருபதாம் தேதி காலையில் கங்கைகொண்ட சோழபுரத்துக்குச் சென்றோம். கங்கைகொண்ட சோழபுரத்துக்கு நான் செல்வது நான்காவது முறை. ஒருமுறை அஜிதனும் நானும் வந்து ஒருநாள்முழுக்க அங்கிருந்தோம். அந்த ஆலயத்தின் வளாகமும் கோயிலின் ஒட்டுமொத்த அமைப்பும் எல்லாமே தஞ்சைபெரியகோயிலை நினைவூட்டுபவை. சில கணங்களில் எங்கே இருக்கிறோம் என்ற குழப்பத்தையே உருவாக்கிவிடக்கூடியவை வீராணம் கரையில் தஞ்சைப் பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளில் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. ராஜராஜசோழன் இறந்ததும் ஆட்சிக்குவந்த அவர் மகன் ராஜேந்திரசோழன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8940

தஞ்சை தரிசனம் – 4

அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி காலை ஓய்விடத்தில் இருந்து தாராசுரத்துக்கு கிளம்பினோம். தாராசுரத்துக்கு நான் முதன்முதலாக 1986ல் வந்தேன். அப்போது குடந்தையில் இருந்து அங்கே செல்ல ஒழுங்கான பாதையே கிடையாது. புதர்கள் அடர்ந்த மண்சாலை வழியாக ஆட்டோவில்செல்லவேண்டும். இப்போது நல்ல தார்ச்சாலை வந்துவிட்டது. ஆனாலும் அது சிற்றூர்தான் பழங்காலத்தில் குடந்தை நகரின் ஒருபகுதியும் தாரசுரமும் பட்டீஸ்வரமும் இன்னும் சில கிராமங்களும் இணைந்து பழையாறை என்று அழைக்கப்பட்டன. நீண்ட வரலாறு கொண்ட ஒரு நகரம் அது. சோழர்காலத்திலேயே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8927

தஞ்சை தரிசனம் – 3

அக்டோபர் 18, காலை தஞ்சை விடுதியில் இருந்து கிளம்பி தஞ்சை பெரியகோயிலைப் பார்க்கச்சென்றோம். இந்தவருடம் ஆயிரமாவது பிறந்தவருடத்தைக் கொண்டாடும் இந்த கலைப்பொக்கிஷம் ஓர் அபூர்வமான பாடலைப்போல மீண்டும் மீண்டும் பார்க்கத்தக்கது. எத்தனை முறைப்பார்த்தாலும் கண்முன் மீண்டும் புதிதாக நிகழ்ந்துகொண்டே இருப்பது. நான் 1981ல் ஊரைவிட்டு ஓடிவந்து முதன்முறையாக இதைப்பார்த்தபோது சொல்லவிந்து அப்படியே நின்றிருக்கிறேன். பிரம்மாண்டமான அமைப்புகளில் பேரழகு கைகூடுவதென்பது மிக அபூர்வமான ஒரு சாத்தியக்கூறு. ஒழுங்கும் முழுமையும் அத்தகைய பெரும் அமைப்புகளில் எளிதில் சாத்தியமாவதில்லை. ஏனென்றால் மனிதன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8914

தஞ்சை தரிசனம் – 2

மதியம் புதுக்கோட்டைக்கு வந்து ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு விடுதி ஒன்றை அமர்த்திக்கொண்டோம். வெயிலில் அலைந்ததற்கு குளிர்சாதனம்செய்த அறை உடனடியாக தூக்கத்தை கொண்டு வந்தது. நான்கு மணிக்கு எழுந்து கொண்டு குளித்துவிட்டு திருமயம் கோட்டையைப்பார்க்கச் சென்றோம். தமிழகத்தில் எஞ்சியிருக்கும் தொன்மையான கோட்டைகளில் ஒன்று இது. சாலையே கோட்டைக்குள் சென்றுதான் மதுரைக்குப்போகிறது. உயரமான கோட்டைமதில் சேதமடைந்து நிற்கிறது. சில இடங்களில் அதில் சுண்ணாம்பு பூசி சரிசெய்திருக்கிறார்கள். பழைய கோட்டைக்கு மேல் மேலும்கட்டி உயரமாக்கப்பட்டு துப்பாக்கிசுடும் புழைகளுடன் செய்யப்பட்டிருக்கிறது. ராமநாதபுரம் சேதுபதி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8907

தஞ்சை தரிசனம் – 1

அக்டோபர் 16 அதிகாலை ஐந்தரை மணிக்கு அரசுப்பேருந்தில் திருச்சி வந்துசேர்ந்தேன். இப்போதெல்லாம் பேருந்துப்பயணம் எனக்கு திகில் பயணமாக ஆகிவிட்டிருக்கிறது. பயணங்களில் தூங்குவது வரை தாகமும் சிறுநீர் முட்டலுமாக அவஸ்தை. ஆகவே முந்தையநாள் இரவே அதிகமாக தூங்காமல், பகல்தூக்கத்தையும் ரத்துசெய்துவிட்டு, பேருந்தில் ஏறினேன். பத்துமணிக்கெல்லாம் நல்ல தூக்கம் வந்துவிட்டது. உள்ளூர சிந்தனை ஓடிக்கொண்டிருப்பதுபோல இருந்தது. அரைத்துக்கம் ஒருவகை போதைநிலை. காலையில் திருச்சி. நண்பர் இருவரும் அங்கே வந்திருந்தார்கள். நான் ஆட்டோவில் நண்பர்கள் ஓட்டலுக்குசெ சென்று என் அறையில் அரைமணிநேரம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8901

தஞ்சைத் தரிசனம்

இன்று இரவு பேருந்தில் திருச்சி செல்கிறேன். அங்கே ஒரு முக்கியமான திரையுலக நட்சத்திரமும் நானும் ’சும்மா’ தஞ்சையை ஒருவாரம் சுற்றிப்பார்க்கப்போகிறோம். முதலில் திருச்சி அங்கிருந்து புதுக்கோட்டை வழியாக தஞ்சை சென்று கும்பகோணம் சென்று திரும்புவேன். நாளை கொடும்பாளூர், நார்த்தாமலை செல்ல திட்டம். அங்கிருந்து புதுக்கோட்டை சென்று தங்குவோம். புதுக்கோட்டை அருகே திருமயம் கோட்டை, சித்தன்ன வாசல். இவ்விரு பகுதிகளில் நாங்கள் தவறவிடக்கூடாத முக்கியமான வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் ஏதேனும் உண்டா? ஜெ

Permanent link to this article: https://www.jeyamohan.in/8790