Tag Archive: ஜெயமோகன்

கடவுளின் மைந்தன்

  ஆயிரம் பல்லாயிரம் கைகள் கூடி ஆர்ப்பரித்து பாடி பரவசம் கொண்டு தேடித்துழாவும் வெளிக்கு அப்பால் மெல்லிய வருத்தப்புன்னகையுடன் நீ நின்றிருப்பதைக் காண்கிறேன்.     தனித்து, பசித்து, விழித்திருக்கும் ஒருவன் தனக்கு தான் மட்டுமே என தன் நெஞ்சில் கை வைக்கும்போது அந்தக்கை உன் பாதங்களில் படுவதையும் இனிய சிரிப்புடன் அவன் தலையை நீ வருடுவதையும் கண்டிருக்கிறேன்.     என்ன விளையாடுகிறாயா? நாங்கள் எளியமக்கள். வெள்ளத்தில் செல்லும்போது ஒன்றோடொன்றுபற்றிக்கொண்டு பந்தாக ஆகிவிடும் எறும்புகளைப்போன்றவர்கள். கூடி நிற்கையிலேயே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5985

படித்துறை

அன்புள்ள மோகன், உங்களைப் பற்றி ராஜாஸார் பேசியிருக்கிறார். பாருங்கள். http://tamil.techsatish.net/file/padithurai/ சுகா

Permanent link to this article: https://www.jeyamohan.in/11914

‘வம்சி’யில் என்னுடைய நூல்கள்

என்னுடைய இரு நூல்களை பவா செல்லத்துரையின் வம்சி பதிப்பகம் [ திருவண்ணாமலை] வெளியிட்டிருக்கிறது. ‘ ஜே சைதன்யாவின் சிந்தனை மரபு ஜே.சைதன்யாவின் சிந்தனை மரபு’ என் மகள் சைதன்யாவின் இளமைப்பருவத்தைப் பற்றிய வேடிக்கையும் விவேகமும் கலந்த பதிவுகளின் தொகை. சென்றவருடமே இதை வம்சி வெளியிட்டுவிட்டதென்றாலும் அட்டையிலும் அமைப்பிலும் சில பிழைகள் நிகழ்ந்தமையால் அதிகமாக வணிகத்துக்குக் கொன்டுவரவில்லை. இது புதிய பதிப்பு வேங்கைச்சவாரி விவேக் ஷன்பேக், [கன்னடச் சிறுகதைகள்]  தமிழாக்கம் ஜெயமோகன் விவேக் ஷன்பேகின் பத்து கதைகள் ஆங்கிலம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6233

பனிமனிதன்

பனிமனிதனை நான் 1999 ல் தினமணி நாளிதழின் சிறுவர் மணியில் எழுதினேன். பதினொன்று வருடங்களுக்கு முன்பு. அப்போது இந்தக்கதைக்கு இளம் வாசகர்கள் அளித்த வரவேற்பு எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. அனேகமாக எல்லா வாரமும் இரு வாசகர் கடிதங்களாவது அச்சாகும். நம்முடைய சிறுவர் சிறுமியர் தமிழில் நல்ல கதைகளை வாசிக்க ஆசைப்படுகிறார்கள்.ஆனால் அவர்களுக்கு அது கிடைப்பதில்லை. காரணம் நம்முடைய பெற்றோர் குழந்தைகளுக்குத் தமிழ் நூல்களை வாங்கி அளிப்பதில்லை. பாடப்புத்தகங்களையே கஷ்டப்பட்டு வாங்கக்கூடிய பெற்றோர் நூல்களை வாங்கிக் கொடுக்காதது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6220

நாவல்,முன்னுரை

இந்த நூல் ஒரு குறிப்பிட்ட விவாதச்சூழலின் விளைவாக 1992ல் எழுதப்பட்டது. 1990ல் என் முதல் நூலான ரப்பர் நாவலுக்கு அகிலன் நினைவுப்பரிசு கிடைத்தபோது நான் தமிழில் வெளிவந்துள்ள பெரும்பாலான நாவல்களை நீண்டகதைகள் என்றே சொல்லமுடியும் என்றும் நாவல் என்ற கலைவடிவத்துக்கு உலகளாவிய தளத்தில் உள்ள சாத்தியங்களை தமிழ் எழுத்தாளர்கள் எதிர்கொள்ளவில்லை என்றும் பேசினேன். அந்தப்பேச்சு வழக்கம்போல பெரிய இலக்கிய அக்கப்போரை உருவாக்கியது. நான் தமிழில் நாவலே கிடையாது என்று சொல்வதாகவும் இதுவரை தமிழில் வெளிவந்த எல்லா நாவல்களையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6207

தமிழினியில்…

இன்றைய காந்தி காந்திய சிந்தனைகளை இன்றைய நோக்கில் அணுகும் விவாதங்களின் தொகுதி இந்த நூல். சமகாலத்து இளைய தலைமுறை காந்தியை அணுகும்போது உருவாகும் ஐயங்கள் சிக்கல்கள் ஆகியவை இந்த உரையாடல்கள் வழியாக இயல்பாக உருவாகி வந்துள்ளன. காந்தியை முழுமையாக அணுகும் இந்நூல் அவர் மீது கறாரான ஒரு பரிசீலனையை நிகழ்த்துகிறது அனல்காற்று அனல்காற்று சட்டென்று வாழ்க்கையில் அடிக்க ஆரம்பிக்கிறது. அனைத்தையும் வரளச்செய்து வெடிக்கச்செய்து தாகம் தாகம் என தவிக்கச்செய்துவிடுகிறது. ஆனால் அனல்காற்று அடித்தால் அதன் உச்சத்தில் மழை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6106

தமிழினி வெளியிடும் ஜெயமோகன் நூல்கள்

தமிழினி இவ்வருடம் வெளியிடும் ஜெயமோகனின் நான்கு நூல்கள் 1. அனல்காற்று நாவல் 2.  இன்றைய காந்தி [ காந்திய உரையாடல்கள்] 3.  எழுதும்கலை [இலக்கிய படைப்பாக்கம் குறித்து அறிமுகம்] 4.  இந்திய சிந்தனை,சில விவாதங்கள் [இந்திய சிந்தனை மரபைச் சார்ந்த விவாதங்கள்]

Permanent link to this article: https://www.jeyamohan.in/5817