Tag Archive: ஞானி

அசிங்கமான மார்க்ஸியம்

திருவாளர் ஜெ, எரிக் ஹாப்ஸ்பாம் பற்றிய உங்களுடைய கட்டுரையை வாசித்தேன். தெளிவான மொழியிலே உங்களால் எழுத முடிகிறதென்பதனை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் எதற்காக எழுதுகிறீர்கள்? இன்றைக்கு ஹாப்ஸ்பாமை முன் வைப்பதன் வழியாக நீங்கள் என்ன சாதிக்க நினைக்கிறீர்கள்? நீங்கள் மர்க்ஸிய சிந்தனைகளை கூர்ந்து வாசிக்கிறீர்கள் என்று இங்குள்ள மார்க்ஸியர்கள் நம்பவேண்டும் என்பது மட்டும்தானே உங்கள் நோக்கம் இல்லையா? மற்றபடி இதுவரை இங்குள்ள மார்க்ஸிய சிந்தனையாளர்களை நீங்கள் எந்த அளவுக்குப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்? அவர்களை எப்போதாவது பேசியிருக்கிறீர்களா? …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22768

பின்நவீனத்துவம் -விளையாட்டுக்கையேடு

பின்நவீனத்துவம் என்பது பொதுவாக ஒரு மிரட்டுவதற்குரிய சொல்லாகவே இங்கே அறிமுகமாகியது. அதை அன்றைய சூழலை அறிந்து , அது உருவான பினன்ணியைப் புரிந்துகொண்டு பேசாமல் சிக்கலான மொழியாக்க நடையில் எழுதப்பட்ட நீள்கட்டுரைகள் வழியாகவும் தூக்கிவீசும் ஒற்றை வரி விமர்சனங்கள் வழியாகவும் முன்வைத்தார்கள். அன்று இணையம் போன்ற தொடர்புவசதிகள் இல்லாதிருந்தமையால் நூல்களும் பெயர்களும் மிரட்சி அளிப்பவையாக இருந்தன. ஒரு தேனீர்க்கோப்பைப் புயலாக அது நிகழ்ந்து முடிந்தது காரணம் முதன்மையாக இங்கே நவீனத்துவம் சார்ந்த விவாதங்களே அதுவரை பெரியதாக நிகழவில்லை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74687

கடிதங்கள்

ஜெ , உண்மையில் இத்தைகைய ஒரு பகடி (அ) ஒப்புதல் வாக்கு மூலத்திற்காக நான் காத்திருந்தேன் எனலாம். இந்த சுய /பிற பாராட்டுகள் மேல் உங்களுக்கு இருக்கும் மோகம் குறித்து விமர்சிக்கும் நோக்கில் ஏற்கனவே நான் ஒரு கேள்வியோ கடிதமோ எழுதியதாக ஞாபகம். தோற்றாலும் சில இடங்களை பட்டவர்த்தனமாக பொதுவெளியில் தொட்டு விட்டுவது உயர்ந்த செயல். //…..ஞானி தவிர// வரியை மிக ரசித்தேன். வெண் முரசு எழுதுவதன் வழி இதுபோன்ற பல உயர்மதிபீடுகளை அடைய எனது ஆசீர்வாதங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73851

மின்தமிழ் பேட்டி -1

[சி சரவணக் கார்த்திகேயன் ஆசிரியத்துவத்தில் வெளிவந்துகொண்டிருக்கும் மின்தமிழ் இதழில் வெளியான பேட்டி] 1. நீங்கள் எழுத வந்து 30 ஆண்டுகள் பூர்த்தியாகப் போகிறது. இன்று சமகாலத் தமிழ் எழுத்தாளர்களில் உச்சபட்ச ஸ்தானம். எப்படி உணர்கிறீர்கள்? இந்த நீண்ட பயணம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? எழுத்தில் சாதித்து விட்டதாகத் தோன்றுகிறதா? பதில். எழுதவந்து 30 ஆண்டுகள் என்று சொல்வதைவிட அறியப்பட்டு முப்பதாண்டுக்காலம் என்று சொல்லலாம் என்று தோன்றுகிறது. நான் எழுத ஆரம்பித்தது எழுத்துக்கள் தெரிந்த நாளில் இருந்தேதான். என் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69816

கவிஞனும் ஞானியும்

அன்புள்ள ஜெ.மோ, “குருவின் உறவு”  பற்றிய உங்கள் கட்டுரையில் துறவு பற்றி  நீங்கள் எழுதியிருப்பது சம்பந்தமாக ஒரு கேள்வி எழுகிறது. தன் பகவத் கீதை மொழி பெயர்ப்பின் முன்னுரையில் மகாகவி பாரதி இல்லறத்தின் வழியாகவும் ஞானம் அடையலாம் என்பது தனக்குப் பெரிய ஆறுதலாயிற்று என்று கொள்ளும் பெருமூச்சு என்னை எப்போதும் வியக்க வைக்கிறது. அந்தப் பெருமூச்சு ஏன்? “ஒளி வகை ஒரு கோடி கண்டவர்” என்று பாரதி பற்றி தி.ந.ராமச்சந்திரன் கூறுவார். பாரதி ஞான அநுபூதி பெற்றவர் என்பது எத்தனை அளவு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6300

