Tag Archive: ஞானபீட விருது

ஞானபீட விருதுகள்

2009 ஆம் வருடத்துக்கான பாரதிய ஞானபீட விருது இந்தி எழுத்தாளர் ஸ்ரீலால்சுக்லாவிற்கும் அமர்காந்துக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலால் சுக்லாவின் ராக் தர்பாரி என்ற நாவல் தமிழில் ‘தர்பாரி ராகம்’ என்ற பேரில் மொழியாக்கம் செய்யப்பட்டுக் கிடைக்கிறது. அதைப்பற்றிய விமர்சனம் ஒன்றை நான் இருபது இந்திய நாவல்களைப்பற்றிய என்னுடைய நூலான ‘கண்ணீரைப் பின் தொடர்த’லில் எழுதியிருக்கிறேன். இணையத்திலும் உள்ளது. [ஸ்ரீலால் சுக்லாவின் தர்பாரி ராகம்]     சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்திய அரசியல், சமூகவாழ்க்கையைப்பற்றிய மிகக்கூரிய அங்கதம் வெளிப்படும் நாவல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21132

ஓ.என்.வி.குறுப்புக்கு ஞானபீடம்

இவ்வருடத்தைய ஞானபீட விருது மலையாளக்கவிஞர் ஓ.எ.வேலுக்குறுப்புக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஓர் இலக்கிய விமர்சகனாகவும் வாசகனாகவும் முற்றிலும் தகுதியற்ற ஓரு விருது என்றே இதைச் சொல்வேன். தேசிய அளவில் ஒரு நல்ல கவிஞராக அறியப்படவோ, கேரளக்கவிதையின் முகமாக குறிப்பிடப்படவோ அருகதை இல்லாத ஒரு மேலோட்டமான கவிஞர் அவர். ஓ.என்.விக்குக் கிடைத்திருக்கும் இந்த விருது எல்லா வகையிலும் துரதிருஷ்டவசமானது. ஓ.எ.வி ஒரு மோசமான கவிஞர் அல்ல. கண்டிப்பாக மலையாளக் கவிதையின் விரிந்த பரப்பில் அவருக்கான இடம் உண்டு. அபாரமான மொழித்திறன் கொண்டவ்ர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8328