Tag Archive: ஞாநி

மூன்று வேட்பாளர்கள்

வரவிருக்கும் மக்களவைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மூன்று முக்கியமான வேட்பாளர்கள் போட்டியிடலாமென சொல்லப்படுகிறது. அரசியல் சிந்தனையாளரான ஞாநி, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராளியான சுப.உதயகுமார் , அவரது போராட்டத்தோழர் மை.பா.ஜேசுராஜ் ஆகியோர். தேர்தல் சார்ந்த எந்த விவாதங்களிலும் ஈடுபடவேண்டாமென்றிருக்கிறேன். என் கவனம் இப்போது அதில் இல்லை. வெண்முரசு மட்டும்தான் என் உலகம். அக்கவனம் திசைதிரும்பினால் நான் மீண்டு வருவதும் கடினம். ஆனால் இந்த தேர்தல் போட்டியைப்பற்றி சொல்லாமலிருக்க முடியாது. ஞாநி, சுப.உதயகுமார் இருவரையும் நான் நெடுங்காலமாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/47662

ஞாநியும் பரதேசியும்

ஞாநி பரதேசி பற்றி எழுதியிருந்ததை ஒரு நண்பர் அனுப்பி வைத்திருந்தார். சினிமா பற்றிய எந்த விவாதத்தையும் நடத்தவேண்டாமென்பதே என் முடிவு. ஆனல் இந்த விஷயத்தில் சிலவற்றைச் சொல்லியே ஆகவேண்டும். இது சினிமாபற்றியது அல்ல. இந்த ஞாநி வகையறாக்கள் ஊடகங்களில் உருவாக்கும் புழுதி பற்றியது. ஞாநி முன்பு கடல் வெளிவரவிருந்தபோது இதேபோன்ற உச்சகட்ட வெறுப்பைக்கொட்டி எழுதியிருந்தார். ஊடகவியலாளன் என்றால் அவன் உக்கிரமாக வசைபாடவேண்டும் என்ற மனச்சிக்கலின் விளைவு என்ற எண்ணம் மட்டுமே அப்போது எனக்கிருந்தது. இல்லை, இது இணையம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35407

ஞாநி- ஒரு கடிதம்

அன்புள்ள திரு ஜெ, பலவிதமாக, மனதுக்குள் எண்ணங்கள் ஓடினாலும், அவற்றின் வேகத்தை, பயிற்சியின்மை காரணமாக எழுத்தில் கொண்டு வரும்போது எழுதிய எனக்கே மிகுந்த அதிருப்தியாகத் தான் எப்பொழுதும் இருக்கும். மேலும் என்ன சிக்கல் என்றால், சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்காமல், மனம் முந்திக் கொள்வதால் ‘வசை’ என்று எளிதில் வகைப் படுத்தி விடப்படக் கூடிய அபாயமும் இதில் உண்டு. எனவேதான் பல கடிதங்கள்(உங்களுக்கு மட்டுமல்லாமல்) சில கட்டுரைகள் முடிக்கப்படாமல் இன்னும் எனது கணினியிலேயே தங்கி விட்டிருக்கின்றன. ஆனாலும் ஞாநி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/28673

சோ-அண்ணா ஹசாரே-ஒரு கடிதம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, தங்களுடைய இணைய தளத்தில், அண்ணா ஹஸாரே, ஞாநி, சோ என்ற தலைப்பிலான கட்டுரையைக் கண்டேன். http://www.jeyamohan.in/?p=19834 கொஞ்சம் வருத்தம் அடைந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். திரு. ஞாநி பற்றி நான் அறிந்தவன் அல்ல. அவருடைய ஓ பக்கங்களைத் தவிர அவருடைய எழுத்துக்களையோ, கருத்துக்களையோ படித்தவன் அல்ல. எனவே அவரைக் குறித்த உங்கள் கருத்துக்களுக்கு என்னிடம் எந்த எதிர் கருத்துக்களும் இல்லை. ஆனால் சோ விஷயத்தில் வேறுபடுகிறேன். அவருடைய கருத்துக்களைத் துக்ளக்கிலும், வேறு பல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/28671

ஞாநி பற்றி…

அன்புள்ள ஜெயமோகன், நீங்கள் ஞாநியின் ‘நேர்மை’ பற்றி எழுதியிருந்ததை வாசித்தேன். மிகுந்த மனவருத்தம் அடைந்தேன். அவர் சமீபத்தில் இளையராஜா பற்றி அவதூறாக எழுதியிருந்தது தெரியுமா? அதற்குப் பலர் ஆதாரபூர்வமாக பதிலளித்தும் அதன்பின்னரும் கூட அவர் தன்னுடைய எண்ணங்களை மாற்றிக்கொள்ளவில்லை. இதுதானா நேர்மை? இளையராஜா பற்றி உயர்வாக எழுதிவரும் நீங்கள் இந்த விஷயத்தில் பதில் சொல்வீர்கள் என்று நான் எதிர்பார்த்தேன். இப்போது உங்கள் நேர்மையும் தெரிகிறது. சரவணன் மெய்யப்பன் அன்புள்ள சரவணன், உங்கள் கடிதத்தில் சொல்லும் விஷயங்களை நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/28252

