Tag Archive: ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்

கேள்வி பதில் – 47

Enid Blyton புத்தகங்களுக்கும் Mills and Boon நாவல்களுக்கும் இடையிலான புத்தகங்கள் எப்படிப்பட்டதாக இருக்கும். தான் படிக்கும் புத்தகங்களைத் தானே தெரிவு செய்து படிக்கும் என் மகள் அதன் அடுத்தக் கட்டத்தை அவளே அடைவாளா, நான் அறிமுகப்படுத்த வேண்டுமா? நான் அறிமுகப்படுத்துவது என்னைத் திணிப்பது போலாகாதா? — ஜெயஸ்ரீ கோவிந்தராஜன். மேலேசொன்ன முதிராப் பருவப் படைப்புகள் அடிப்படையில் இலக்கிய ஆக்கத்தின் இரு முக்கியக் கருக்களை கையாள்கின்றன அல்லவா? எனிட் ப்ளைட்டன் எல்லைகளை மீறி புதிய தளங்களுக்குச் செல்ல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/103

கேள்வி பதில் – 45, 46

உங்கள் படைப்புகளை வாசகப் பார்வையோடு திரும்பப் பார்க்கிறீர்களா? உங்கள் படைப்புகளை முதலில் படிப்பவர் யார்? அவர் கருத்துகளுக்காக எதையாவது மாற்றியிருக்கிறீர்களா? எனில் அது அந்த ‘X‘ க்குச் சம்மதமான படைப்பாகிவிடாதா? — ஜெயஸ்ரீ கோவிந்தராஜன். கனவை மீண்டும் எண்ணிக் கொள்ளாதவர்கள் உண்டா என்ன? தன்னுள்ளே இருந்து வந்ததாயினும் கனவு தானல்ல என அனைவரும் அறிவார்கள். என் படைப்புகளை நான் மீண்டும் மீண்டும் படிப்பதுண்டு. சில பகுதிகளைக் குறிப்பாக. காரணம் அவை எழுதியவனுக்கே ஆழமான அனுபவத்தை புதிய விஷயங்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102

கேள்வி பதில் – 44

விமர்சகன், அவனே ஒரு படைப்பாளியாகவும் இருக்கும்பட்சத்தில் ஏதாவது ஒரு இடத்திலாவது அவனுக்கு சார்புநிலை வந்துவிடாதா? படித்த படைப்புகளோடு ஒப்பு நோக்கவேண்டிய வாசகப்பார்வை போய் எழுத்தாளன் எட்டிப்பார்த்து, தான் படைத்த படைப்புகளோடு, தன் படைப்புத் திறமையோடு ஒப்புநோக்கினால், அந்தப் படைப்புக்கான மதிப்பீட்டுக் கணக்கு தவறாதா? — ஜெயஸ்ரீ கோவிந்தராஜன். திறனாய்வாளன் யாராக இருந்தாலும் சார்புநிலை இருக்கும். சொல்லப்போனால் தன் சார்புநிலையையே அவன் வெளிப்படுத்துகிறான். அதுவே அவனது தனிப்பட்ட பார்வைக்கோணமாகும். முற்றிலும் புறவயமான ஓராய்வு அல்லது மதிப்பீடு இயல்வதேயில்லை. அப்படியானால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/101

கேள்வி பதில் – 43

எதையுமே படைக்காமல், கர்நாடக இசைக்கு சுப்புடு போல், தமிழ் இலக்கியத்தில், விமர்சகர்களாக மட்டும் அறியப்பட்டு எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தியவர்கள், எழுத்தாளர்களால் பெரிதும் பயப்படப்படுகிறவர்கள்/மதிக்கப்படுபவர்கள் யாராவது இருக்கிறார்களா? — ஜெயஸ்ரீ கோவிந்தராஜன். வெங்கட் சாமிநாதன், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி ஆகியோர் முழுமையாகவே திறனாய்வாளர்களாகச் செயல்பட்டவர்களில் முக்கியமானவர்கள். ஞானி சில கவிதைகள் எழுதிப்பார்த்த முக்கியமான திறனாய்வாளர். இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதனூடாக உன்னதத்தை [sublime] உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்பட்டவர் வெங்கட் சாமிநாதன். இப்போது அவரது எல்லா ஆக்கங்களும் கவிதா, காவ்யா, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/100

கேள்வி பதில் – 40, 41, 42

மதிப்புரையாளர்கள், திறனாய்வாளர்கள், விருதுத் தெரிவுக் கமிட்டியினர், வாசகர்கள், ரசிகர்கள்….. இவர்கள் எல்லோரும் தனிமனிதர்கள்தான். எந்தவிதத்தில் வேறுபடுகிறார்கள்? எந்தக் கோட்டில் இணைகிறார்கள்? — ஜெயஸ்ரீ கோவிந்தராஜன். மதிப்புரையாளன் ஒரு சூழலின் பொதுவான சிறந்த அளவுகோல்களின்படி நூலை மதிப்பிட்டு அறிமுகம் செய்பவன். திறனாய்வாளன் அல்லது விமரிசகன் ஒரு ஆக்கத்தை தனக்கே உரிய நோக்கில் ஆராய்ந்து வெளிப்படுத்துபவன். விருது தெரிவுக்கமிட்டியினர் அவ்விருதின் நோக்கத்தை உணர்ந்து அதற்கேற்ற ஆக்கத்தைத் தெரிவுசெய்பவர்கள். தன் வாழ்க்கையனுபவத்தின் விளைவான அந்தரங்க நோக்குடன் படைப்பை வாசிப்பவர்கள் வாசகர்கள். வாசித்தவை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/99

