Tag Archive: ஞானம்

பசியாகி வரும் ஞானம்

அன்புள்ள நண்பர்களே, இப்போது உங்கள் முன் நிற்கும்போது பல ஆயிரம் கிலோமீட்டர் அப்பால் இருக்கும் என்னுடைய தேசத்தை நான் நினைத்துக்கொள்கிறேன். கைக்குழந்தைகள் தாயைப்பிரிந்து நிம்மதியிழந்திருக்கையில் தாயின் பழைய சேலை ஒன்றை அதனருகே போடுவார்கள். அந்த வாசனை அதை அமைதிப்படுத்தும். அந்த புடவை போல இப்போது நமது மொழி இருக்கிறது.  அது நம் தாய் நாட்டின் வாசனையைப்போல் இருக்கிறது. பலகோடி மக்கள் வாழும் ஒரு மாபெரும் தேசம். பல ஆயிரம் கிலோமீட்டர் விரிந்து கிடக்கும் மாபெரும் நிலப்பரப்பு. பலநூறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3837

எழுத்தாளனின் ஞானம்

அன்புள்ள ஜெயமோகன் சார்,நலமா? “எந்த எழுத்தாளனும் தன் படைப்பூக்கத்தின் உச்சநிலையில் அவன் ஞானியர் தொடும் உச்சியைத் தானும் தொடுகிறான். ஆனால் உடனே திரும்பி வந்து சாதாரண மனிதனாக வாழவும் செய்கிறான். சாதாரண மனிதனாக அவனிருக்கையில் தன் படைப்பூக்க நிலையின் உச்சிகள் அவனை பிரமிப்படையச்செய்கின்றன. ஆனால் அந்த ஆளுமையைத் தன்னுடையதாக அவனால் கொள்ள முடிவதில்லை, அது அவனைவிட பிரம்மாண்டமானதாக இருக்கிறது. அதைத் துறக்கவும் அவனால் முடிவதில்லை, ஏனென்றால் அது அவன் என்பதும் உண்மை. ஆகவே முடிவில்லாத ஒரு ஊசலாட்டத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62307

அதிர்வு – கடிதங்கள்

அன்புள்ள ஜெ, அண்மையில் வீட்டு விழாவுக்காக இரு இயேசு படங்களை வாங்க நகரின் முக்கிய கிறித்துவ வெளியீடுகளை விற்கும் கடை ஒன்றிற்குச் சென்றேன். ஒரு படம் செபம் செய்யும் இடத்துக்கும் ஒன்று வரவேற்பறையிலும் மாட்ட‌. வரவேற்பறையில் இயேசு குழந்தைகளுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதைப் போன்றோ அல்லது மேய்ப்ப‌ராக‌ இருப்ப‌தைப்போன்றோ ஒரு படம் மாட்டிக்கொள்ள எனக்கு ஆசை. புன்னகைக்கும் இயேசுவின் படம் ஒரு அபாரமான அனுபவத்தை எனக்கு அளிக்கிறது. அது ஞான இயேசு என்று நான் கருதுகிறேன். ஆனால் அப்படி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26962

ஹனீபா-கடிதம்

அருமை ஜெயமோகனுக்கு சென்ற மாதம் உங்களைக்காண வந்த நாள் என் வாழ்வில் பரவசம் மிகுந்த ஒரு காலை.எம்.எஸ்சும் நானும் அண்ணனும் தம்பியும் போல் உங்களைத்தேடி அந்த வீதியில் நடந்து வந்த அந்தத் தருணம் அலாதியானது.நினைந்து நினைந்து மனசு ஒவ்வொரு தருணமும் களி கொண்டாடுகிறது. இருபது வருடங்களுக்கு முதல் உங்களது கதையைக் கணையாழியில் படித்து தருமபுரி விலாசத்திற்குக் கடிதம் போட்டேன். அதற்கான பதிலை சென்ற மாதம்தான் என்னால் அடைய முடிந்தது. எமது சூழலில் இலக்கியம் என்பது மிகவும் மலினப்படுத்தப்பட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20355