Tag Archive: ஜேசுதாஸ்

பதிப்புரிமையும் ராஜாவும்

அன்புள்ள ஜெ, இளையராஜாவின் பாடல்களுக்கான உரிமைக்காப்பை அவர் கோருவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அதையொட்டி அவர்மேல் கொட்டப்பட்ட வசைகளை பார்க்கிறீர்களா? இப்போது அந்த உரிமையில் பெரும்பகுதியை அவர் இசைக்கலைஞர்களுக்கே அளிக்கும்போதுகூட அது ஒரு சூழ்ச்சி என்றே எழுதிக்கொண்டிருக்கிறார்கள். மிகவும் மனம்வருந்தச்செய்த நிகழ்வு இது டி.ராஜ்குமார் அன்புள்ள ராஜ்குமார், இந்தப்பிரச்சினை சில காலம் முன்பு கேரளத்தில் ஜேசுதாஸ் அவர்கள் அவர் பாடிய பாடல்களுக்கான உரிமையைக் கோரியபோது தொடங்கியது. அவரை அங்கும் வசைபாடித்தள்ளினார்கள். அதற்கு பல நியாயங்கள் சொல்லப்பட்டன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115803

ஏன் சில குறிப்புகள்?

நாலைந்து நாட்களுக்கு முன் ஒரு நாளிதழ் நிருபர் கூப்பிட்டார். ‘சார் பகவத்கீதை தேசியப் புனித நூல்னு சொல்றாங்களே உங்க கருத்து என்ன?’ .இளவயது நிருபர், ஆகவே அவரது தொழிலை மறுக்க விரும்பவில்லை. அதோடு என்னைப்போல கீதையை அதிகமாகப் பேசிக்கொண்டிருக்கக் கூடிய ஒருவன் பதில் சொல்லியாகவேண்டிய கேள்வி அது. ஆகவே நான் பதில் சொன்னேன். நிறுத்தி, நிதானமாக. அந்தப்பதில்தான் இணையத்தில் பிரசுரமனாது. கீதை இந்து ஞானமரபுக்கு ஒட்டுமொத்தமாகப் புனிதநூல் அல்ல என்றும். மதச்சார்பற்ற தன்மையால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு இத்தகைய மதநோக்குள்ள அறிவிப்புகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/67072

உறைகாலம்

1973ல் அச்சாணி என்ற மலையாளப்படம் வெளிவந்தது. மேலும் மூன்றுவருடம் கழித்து நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது அந்தப்படத்தை அருமனை திரையரங்கில் பார்த்தேன். பிரேம் நசீரும் ,சுதீரும், சுஜாதாவும் நடித்தபடம். ஏ.வின்செண்ட் இயக்கியது. மலையாளத்தின் செவ்வியல் திரைப்படங்களில் ஒன்று. அச்சாணிபடத்தின் பாடல்கள் எல்லாமே அந்தக்காலத்தில் மிக மிகப்பிரபலம். ‘ மல்லிகா பாணன் தன்றே வில்லொடிச்சு, மந்தார மலர்கொண்டு சரம் தொடுத்து’ ’சமயமாம் நதி’ போன்ற பாடல்கள். ஆனால் அன்றும் இத்தனை வருடங்கள் கழித்து இன்றும் மலையாள திரையிசையில் ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22809