கேள்வி பதில் – 37, 38, 39

ஒவ்வொரு எழுத்தாளரிடமிருந்தும் ஒவ்வொன்றைப் பெற்று எழுதுவதாகச் சொல்லும் நீங்கள் அதே எழுத்தாளர்கள் உங்கள் எழுத்தைப் பற்றிச் சொல்லும், “நான் இன்னும் படிக்கவில்லை“, “என்னால் 14 பக்கம் தாண்ட முடியவில்லை” போன்ற வார்த்தைகளை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்? — ஜெயஸ்ரீ கோவிந்தராஜன். அது என் சிக்கல் அல்ல, அவர்களின் சிக்கல் இல்லையா? பொதுவாக, படைப்பாளிகள் ஒரு குறிப்பிட்ட காலம் [தூரம்] தாண்டியதும் தங்கள் மொழி, நோக்கு, வடிவம் சார்ந்த தனித்தன்மைகளை உறுதியாகத் தங்களுக்குள் நிலைநாட்டிக்கொள்கிறார்கள். அதற்கு மாறான விஷயங்களை உள்ளே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/98

கேள்வி பதில் – 35

சங்க(ச்) சித்திரங்களில் உங்கள் சுயபுராணமே அதிகம், உண்மைப் பொருள் கடைசியில் கொஞ்சமே கொஞ்சம் என்ற விமர்சனத்திற்கு உங்கள் பதில் என்ன? — ஜெயஸ்ரீ கோவிந்தராஜன். சங்கப்பாடல்களின் ‘பொருள்’ என்ன என்ற கேள்வியுடன் பதவுரை பொழிப்புரை படிக்கவேண்டுமென்றால் தமிழில் முன்னோடி அறிஞர்களால் உருவாக்கப்பட்ட முக்கியமான பெரும் நூல்கள் உள்ளன. ஆய்வு என்றால் அனந்தராம அய்யர், அவ்வை துரைசாமிப்பிள்ளை, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், எஸ்.வையாபுரிப்பிள்ளை ஆகியோரின் நூல்கள் உச்சங்களைத் தொட்டுள்ளன. இத்துறையில் தமிழில் நிகழ்ந்துள்ள அறிவார்ந்த செயல்பாடு தமிழ்வாசகன் பெருமை கொள்ளத்தக்கது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/96

கேள்வி பதில் – 29, 30, 31, 32

மொழித்தூய்மை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அறிவியல் சார்ந்த துறை மட்டுமல்லாது நாம் அன்றாடம் உபயோகிக்கும் அல்லது நம் பாட்டி காலத்திலிருந்தே வழக்கில் இருக்கும் காப்பி, பஸ், டிக்கட் போன்ற வார்த்தைகளைக் கூட மாற்றத்தான் வேண்டுமா? ஒருமொழி எவ்வளவுதூரம் அடுத்த மொழிக்கு இடமளிக்கலாம் என்று நினைக்கிறீர்கள்? — ஜெயஸ்ரீ கோவிந்தராஜன். நவீனமொழியில் அதன் தூய்மைக்கான ஒரு விழிப்புணர்வு இருந்தபடியே இருக்கவேண்டும் என்பது என் எண்ணம். பலவருடங்களுக்கு முன் மலையாள எழுத்தாளர் ‘ஆனந்த்’ உடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர் இதை மறுத்தார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88

கேள்வி பதில் – 27, 28

பொழுதுபோக்கிற்காக இல்லாமல் ஓரு உன்னத அனுபவத்துக்காகப் படிக்க நான் தயார். ஆனால் இலக்கியத்தரத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நீங்கள் இலக்கணச் சுத்தத்திற்கும் ஓரளவாவது கொடுக்கிறீர்களா? — ஜெயஸ்ரீ கோவிந்தராஜன். உன்னத அனுபவம் இலக்கண சுத்தமாக இருக்கும் என்ற உங்கள் எண்ணம் அதை அடையும்போது மாறலாம். இப்போது உங்கள் கேள்வியே இலக்கண சுத்தமாக இல்லை ‘ஓர் உன்னத’ என்றிருக்கவேண்டும். ‘இலக்கணச்’ என்று ஒற்றுமிகாது. இலக்கணமும் சுத்தமும் ஒரே சொல்லாகப் புணராதவை. ‘பொழுதுபோக்கிற்காக அல்லாமல்’ என்பதே சரி. மன்னிக்கவும் உங்களை மட்டம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87

கேள்வி பதில் – 26

படைப்புகளைப் பிழை திருத்தியே அச்சிலேற்றும் பத்திரிகைகள் போல், புத்தகப் பதிப்பாளருக்கென்று ஏதும் கடமைகள் இல்லையா? — ஜெயஸ்ரீ கோவிந்தராஜன். தமிழில் இன்று இதழியல்துறை ஒரு பெருந்தொழில். கோடிக்கணக்கான முதலீடு உள்ளது. சிற்றிதழ் மற்றும் சிறுபதிப்பகத்துறை குடிசைத்தொழில். மிஞ்சிப்போனால் சில லட்சங்களே முதலீடு. உரிமையாளரே குமாஸ்தா, அலுவலக உதவியாள் எல்லாமே. ஆகவே இதழ்களில் உள்ள தொழில்நேர்த்தியை நாம் புத்தகங்களிலும் சிற்றிதழ்களிலும் எதிர்பார்க்க இயலாது. உதாரணமாக ஆனந்தவிகடனின் இரு இதழ்களுக்கு ஒரு இதழ் ‘உயிர்மை’ மாத இதழ் சமம்– பக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85

» Newer posts