Tag Archive: ஞானக்கூத்தன்

அப்துல் ரகுமான் – பவள விழா

வானம்பாடி இயக்கத்தின் முதன்மைக் கவிஞர்களில் ஒருவரான அப்துல் ரகுமான் அவர்களுக்கு இன்றும் நாளையுமாக சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் பவளவிழா கொண்டாடப்படுகிறது. கவிக்கோ கருவூலம் என்னும் நூலும் வெளியிடப்படுகிறது. அதற்கான அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றேன் கவிஞர் என்பதுடன் அரசியல் பிரமுகர் என்னும் அடையாளமும் கொண்டிருப்பதனால் மிகப்பெரிய விழாவாக இது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மு.கருணாநிதி உட்பட முக்கியமான அரசியல்வாதிகளும் மனுஷ்யபுத்திரன் போன்ற இலக்கியவாதிகளும் பங்குகொள்கிறார்கள் . நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துக்கள். தமிழ்ப்புதுக்கவிதை இயக்கம் ஒன்றுக்கும் மேற்பட்ட முன்னுதாரணங்களைக் கொண்டு உருவானது. முன்னோடிகளாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80118

இலைமேல் எழுத்து- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், நண்பர் கெ.பி. வினோத் (உங்களுக்கு நண்பரென்றால் அவர் எனக்கும் நண்பரே!) கவிஞர் ஞானக்கூத்தனைக் குறித்து எடுத்த ஆவணப்படத்தை உங்கள் தளத்தில் பார்த்தேன். சமீபத்தில், அதுவும் தமிழில், சந்தேகமில்லாமல் நான் பார்த்த மிகச் சிறந்த ஆவணப்படங்களில் ஒன்று இது. ஆற்றொழுக்காக, எந்த விதமான அனாவசிய சலனங்களுமின்றி, எடுக்கப்படும் பொருளை மட்டுமே மையமாக வைத்து தயாரிக்கப்படும் ஆவணப்படங்கள் தமிழில் அரிதினும் அரிது. நான் இதுவரை பார்த்த தமிழ் ஆவணப்படங்கள் அத்தனையுமே வெற்றுக் கூச்சலும், இரைச்சலும் கொண்டவை. ஜெயகாந்தனைக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73696

இலைமேல் எழுத்தின் கலை

[கெ.பி.வினோத்] ஜெ கே.பி.வினோத் எடுத்திருக்கும் இலைமேல் எழுத்து ஞானக்கூத்தன் மீதான ஆவணப்படம் எடுத்தேன். 40 நிமிடங்கள் செறிவான அழகிய அனுபவமாக அமைந்தது. ஞானக்கூத்தனின் வீட்டுச்சூழல், அலுவலகச்சூழல், அவரது நண்பர்கள், வாழ்க்கை எல்லாமே மிகச்சீராக அமைக்கப்பட்டிருந்தன. அவரைப்பற்றிய இலக்கிய விமர்சனக்குறிப்புகளும் சிறப்பாக இருந்தன. 40 நிமிடத்தில் இத்தனையையும் சொல்ல சினிமாவால்தான் முடியும் கடைசியில அவரது கவிதை படமாக்கப்பட்டிருக்கும் விதம் அருமை. அதில் ஒரு மனிதமுகம்கூட வராமல் பார்த்துக்கொண்டிருப்பதில்தான் இயக்குநரின் நுட்பமான அழகுணர்ச்சி உள்ளது. இரண்டு இடங்கள் மேலும் முக்கியமானவை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73607

இலைமேல் எழுத்து

ஞானக்கூத்தனுக்கு 2014 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டதை ஒட்டி எடுக்கப்பட்ட ‘இலைமேல் எழுத்து; என்ற ஆவணப்படம். சா கந்தசாமி, ந.முத்துசாமி, தேவதேவன், கமலஹாசன், மனுஷ்யபுத்திரன், அழகியசிங்கர், சாம்ராஜ் என பல்வேறு ஆளுமைகளின் கருத்துக்களுடன் ஞானக்கூத்தனின் உலகம் குறித்து ஓர் ஆய்வு எழுத்து, ஒளிப்பதிவு, இயக்கம் கே.பி.வினோத் இயக்கம். தயாரிப்பு விஜி பாலா.

Permanent link to this article: https://www.jeyamohan.in/73460

ஞானக்கூத்தன் பற்றி- பாவண்ணன்

ஞானக்கூத்தன் கவிதைகள் – சத்தியத்தைத் தேடும் பயணம் கடந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் தோன்றிய முக்கியமான தமிழ்க்கவிஞர் பாரதியார். சொல்ஜாலங்களையும் சிலேடை விளையாட்டுகளையும் உவமைச்சேர்க்கைகளையும் முன்வைப்பர்களை கவிஞர் என்று கொண்டாடிக்கொண்டிருந்த கவிராயர்களுக்கு நடுவில் ஒரு காட்டுயானையைப்போல வந்து நின்றவர் பாரதியார். வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா, கண்ணி, சிந்து என அவர் கையாளாத பாவகைகளே இல்லை. ஒவ்வொரு வடிவத்துக்கும் தன் சொற்களால் புது ரத்தத்தைச் செலுத்தினார் அவர். அவர் எழுதிய கவிதைகளில் ஒவ்வொரு சொல்லும் ஓர் அம்புபோலப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68861