அண்ணா ஹசாரே-கடிதங்கள்

ஞாநியின் நேர்மை பத்தி பேச உங்களுக்கு யோக்யத இல்ல Mr.ஜெயமோகன் . அந்த அளவுக்கு நீங்க இன்னும் வளரல . தயவு செய்து உங்க கருத்துக்கு மறுப்பு எழுதுங்க அல்லது ஞாநியிடம் மன்னிப்பு கேளுங்க இல்ல நீங்க வாழ்வில் நினைத்த இலக்கை அடையவே முடியாது …..சத்தியமா…….. இப்படிக்கு திருநெல்வேலியில் இருந்து ஒரு பாமரன் . madhavan M Dear Jeyamohan sir, I made up my mind to write you someday for quiet …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20013

அண்ணா ஹசாரே, ஞாநி, சோ

அன்புள்ள ஜெ, அன்னா ஹசாரேயின் போராட்டத்தைப்பற்றிய சர்ச்சைகளில் ஞாநி போன்ற அறிவுஜீவிகள் தொலைக்காட்சியில் வந்து அது ஒரு போலிப்போராட்டம் என்று வாதிடுகிறார்கள். லோக்பால் மசோதாவுக்கான தேவையே கிடையாது, இப்போதிருக்கும் சட்டங்களே போதுமானது என்று சொல்கிறார்கள். ஞாநி இப்போதே இருக்கும் சட்டத்தைக்கொண்டுதான் கனிமொழியையும் ஆ.ராசாவையும் சிறையில் அடைத்திருக்கிறார்கள் என்றார். அன்னா ஹசாரேயின் கூட இருப்பவர்களெல்லாரும் வட இந்தியர்கள் , மராட்டியர்கள் என்கிறார்கள். லோக்பால் அமைப்புக்காக அன்னா முன்வைக்கும் பட்டியலில் தமிழர்கள் இல்லை என்று சொன்னார். அதே கருத்தைத்தான் சோவும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19834

நாஞ்சில்நாடன் பாராட்டுவிழா பதிவுகள்

முந்தைய பதிவு திருவண்ணாமலை மூன்றாம் தேதி மதியம் கும்பமுனி சென்னை விஜயம், ஆழ்துயிலில். இரவெல்லாம் இலக்கியம் பேசிய இளைஞர்கள் சிங்கத்தைச் சாய்த்துவிட்டார்கள். பிரதாப் பிளாஸாவில் அறை போட்டோம். மூன்று அறைகள். நானும் முனியும் ஒரே அறையில். நாஞ்சில்நாடன் பெட்டியை திறந்து பொருட்களை எடுத்து விலாவரியாக அடுக்கியபின் சற்றே நிம்மதி அடைந்து ‘என்னத்த ஏற்புரைன்னு இருக்கு ஜெயமோகன். அங்கிண பேசினதையே இங்கிணயும் பேசிப்போடலாம்னு நெனைச்சா அங்க வந்த கும்பலிலே பாதி இங்கயும் வந்திடுது…என்னமாம் தப்பா பேசினா கிருஷ்ணன் வேற கூண்டுலே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11434

அமெரிக்காவில் ஞாநி

ஞாநி இந்த வேன்டுகோளை முன்வைத்திருக்கிரார் ஜூன் 15 வாக்கில் நண்பர் அருளின் அழைப்பை ஏற்று அமெரிக்காவில் ஒஹையோவுக்கு வருகிறேன். அவருடன் ஜூன் 30 வரை இருந்து அருகில் உள்ள நகரங்களுக்கும் செல்ல உத்தேசம்.அமெரிக்காவில் இருக்கும் இதர பகுதிகளுக்கு அங்குள்ளவர்கள் அழைத்து என் பயணச் செலவையும் உணவு இருப்பிடப் பொறுப்பையும் ஏற்றால், ஜூலை15 அல்லது 20 வரை சுற்றத் தயார். தொடர்புக்கு: [email protected] அன்புடன் ஞாநி

Permanent link to this article: https://www.jeyamohan.in/7269

ஞாநியின் இரு நாடகங்கள்

பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு ஞாநி மொழி மாற்றம் செய்திருக்கும் இரு நாடகங்கள் மே 2 ஞாயிறு அன்று நுங்கம்பாக்கம் அலையன்ஸ் பிரான்சே அரங்கில் நிகழ உள்ளன.

Permanent link to this article: https://www.jeyamohan.in/7220

» Newer posts