குறிச்சொற்கள் ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்

குறிச்சொல்: ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்

’தீட்டு ’

    கனிமொழி கருணாநிதியின் 'தீண்டாமை' கவிதையிலிருக்கும் இந்த வரிகளைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? "எந்நாடு போனாலும் தென்னாடு உடைய சிவனுக்கு மாதவிலக்குள்ள பெண்கள் மட்டும் ஆவதே இல்லை". இது பெண்ணியம் அல்லது ஆணாதிக்கம் போன்ற (புளித்துப்போன) தலைப்புகளில் கேட்கப்பட்ட கேள்வியல்ல, முற்றிலும் வேறுதளம்...

கேள்வி பதில் – 71

இலக்கியமும் அரசியல் அறிவும்(அரசியலில் பங்கு என்று சொல்லவில்லை) பெண்களுக்கு எவ்வளவு தூரம் தெரிந்திருக்க வேண்டும்? ஏன் இன்னமும் இலக்கியம் பேசும் பெண்ணை அவளது உள்வட்டமும், அரசியல் ஆர்வமுள்ள பெண்ணை வெளிவட்டமும் விநோதமாகவே பார்க்க...

கேள்வி பதில் – 70

மனதளவில் எதற்கானதாவதான தேடல், எந்த சக்தியையாவது மனதளவில் தன்னைவிட உயர்ந்ததாக நினைத்து நடுங்குவது, எதற்குமுன்னாலாவது தம்மை ஒன்றுமேயில்லாததுபோல் உணருவது, போன்றவைதான் இறைமையை உணருவது என்றால் உலகில் நாத்திகன் என்ற பிரிவே இல்லை; அவர்கள்...

கேள்வி பதில் – 69

கண்ணதாசனும், அதைவிட வைரமுத்துவும் சிறந்த திரைஇசைப்பாடலாசிரியர்கள் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இதில் பாரதி எங்கே வந்தார்? பாரதியின் காலமும் கண்ணதாசன், மற்றும் அவரைத்தொடர்ந்த வைரமுத்து காலமும், இசையும் திரைப்பாடலும்...

கேள்வி பதில் – 67, 68

எல்லாத்துறைகளிலும் (கல்வி, இசை, நடனம், விளையாட்டு, என) விருதுகளும் பரிசுகளும் இருந்தாலும் எழுத்துத் துறையில் மட்டும் ஒரு கலைஞன் பரிசும் விருதும் பெறும்போது பொதுமக்கள்/ரசிகர்கள் எல்லோரும் அவரைப்பற்றி சிலாகிக்க, அவரது சககலைஞர்களிடமிருந்து மட்டும்...

கேள்வி பதில் – 65, 66

மொழிபெயர்ப்புகள் சிலசமயங்களில் சரியில்லாமல் போவதற்கும் நகைச்சுவைக்கு ஆளாவதற்கும் என்ன காரணம்? மொழிபெயர்ப்பாளர் இரண்டு மொழியிலும் சம அளவிலும் தேர்ச்சிபெற்றவராகவும், மூலப்படைப்பின் படைப்பாளிக்குச் சற்றும் சளைத்தவரல்லாதவராகவும் இருக்கவேண்டியிருப்பது எவ்வளவு முக்கியம்! அப்படி இல்லாதபோதெல்லாம் மொழிபெயர்ப்பு...

கேள்வி பதில் – 64

மொழிபெயர்ப்புக்கும் மொழியாக்கத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன? கிட்டத்தட்ட திரைப்படங்களில் dubbing மற்றும் ரீமேக் படங்களுக்கான வித்தியாசம் போன்றதுதான் இதுவும் என்று நினைத்துவந்திருக்கிறேன். -- ஜெயஸ்ரீ கோவிந்தராஜன். மொழியாக்கம் மொழிபெயர்ப்பு ஆகிய சொற்கள் பெரும்பாலும் ஒன்றுபோலவே கையாளப்படுகின்றன....

கேள்வி பதில் – 61

ஆன்மிகநெறி என்பது வாழ்க்கையில் என்ன? மனிதன் புறவாழ்க்கையில் அன்றாடம் அனுசந்திக்கும் அவரவர் மூதாதையர் வழி கேட்டறிந்த ஜாதி, மத ஆசாரங்களா, அன்றி அவன் அகஉணர்வில் இறைமையைத் தேட எடுக்கும் முயற்சிகளும் மனநெறி ஒழுக்கங்களுமா? --...

கேள்வி பதில் – 57

உங்களுக்கும் கவிதைக்குமான பரிச்சயம் என்ன? ஒரு கதாசிரியனுக்கு ஓரளவாவது கவிதை மனமும் இருந்தால் கதையின் கடினமான இடங்களில் அவனுக்குள் இருக்கும் கவிஞன் வந்து எழுத்தை நெகிழ்விப்பான்; அது தேவையும் கூட என்று நினைக்கிறேன்....

கேள்வி பதில் – 56

கதையோ, கவிதையோ தன்னைதானே எழுதிக்கொள்வது என்றால் என்ன? அப்படி எப்பொழுதாவது அல்லது எப்பொழுதும் உணர்ந்திருக்கிறீர்களா? அப்படி எழுதிக்கொள்ளும் எனில் அதில் 'உங்கள்' என்று குறிப்பிடப்படும் ஜெயமோகனின் பங்கு என்ன? -- ஜெயஸ்ரீ கோவிந்தராஜன். படைப்பு தன்னைத்தானே...