Tag Archive: ஜோ. டி. குருஸ்

ஜோ டி குரூஸுக்கு சாகித்ய அக்காதமி

2013 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அக்காதமி விருது கொற்கை நாவலுக்காக ஜோ டி குரூஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆழிசூழ் உலகு நாவல் மூலம் தமிழ்வாசகர்கள் நடுவே கவனிக்கப்பட்டவர் ஜோ. தமிழின் மீனவ மக்களின் வாழ்க்கையை எழுதிய முதல் மீனவர் அவர். எழுதப்படாத வாழ்க்கைகளை எழுதும் நவீன தமிழிலக்கியப்போக்கு கண்டடைந்த மிகச்சிறந்த வெற்றி என்பது அவரது இருநாவல்கள்தான் நண்பர் ஜோ டி க்ரூஸுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்   இணைப்புகள் கடலறிந்தவையெல்லாம்- ஜோ டி க்ரூஸின் ஆழிசூழ் உலகு ஆழிசூழ் உலகு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/43327

ஓராயிரம் கண்கள் கொண்டு

நாவலைப் படித்தபின் எனக்கு முதலில் தோன்றிய எண்ணம் இந்த நாவலை இருவர் எழுதியிருக்கிறார்கள் என்பதுதான். ஒன்று ஜோ எனும் படித்த மீனவ இளைஞர், களப்பணியாளர், ஆய்வாளர், இன்னொருவர் டி. குருசா எனும் மீனவ கிராமத்துக் கிழவி. கொஞ்சம் கற்பனை செய்தால் அவளைக் கண்கள் முன் கொண்டுவந்துவிடலாம். ஓலைக் குடிசையின் கீழ் அமர்ந்து கொண்டு, இடித்து இடித்துக் குழிவிழுந்த ஒரு கல்லில் மழுங்கிப்போன இன்னொரு கல்லை வைத்து, கல்லைப் பல்லாக்கி செக்கச் செவேலென வெற்றிலையை இடித்துக்கொண்டே, கதை கேட்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22384

ஆழிசூழ் உலகு- நவீன்

தமிழின் முக்கியமான இலக்கிய ஆக்கங்களில் ஒன்றான ஆழிசூழ் உலகு வெளிவந்து ஐந்தாண்டுகள் ஆகின்றன. அதன் இரண்டாம் பதிப்பும் விற்று முடியும் நிலையில் உள்ளது. இந்நாவல் இன்று தமிழின் தேர்ந்த வாசகர்களால் ஓர் இலக்கிய சாதனையாக ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்டது. தமிழில் இது ஓர் அற்புதம். தமிழில் வருடம் தோறும் இவ்வாறு வெளி வரும் பல நூல்களில் சில மட்டும் இலக்கிய அங்கீகாரம் பெறுகின்றன. நிலை நிற்கின்றன. ஆனால் தமிழ்ச் சிற்றிதழ்களிலும், இந்தியா டுடே போன்ற இதழ்களிலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16807

கொற்கை: ஆர். என். ஜோ டி குரூஸ்

வரலாற்றின் கலை வடிவம் —          அரவிந்தன்   ‘காலம்’. இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். ஆயிரத்துச் சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அளவில் மட்டுமின்றி, தான் தழுவி நிற்கும் காலம், இடம் சார்ந்தும் மாபெரும் நாவலாக  வெளிப்பட்டிருக்கிறது. ‘ஆழிசூழ் உலகு’ என்னும் தன் முதல் நாவலின்மூலம் சூழலில் கவனம் பெற்ற ஆர்.என். ஜோ டி குரூஸின் இரண்டாம் நாவல் இது.  நூறாண்டுக்கும் மேற்பட்ட காலவெளியில் பயணம் செய்யும் இந்த நாவல், கடல்சார் பரதவர் சமூகத்தின் மாற்றத்தைச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5641