Tag Archive: ஜெயமோகனின் 10 நூல்கள்

இந்திய ஞானம்

இந்திய மெய்ஞானம் சார்ந்த விவாதங்கள் தமிழில் மிகக் குறைவாகவே உள்ளன. ஏனென்றால் ஏதோ ஒருகட்டத்தில் அவை மதம் சார்ந்தவையாகக் குறுக்கப்பட்டுவிட்டன. பழமையுடன் இணைக்கபப்ட்டுவிட்டன. ஒரு நெடுங்கால சிந்தனை மரபுள்ள தேசத்தில் அந்த மரபின் தொடர்பே இல்லாமல் சிந்தனைகளை பிரதிசெய்து மனப்பாடம்செய்யும் நிலை உருவாகிவிட்டிருக்கிறது. இக்கட்டுரைகள் பல கோணங்களில் இந்திய சிந்தனை மரபை மீட்டெடுத்து சமகால வாசிப்புக்கு உள்ளாக்குகின்றன   இந்திய ஞானம் தமிழினி பதிப்பகம் சென்னை

Permanent link to this article: https://www.jeyamohan.in/6087

புத்தகவிழா படங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,  உங்கள் 10 நூல் வெளியீட்டு விழாவின் ஃபோட்டோக்கள், நான் எடுத்தவை பிகாசா-வில் அப்லோட் செய்துள்ளேன்.என் அடுத்த ஈ மெயில் பார்க்கவும்.. கூட்டத்தை மட்டும் எடுக்கவில்லை.மறந்து விட்டேன். நான் ‘பண்படுதல்’ புத்தகத்தில் உங்களிடம் கையெழுத்து வாங்கினேன். உங்களிடம் பேச வேண்டும் என்று நினைத்து பின் ஓரிரு வார்த்தைகளுடன் ஒதுங்கி விட்டேன்.குரு பக்தி:) உங்கள் கட்டுரைகளை பெரும்பாலும் இணையத்திலேயே வாசித்து விடுவேன் எனினும் உங்கள் எல்லா புத்தகங்களையும் சேகரித்து விடுவேன். நன்றி. ராம்.   http://picasaweb.google.com/raam.srini/Jeyamohan_10Books?feat=email#5420322981074558018

Permanent link to this article: https://www.jeyamohan.in/6056

சென்னை நூல் வெளியீட்டுவிழா

மறைந்த கேரள இறையியலாளர் ஜோசப் புலிக்குந்நேல் அவர்களின் ஒரு கூட்டத்துக்குச் சென்றிருந்தேன், இருபது வருடம் முன்பு.  கூட்டத்தில் பல சில்லறை குளறுபடிகள். ஃபாதர் சொன்னார் ”குளறுபடிகள் ரொம்ப நல்ல விஷயம், கடவுளும் உள்ளே வந்து கலந்து கொள்வது தான் அது”   உண்மைதான். ஒரு விஷயத்தை ஏற்பாடு செய்யும் போது என்ன உத்தேசிக்கிறோமோ அது தற்செயல்களின்  நுட்பமான தலையீட்டால் மாற்றியமைக்கப் படுகிறது. சர்வ சாதாரணம் என்று நாம் நினைக்கும் விஷயங்களில் கூட நாம் அறியாத எத்தனை விசைகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6042

உயிர்மை வெளியீட்டு அரங்கு 3

ஜெயமோகனின் பத்து நூல்கள் நாள்    19-12-2009 சனிக்கிழமை நேரம்  மாலை 5 30 இடம் தேவநேயப்பாவாணர் மாவட்டமைய நூலகம் [LLA Building ] 735 அண்ணா சாலை சென்னை 2 வரவேற்புரை:  மனுஷ்யபுத்திரன் உயிர்மைபதிப்பகம் தலைமை டாக்டர் வி. ஜீவானந்தம் [பசுமைவாதி, ஈரோடு] சிறப்பு விருந்தினர் உரை திரு விவேக் ஷன்பேக் கன்னட எழுத்தாளர் திரு கல்பற்றா நாராயணன் மலையாளக் கவிஞர் விமரிசகர்     கருத்துரைகள்   இந்திராபார்த்தசாரதி ‘  புதியகாலம்’ சிலசமகால எழுத்தாளர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5882

ஜெயமோகன் நூல்வெளியீடு,முகங்கள்

சென்னை அண்ணாசாலை தேவநேயப்பாவாணர் உயர் அரங்கத்தில் [LLA Building] 19 – 12 – 2009 சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு நடைபெறும் ஜெயமோகனின் பத்து நூல்கள் வெளியீட்டு விழாவில் பேசும் இலக்கியவாதிகள்,சிந்தனையாளர்கள்   ஈரோடு பசுமை இயக்கங்களின் முன்னோடியும் காந்தியவாதியும் நடுத்தர மக்களுக்கான குறைந்தகட்டண மருத்துவ இயக்கத்தை நடத்துபவருமான ஈரோடு. வி. ஜீவானந்தம்.   விவேக் ஷன்பேக்     இதுவரை நான்கு சிறுகதைதொகுதிகளும் இரு நாவல்களும் இரு நாடகங்களும் எழுதியிருக்கும் விவேக் ஷன்பாக் ஏராளமான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5579

