Tag Archive: ஜேஷ்டா

சேட்டை

புதுமைப்பித்தனின் முடிவடையாத நாவலான சிற்றன்னையில் பேராசிரியர் சுந்தர மூர்த்தி மறுமணம் செய்துகொள்ளும்போது முதல் தாரத்துக் குழந்தை சிற்றன்னையை அக்கா என்று கூப்பிடுகிறது. ‘அக்கா என்று சொல்லக்கூடாது சித்தி என்று சொல்லவேண்டும்’ என்று கண்டிக்கிறார் பேராசிரியர். பின்னர் ஒருநாள் சித்திக்கும் குழந்தை குஞ்சுவுக்கும் பூசல் வருகிறது. பூனையை தூக்கி மேலே போட்டுவிடுவேன் என்று கடுமையாகப் பயமுறுத்துகிறாள் சித்தி. குஞ்சு கடும் துவேஷத்துடன் ”அக்கா” என்று சித்தியைச் சொல்கிறாள் ”சொல்லுவியா அப்டி சொல்லுவியா?” என்று கேட்டு கமலம் கடுமையாகப் பயமுறுத்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/735