Tag Archive: டி.ஆர்.நாகராஜ்

காந்தி, அம்பேத்கர் அருந்ததி ராய்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். மேற்கண்ட தலைப்பில் ‘கீற்று’ தளத்தில் எழுத்தாளர்: அருந்ததி ராய் அவர்கள் “பிராஸ்பெக்ட்” ( Prospect )ஆங்கில மாத இதழில் India’s shame(இந்தியாவின் இழிவு) என்ற தலைப்பில் எழுதிய ஆங்கிலக்கட்டுரையின் தமிழ் வடிவை படித்தேன்.இந்தியாவின் வர்ணாசிரம அமைப்பையும்,சாதிகளையும் குழப்பி எழுதி இருக்கிறார்.இதோடு போதாது என்று காந்திஜி அவர்களை பற்றியும் இந்த விசயத்தில் குறை கூறியிருக்கிறார். சாதி அமைப்பைக் காட்டிலும் தரந்தாழ்ந்த ஒரு சமுதாய அமைப்பு இருக்க முடியாது என்றார் அம்பேத்கர். ‘உதவும் செயல்களில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66760

காந்தியும் தலித்துக்களும்

மிகையான எளிமைப்படுத்துதலின் சாத்தியம் இருந்தாலும், காந்தியமும் இந்திய மார்க்சியமும் தலித்துகளின் பிரச்சனைகளை நிலம் மற்றும் அற மதிப்பீடு சார்ந்தே எதிர்கொள்கின்றன என்பதே என் வாதம். இவை ஒன்றையொன்று சாராமல் தனித்து இருக்கவில்லை டி.ஆர்.நாகராஜ் எழுதிய கட்டுரை. காந்தி டுடே இணைய இதழில்

Permanent link to this article: https://www.jeyamohan.in/63046

அண்ணா ஹசாரே- ஒரு கடிதம்

ஐயங்களும், அவநம்பிக்கைகளும், சந்தேகங்களும் எழும் இச்சமயத்தில் சிலவற்றைப் பகிர விரும்புகிறேன். ‘ வரலாற்றின் மயக்கும் வசீகரம் என்னவென்றால் அது பாதி கோணமே முழுமையான கோணம் என்று நம்மை நம்ப வைத்து செயல்படுவதற்கான உணர்வெழுச்சியை அளிக்கிறது என்பதே. முழுமையான பார்வைக்காகக் காத்திருக்கும் ஒருவர் செயல்படப்போவதேயில்லை. வரலாற்றில் குதிக்கப்போவதுமில்லை. இங்கேதான் வரலாற்றின் விடுதலை வாய்ப்புகள் உள்ளன. பாபா சாகேப் அவர்களும் பாபுவும் அத்தகைய படைப்பூக்கம் கொண்ட பொறுமையின்மையுடன் வரலாற்றில் குதித்தனர். மோதிக்கொண்டனர். படைப்பூக்கம் கொண்ட பொறுமையின்மை அடைந்தவர்களுக்கு மகாசமாதிநிலை என்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19995

டி.ஆர்.நாகராஜ்,குகா-அர்விந்துடன் உரையாடல்

அன்புள்ள ஜெ:தமிழாக்கத்திற்கு நன்றி. டி.ஆர்.நாகராஜின் பத்தியை ஆங்கிலத்தில் கொடுத்தற்கு மன்னிக்கவும். நானே தமிழில் மொழிபெயர்த்திருக்க வேண்டும். ஆனால் அப்பொழுது இருந்த மனநிலையில் முடியவில்லை).டி.ஆர்.நாகராஜ் எழுதிய அந்தப் பத்தியில் , ”முழுமையான பார்வைக்காக காத்திருக்கும் ஒருவர் செயல்படப்போவதேயில்லை. வரலாற்றில் குதிக்கப்போவதுமில்லை”, என்ற வாக்கியம் கூர்மையானது.வரலாறு மட்டும் அன்றி அனைத்து துறைகளுக்கும் இது பொருத்தமானது என்று எனக்குத் தோன்றுகிறது. உதாரணமாக, கணிப்பொறி மற்றும் சாஃப்ட்வேர் துறைகள் மெல்ல மெல்ல பொறியியலில் இருந்து வடிவமைப்பு (design) முறைமை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3156