Tag Archive: ஜோதிடம்

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 42

பகுதி ஏழு : கலிங்கபுரி [ 6 ] “தந்தையும் தாயும் நம் பிறப்பால் நாமடையும் குருநாதர்கள். அனல், ஆத்மா, ஆசிரியன் மூவரும் நாம் கண்டடையவேண்டிய குருநாதர்கள். குருநாதர்கள் வழியாகவே ஞானம் முழுமையடையமுடியும். ஏனென்றால் மானுடஞானம் என்று ஒன்று இல்லை. அது இயற்கையிலுள்ள விலங்குகள் புழுபூச்சிகள் உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கிய மெய்ஞானமே. அந்தமெய்ஞானமோ ஏழுலகிலுமுள்ள ஞானங்களின் சிறுபகுதி. ஏழுலகங்கள் பிரம்மத்தின் துளிக்கணங்கள். மானுடஞானம் என்பது துமி. உயிர்களின் ஞானமென்பது துளி. பிரம்மாண்ட ஞானம் என்பது அலை. பிரம்மஞானமென்பதே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57446

சோதிடம் ஆன்மீகம்:கடிதங்கள்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,ஆன்மீகம், சோதிடம், தியானம் என்ற கட்டுரையையும் அதன் மறுமொழியாக வந்த கடிதங்களையும் கண்டேன்.ஓர் ஜோதிஷாச்சாரியன் எனும் நிலையில் சில கருத்துக்களை சொல்ல விரும்புகிறேன். நீங்கள் ஜோதிடத்தை தவறான முறையில் சரியாக புரிந்துகொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு மறுமொழியிட்டவர்களோ சரியாக புரிந்துகொண்டோம் என தவறு செய்திருக்கிறார்கள்.நமது தென்மாநிலங்களில் ஆண்ட கழகங்களினால் ஜோதிடம் எனும் சிந்தாந்தத்தை அனைவரும் தெரிந்திருக்கும் வாய்ப்பை இழந்து விட்டோம். மருத்துவரிடம் செல்லும் பொழுது நமக்கு மருத்துவம் மீதோ, மருத்துவர் மீதோ தவறான நம்பிக்கைகள் இருப்பதில்லை. ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1237