Tag Archive: டி.டி.கோசாம்பி

அயோத்திதாசரின் மாற்றுப்புராண அழகியல்

இந்தியாவின் பண்பாட்டின் நெடுங்கால உறைநிலை கலங்கி புரண்ட ஒரு காலகட்டம் என்று பதினெட்டாம் நூற்றாண்டைச் சொல்லலாம். இங்கே இருந்த புராணமரபை வெளியே நின்று பார்க்கக்கூடிய ஒரு பார்வையை ஐரோப்பியர்கள் நமக்களித்தனர். அக்காலகட்டத்தில் ஐரோப்பிய தாக்கத்துடன் இந்தியச்சூழலில் எழுந்துவந்த நவீனச் சிந்தனையாளர்கள் அனைவரிடமும் புராணங்களை நிராகரிக்கக் கூடிய குரலை நாம் பார்க்கமுடியும். உதாரணமாக சுப்ரமணிய பாரதி புராணங்களைப்பற்றிச் சொல்லும்போது கடலினைத் தாண்டும் குரங்கும்–வெங் கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும், வடமலை தாழ்ந்ததனாலே–தெற்கில் வந்து சமன்செய்யும் குட்டை முனியும் நதியி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68373

வரலாற்றை வாசிப்பதன் விதிகள்

அன்புள்ள ஜெயமோகன், “வரலாற்றெழுத்தின் வரையறைகள்” படித்தேன். உங்களின் சினமும், ஆதங்கமும் புரிந்து கொள்ளக் கூடியதே. கடந்த அறுபது ஆண்டுகளில் தமிழகம் துதிபாடிகளையும், அறிவீனர்களையும் சிம்மாசனத்தில் அமர்த்தி வளர்த்து விட்டுவிட்டது. அவர்களின் வழி வந்தவர்கள் செய்யும் “ஆராய்ச்சி” எப்படி இருக்கும் என்பதனைச் சொல்ல வேண்டியதில்லை. நம் தலையெழுத்து அப்படி. நீங்கள் கூறும் தகவல்களிலிருந்து சிறிது மாறுபட்டு, வேளாளர்கள் பற்றிய நான் படித்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். பூர்வ வேளாளர்கள் கண்ணணின் வழிவந்தவர்கள் என்றும், அவர்கள் துவாரகையிலிருந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61262

வரலாற்றெழுத்தின் வரையறைகள் 1

நாம் வரலாற்றை எப்படி எழுதிக்கொள்கிறோம்? நான் எழுதிய ‘ஈராறு கால்கொண்டெழும் புரவி’ குறுநாவலில் ஒரு காட்சி வரும். ஓரு சித்தர் ஞானமுத்தன் என்ற விவசாயியை ஒரு ஒரு மலைவிளிம்பில் நிறுத்தி அவனிடம் கீழே பார்க்கச் சொல்வார் ‘மண் மீதுள்ள வாழ்க்கை என்பது நீரின் ஒரு தோற்றம் மட்டும்தான்’ என்பார். ஞானமுத்தன் குழம்புவான். சட்டென்று அவன் கால்நழுவ அவன் அள்ளி எதையோ பிடித்துக்கொண்டு தப்புவான். அந்த அதிர்ச்சிக்கணத்தில் அவன் ஒருகணத்தில் எல்லாவற்றையும் உணர்ந்துகொள்வான் அவன் கீழே பார்ப்பான். விரிந்துகிடக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/43394

இந்துமதம்,சம்ஸ்கிருதம்,பிராமணர்

அன்பின் ஜெ. சமஸ்கிருதம் குறித்தான உங்கள் பதிவைப் படித்தேன். “சமஸ்கிருதம் ஒரு பொதுவான மொழி. இந்தியாவின் ஏன் உலகின் அனைத்து இந்துக் கோவில்களிலும் பொதுமைக்காக சமஸ்கிருத வழிபாடு செய்யப்படுகிறது. அய்யப்பன் கோவிலில் சமஸ்கிருதம் வந்தபின்புதான் அனைவரும் அங்கு வந்து வழிபாடு செய்கிறார்கள்” என்கிறீர்கள். இந்து மதம் பொதுவாகவே பொதுமைக்கு எதிரானது என்பதை இன்றும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் உட்பட பல கோவில்களில் ‘அந்நிய மதத்தினர் பிரவேசிக்கக் கூடாது’ என்று எழுதி வைக்கப்பட்டுள்ள பலகைகள் மூலம் அறியலாம். அவ்வளவு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22567