ஞானக்கூத்தன் பற்றி இசை

உன்னதங்களின் பொந்திற்குள் புகுந்துவிளையாடும் எலிக்குஞ்சு [ஞானக்கூத்தன் கவிதைகளை முன்வைத்து .. ] 2000 க்கு பிறகு தமிழ்கவிதைகளுக்குள் நிகழ்ந்த பெருவிளையாட்டுக்களுக்கு ஒரு விதத்தில் சி.மணி, ஞானக்கூத்தன் ஆகியோர் துவக்கப்புள்ளிகள். ஞானக்கூத்தனின் விளையாட்டு சி.மணியைக்காட்டிலும் வெளிப்படையானதும் எளிமையானதுமாகும். மரபின் காதும் நவீன மனமும் கொண்டவை என ஞானக்கூத்தன் கவிதைகளைச் சொல்லலாம்.இவரின் சில கவிதைகள் தனிப்பாடல் திரட்டின் கவிதைகளை நமக்கு நினைவூட்டுபவை. ஆனால் பல தனிப்பாடல்களுக்கு கவிதை அந்தஸ்து கிடையாது. அவை வெற்றுவிளையாட்டுகள். ஞானக்கூத்தன் கவிதைகளில் உள்ளது ”விளையாட்டு பாவனை”. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68854

குழந்தையின் கண்கள்

ஒருமுறை சாதாரணமான உரையாடலில் புனைவெழுத்தாளர் ஒருவர் சொன்னார், ‘நான் உவமைகளே எழுதுவதில்லை. ஏனென்றால் உலகில் உவமைகள் முடிந்துவிட்டன’ கொஞ்சநேரம் மயான அமைதி. ஒருவர் ஈனஸ்வரத்தில் “எப்ப?’ என்றார். புனைவெழுத்தாளர் சீறி “மனுஷன் உண்டான நால்முதல் கவிதைன்னு என்னத்தையோ சொல்லிட்டோ எழுதிட்டோதான் இருக்கான். கவிதைன்னா உவமைதான். எல்லாத்தையும் சொல்லி முடிச்சாச்சு. இனிமே சொல்றதுக்கு ஒண்ணுமில்லை’ ‘நமக்குத்தெரியாம எங்கியாவது புதுசா உவமைகள் உண்டாகி வரலாமில்லியா?’ என்றார் இலக்கியம் அறியாத நண்பர் இலக்கியமறிந்தவரும் நக்கல் பேர்வழியுமான நண்பர் “ உலகத்திலே இதுவரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68718

விஷ்ணுபுரம் விழா பங்கேற்பாளர்கள், சந்திப்புகள்

மலையாளக் கவிஞர், நாவலாசிரியர் டி.பி.ராஜீவன். முதன்மையான மலையாளப்படைப்பாளியாகிய ராஜீவன் கறாரான உணர்ச்சி வெளிப்பாடு, அங்கத நோக்கு கொண்ட எழுத்துக்களுக்காக அறியப்பட்டவர். நெடுங்காலமாக எனக்கும் நண்பர்களுக்கும் அறிமுகமானவர். குருநித்யா ஆய்வரங்கு நிகழ்த்திய தமிழ்-மலையாள கவிதை உரையாடல் அரங்குகளில் அனேகமாக அனைத்திலும் கலந்துகொண்டிருக்கிறார். ராஜீவனின் இருபதுக்கும் மேற்பட்ட கவிதைகள் தமிழில் என்னால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன டி பி ராஜீவன் கவிதைகள் வாசிக்க ஞானக்கூத்தனின் நண்பரும், மாயவரத்தைச் சேர்ந்தவருமான சா.கந்தசாமி தமிழின் நவீனத்துவ எழுத்துமுறையின் முன்னோடி. ‘கதையில் இருந்து கதையை வெளியேற்றுவதே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68633

பெருமாளும் நடராசரும்

அன்பு ஜெ, ஞானக்கூத்தனின் வீட்டு புகைப்படத்தைப்பார்த்ததும் அவரின் இன்னொரு பகடியும் நினைவுக்கு வந்து சிரிப்பை அடக்க முடியவில்லை! காரணம் அவர் வீட்டு அலமாரியில் இன்றைக்கும் கூட பக்கத்திலிருக்கும் பாட்டில்களை தவறி இடறி விடாமல் இடைவிடாது ஆடிக்கொண்டிருக்கும் நடராஜர். ஏற்கனவே உங்களின் சிறந்த கவிதைகளின் பரிந்துரையில் உள்ளதுதான். ஒருவேளை நடராஜரே இதைபடித்துப்பார்த்தாலும் சிரித்துவிடுவார்: இருப்பிடம் இமயமோ சித்சபையோ இல்லையென்றாலும் சூழ்ந்தவை பூத கணங்கள் இல்லையென்றாலும் எடுத்த பொற்பாதத்தின் அருகே கழுத்து நீண்ட எண்ணெய்ப் புட்டியைத் தவறியும் இடறி விடாமல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68268

ராஜா சந்திரசேகர்- ஞானக்கூத்தன் ஆவணப்படம்

ஜெ, உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறேன். எனது நண்பர் கவிஞர், இயக்குநர் ராஜா சந்திரசேகர் அவர்கள் எனக்கு இந்த ஆவணப்பட உருவாக்கத்தில் பெருமளவு உதவியிருக்கிறார். ஞானக்கூத்தன் சாரின் சிறந்த வாசகர் அவர். ஞானக்கூத்தன் பற்றிய ஆவணப்படமென்பதால் அவரது வேலைகளுக்கிடையேயும் தொடர்ந்து தொழில்நுட்ப ஆலோசனைகள் தந்து கொண்டிருந்தார். படத்தொகுப்பாளர், இசையமைப்பாளர் மற்றும் ஸ்டுடியோ எனக்கு அறிமுகம் செய்துவைத்து பெரிய அளவில் உதவினார். இவரது ஈடுபாடு இல்லையென்றால் படம் இத்தனை சிறப்பாக வந்திருக்காது. அவருக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68558

Older posts «