கனவுபூமியும் கால்தளையும்

சம்சாரத்தைப்பற்றிய ஏராளமான இந்திய, ஜப்பானிய கதைகளில் ஒன்றில் நாரதர் மாயை என்றால் என்ன என்று பெருமாளிடம் கேட்கிறார். பெருமாள் ஒரு வீட்டைக்காட்டி அங்கே சென்று ஒரு செம்பு தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு வா என்கிறார். தண்ணீர் கொண்டுவருபவள் ஒரு பேரழகி. நாரதர் அவளிடம் காதல்வயப்பட்டு, அவள் குடும்பத்தினரிடம் போராடி திருமணம் செய்துகொண்டு, குழந்தைகள் பெற்றுக்கொண்டு, அவர்களை வளர்த்து ஆளாக்கி திருமணம்செய்து வைத்து, பேரன் பேத்திகள் எடுத்து வாழ்ந்துகொண்டிருக்கும்போது பெருமாள் திரும்பி வரும்படி அழைக்கிறார். ‘இதோ என் கொள்ளுப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21056

கடிதங்கள்

அன்புள்ள ஜெ., “ஏதோ ஒருவகையில் உலக இலக்கியத்தில் நான் தேடிக்கண்டடையும் எழுத்தாளர்கள் எல்லாருமே தத்துவ-ஆன்மிக சாராம்சம் கொண்டவர்கள். அவர்களையே மேலே வாசிக்கிறேன். சமீபகாலமாக ஒரு ஆசிரியர் முக்கியமானவர் பிரபலமானவர் என்பதற்காக வாசிப்பதில்லை. ” தத்துவ, ஆன்மீக நோக்கு எதில் இருந்து மீட்பு அளிக்கிறதோ இல்லையோ… காலம் மற்றும் பிராபல்யம் சார்ந்த ரசனையில் இருந்து மிகப் பெறும் விடுதலை அளிக்கிறது. லியோ டால்ஸ்டாய்- ஐயும் புதுமைப்பித்தனையும் ஜெயமோகனையும், ஒரே நேரத்தில் ரசிக்கும் மனோபாவத்தை அளித்த ஒரே காரணத்திற்காக இந்தப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8663

கேணி, கடிதங்கள்

வணக்கம், நான் விழியன். சென்னையில் வசிக்கிறேன். உங்களின் அறிமுகம் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நண்பர்கள் மூலம் கிடைத்தது. உங்களின் அனேக புத்தகங்களை வாங்கி வைத்துள்ளேன். குறுநாவல் தொகுப்பில் சில படைப்புகளை மட்டும் படிக்க முடிந்தது. அதன் பின்னர் ஏனோ உங்கள் எழுத்துக்குள் செல்ல முடியவில்லை. பல முறை முயன்றேன். புதுமைபித்தனின் எழுத்துக்களும் அப்படி தான் இருந்தது. ஏழு வருடங்கள் முன்னர் அவர் படைப்புகளை எடுத்தேன் உள்ளே நுழைய முடியவில்லை. கால் உடைந்து கட்டிலில் படுத்த நாட்களில் வெகு அழகாய் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6584

ஞாநி

சென்னைக்கு பிப்ரவரி 3 சனிக்கிழமை காலை வந்துசேர்ந்தேன். நண்பர்கள் ராஜகோபாலனும் தனசேகரும் வந்திருந்தார்கள். சிறப்பு அதிவேக ரயில் எல்லா இடத்திலும் நின்று அலுப்புடன் யப்பா முருகா என்னபப்னே என்றெல்லாம் முனகியபின் ஊர்ந்து கிளம்பி சென்னை வ்ந்துசேர்வதற்கு காலை எட்டரை ஆகிவிட்டிருந்தது. அவர்கள் என்னிடம் மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கும்படிச் சொல்லியிருந்தார்கள். மாம்பலம் வருவதற்கு முன்னாலேயே குப்பைமலைகள் நடுவே ரயில் நிற்க அதன் விலாவிலிருந்து ஜனங்கள் உதிர்ந்து ஊர்ந்து செல்வதைக் கண்டேன். கிளம்பிய ரயில் மாம்பலம் ரயில் நிலையத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6571

கேணி கூட்டம்

இன்று மதியம் முன்றரை மணிக்கு சென்னையில் ஞாநி அவர்கள் நடத்தும் கேனி இலக்கியக் கூட்டத்தில் கலந்துகொள்கிறேன். என்னுடைய நூல்கள் இங்கே விற்பனைக்கும் வைக்கபப்டும் என்று ஞாநி குறிப்பிட்டிருக்கிறார் பிப்ரவரி 14 [இரண்டாவது ஞாயிறு] அன்று நிகழ்ச்சி. நேரம் மதியம் 3.30 “14 ஞாயிறு மதியம் சரியாக 3.30க்குநிகழ்ச்சியைத்தொடங்கி 6.30க்கு முடிப்போம். முதலில் உங்கள் பேச்சு, பின்னர் கலந்துரையாடல். பொதுவாக சர்ச்சைகள், அக்கப்போர்கள் முதலியவற்றை அனுமதிப்பதில்லை. இலக்கியம், சமூகம் சார்ந்து பேசவே பார்வையாளரை ஊக்குவிக்கிறோம்.  எந்தத்துறை பற்றியும் கேள்விகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6542

Older posts «