Tag Archive: ஜெய்சால்மர்

பாலைவன நிலவு

வைக்கம் முகமது பஷீரின் சிறுகதை ஒன்றில் ஓர் அனுபவம். பாலைவனத்தில் தனியாக அகப்பட்டுக்கொள்கிறார் பஷீர். ஜெய்சால்மரில். முழுநிலவு எழுகிறது .அகன்ற பால் அலைப் பெருவெளியில் ஆரஞ்சுநிற நிலவு !மிகப்பெரியது, கனிந்தது .பஷீர் அழுகிறார் ‘அல்லா உன் கருணையை தாங்க எனக்கு ஆற்றல் இல்லை! உன் மகத்துவத்தை அள்ள என்னிடம் கலம் இல்லை! எளிய புழு நான் !எனக்குரியவை வளைகள்’ என தப்பி ஓடுகிறார் அந்த நிகழ்ச்சியை நினைவூட்டியது எம் டி எம் எழுதிய இக்கட்டுரை. ஜெய்சால்மரில், அஜ்மீரில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/60950

அருகர்களின் பாதை 25 – லொதுர்வா, ஜெய்சால்மர்

இன்று சாம் மணல்மேடு முக்கியமான ஒரு சுற்றுலாத்தலம். ராஜஸ்தான் பாலைவனம் என்பது வறண்ட கட்டாந்தரை மேல் முளைத்த உயரமற்ற முட்செடிகள் மட்டும் கொண்டது. நம் ராமநாதபுரம் பொட்டல்களை நினைவுறுத்துவது. மண், வெளிர்சிவப்பு நிறத்தில் ஆற்றுவண்டல் உலர்ந்து மணலாக ஆனதுபோல் இருக்கும். மணல்குன்றுகள் அவ்வப்போது வரும். அலையலையாக செம்பட்டை குவித்துப்போட்டதுபோல. மணற்பகுதிகளில் சாலையோரம் அமைந்த பெரிய மணற்பரப்பு சாம் மணல்வெளி. அதைச்சுற்றி பாலைவனத்தில் வெண்ணிறமான கூடாரங்களை ‘ப’ வடிவில் அமைத்து சுற்றும் வேலியிட்டுக் காவலர் நிறுத்தித் தங்குமிடம் ஏற்பாடுசெய்திருந்தார்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/24811

அருகர்களின் பாதை 24 – ஜெய்சால்மர், சாம் மணல் திட்டு

ஜோத்பூரில் இருந்து எல்லா ஏற்பாடுகளையும் முடித்துவிட்டுப் பாலைவனப்பயணத்தைத் தொடங்கலாமென முடிவெடுத்தோம். ஏனென்றால் ஜெய்சால்மர் முந்நூறு கிமீ தூரத்தில் இருந்தது. அதுவரை பாலைவனம்தான். சாலையில் எந்தச் சிக்கலையும் சந்திக்க விரும்பவில்லை. எங்கள் சக்கரங்களில் ஒன்று பலமுறை ஒட்டுப் போட்டுப் பழுதாகிவிட்டது. ஒன்று ஏற்கனவே கந்தல். ஆகவே புதியதாக ஒரு சக்கரம் வாங்கினோம். ஒரு காற்றுக்குழாய் புதியதாக வாங்கி உபரி சக்கரத்துக்கு மாட்டினோம். எல்லாம் செய்துமுடிக்க மதியம் பன்னிரண்டு மணி ஆகிவிட்டது. ராஜஸ்தானில் எல்லாக் கடைகளும் பத்து அல்லது பதினொரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/24778