Tag Archive: ஜெயமோகன் குறும்படம் ஆவணப்படம் jeyamohan short flim jayamohan

ஓர் ஆவணப்படம் – என்னைப்பற்றி

சென்ற வருடம் எனக்கு கோவை ரோட்டரி அமைப்பு அவ்வருடத்தைய துறைச்சாதனையாளர் விருதை வழங்கியது. அப்போது அவ்விழாவில் காட்ட ஒரு 7 நிமிட பேட்டி ஒன்றை என்னைப்பற்றி எடுத்துக்கொடுக்கும்படிச் சொன்னார்கள். அவர்கள் அதற்கு அளித்த நிதியைக்கொண்டு ஒரு ஆவணப்படமே எடுக்கலாமே என்று நான் சொன்னேன்.   அஜிதனிடம் மணிரத்னம் கூறிய ஒன்றை அவன் அடிக்கடிச் சொல்வதுண்டு. சினிமாவைப் பயில அதன் அனைத்துத் துறைகளையும் தானே செய்து படங்களை எடுத்துப்பார்க்கவேண்டும் என்று. அதை இங்கே செயல்படுத்தலாம் என்று தோன்றியது. அவ்வாறுதான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/91916