புத்தக விழா

சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் அரங்கில் [LLA Auditorium Anna Salai Chennai] அடுத்த சனிக்கிழமை, 19 -12-09 மாலை ஆறுமணிக்கு ஜெயமோகனின் பத்து நூல்கள் வெளியிடப்படுகின்றன. அவற்றின் முகப்புப் பக்கங்களும் குறிப்புகளும் கீழே இன்று பெற்றவை :எழுத்தாளனின் நாட்குறிப்புகள் எந்த ஒரு நாட்குறிப்பும் ஆர்வமூட்டுவதே. அதில் ஓரு மனிதனின் வாழ்க்கை உள்ளது. எழுத்தாளனின் நாட்குறிப்பு என்பது ஒரு பண்பாடு தன் நாட்குறிப்பை எழுதுவதுபோல. கடந்த சிலவருடங்களில் ஜெயமோகன் பண்பாட்டு அரசியல் மற்றும் இலக்கிய விவாதங்களைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5585

அரசியலாதல்

யாராவது அரசியல் என்றாலே ஒருமாதிரி நமைச்சல் கொடுக்கிற இடத்துக்கு நம்மைக் கொண்டு வந்து சேர்த்து விட்டிருக்கிறார்கள். புரட்சிக்கும் கலகத்திற்கும் அடுத்தபடியாக சீரழிக்கப்பட்ட சொல் அது. அதைச் சொன்னாலே கட்சி கட்டி சண்டை போடுவது, எதையும் புரிந்து கொள்ள மறுத்து ஒரேப் பிடிவாதமாக நிற்பது, எதைப்பேசினாலும் ஒரே புள்ளியில் கொண்டுசென்று சேர்ப்பது என்றெல்லாம்தான் நம் அறிவுச்சூழலில் பொருள். அத்துடன் சிற்றிதழாளர்கள் எதற்கெடுத்தாலும் அந்தச் சொல்லை பயன்படுத்துவார்கள். ‘நீங்க சொல்றதுலே அரசியல் இருக்குங்க’, ‘இந்த கதையோட அரசியல் என்னன்னா..’ ‘அவனுக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5718

மேற்குச்சாளரம் -சில இலக்கியநூல்கள்

சாளரத்தருகே அமர்ந்திருப்பவன் இளமையில் ஒருமுறை நான் லிட்டன் பிரபு எழுதிய ‘பாம்பியின் கடைசிநாட்கள்’ என்ற நாவலை நானே திருப்பி எழுதினேன். கிட்டத்தட்ட எண்பது பக்கங்கள். அந்நாவலை வாசித்ததைவிட அபாரமான அனுபவமாக இருந்தது அது. அந்நாவலின் சுருக்கமான மறுவடிவம் ஒன்றை எனக்காக நான் உருவாக்கிக் கொண்டிருந்தேன் என உணர்ந்தபோது மனம் உற்சாகத்தில் மிதந்தது. இந்த நாவல் லிட்டன் பிரபுவுடையதல்ல, நானே உருவாக்கிக்கொண்ட என்னுடைய நாவல். அந்நாவலின் கதையை நான் கல்லூரியில் என்னருகே அமர்ந்திருந்த நண்பன் ஜெயக்குமாருக்குச் சொன்னேன். அவன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5650

இன்று பெற்றவை : எழுத்தாளனின் டைரி

எப்போதும் காவலாக… சீராக நாட்குறிப்பு எழுதும் வழக்கம் உள்ளவன் நான். தியானம் பயின்ற காலகட்டங்களில் தனியாக தியான அனுபவம் சார்ந்த பதிவுகளை எழுதியிருக்கிறேன். அவை இப்போது வாசிக்கையில் ஆர்வமூட்டும் விஷயங்களாக உள்ளன. ஏதோ ஒரு தருணத்தில், அவன் என்னிடமுள்ள தொடர்பை போதுமான அளவுக்கு இழந்து காம்பு கனிந்து உதிரும்போது, நூலாகலாம். இந்தக் குறிப்புகள் நானே வெவ்வேறு தருணங்களில் எழுதியவை. இதழ்களிலும் இணையத்திலும். தொடர்ச்சியாக எதிர்வினைகள் ஆற்றுபவன் நான். என்னுடைய கருத்துக்களை பதிவுசெய்ய எப்போதுமே தயங்கியவனல்ல. பலசமயம் எழுத்தாளர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5499

'நலம்' சிலவிவாதங்கள்

உடலை அவதானித்தல் பல வருடங்களுக்கு எம்.கோவிந்தன்,சுந்தர ராமசாமி வழியாக காந்திமீது ஈடுபாடு வந்த காலகட்டத்தில் ஒருநாள் இரவு காந்தியின் ஒருவரி என்னை அதிரச்செய்தது. நுண்ணுணர்வுள்ள ஒருவனுக்கு அவனுடைய சொந்த உடல் மிக மூக்கியமான தடையம் என்கிறார் காந்தி. அதன் வழியாக அவன் தன்னை ஆளும் பிரபஞ்ச விதிகளில் பலவற்றைப் புரிந்துகொள்ள முடியும். அந்த வரிக்குப்பின்னால் நான் வெகுதூரம் சென்றேன். நான் அந்த நாள் வரை உடலைக் கவனித்ததே இல்லை. என் உடல் என் மனத்தை நான் போட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5494

Older posts «