Tag Archive: ஜெயன் கோபாலகிருஷ்ணன்

அப்பாவின் குரல் – கடிதங்கள்

ஜெயன் கோபாலகிருஷ்ணன், “அப்பாவின் குரல்” இப்போதுதான் படித்தேன். மிகவும் பிடித்திருந்தது. பளார் என்று பெரும்பாலும் காட்சிகளால் மட்டுமே கட்டமைத்து அதிவேகத்துடன் சொல்லப்பட்ட கதை. “அப்பா கதவைத்திறந்து வெளியேறினார்.” என்று முடிக்கும்போது மூச்சிரைத்தது. திரைக்கதையின் “enter late, leave early” கான்சப்ட் இயற்கையாகவே உங்களுக்கு வருகிறது. இதுதான் உங்கள் நடை என்றால் வேறு எழுத்து நடைக்கு தயவு செய்து மாற்றாதீர்கள். இதுவே “டான் பிரவுன்” களின் நடை.! கூடிய விரைவில் இதே சத்தும், வாழ்க்கையும், வேகமும் கொண்ட ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40869

புதியவர்களின் இருகதைகள் – கடிதம்

ஜெ போகன் எழுதிய பூ வாசித்தேன். முதலில் நான் பார்ப்பது அது நல்ல புனைவா இல்லையா என்பதைத்தான். பூ நல்ல புனைவு. வாழ்க்கையை தீவிரமாக அனுபவிக்க வைப்பதுதான் நல்ல புனைவு இல்லையா? போகனின் கதை அந்தவகையிலே நான் சமீபத்தில் வாசித்த மிகச்சிறந்த படைப்பு. மிகமுக்கியமான அறிமுகம் அவர். வாழ்த்துக்கள். கதைமுழுக்க வரக்கூடிய உறவின் சிடுக்குகள்தான் இந்தக்கதையை ஆழமான கதையாக மாற்றுகின்றன. முதலில் வாசிக்கையில் ஒரு எளிய பழிபாவக் கதையாகத்தான் தெரிகிறது. ஆனால் இரண்டு அம்சங்களைக் கருத்தில்கொள்ளவேண்டும். கதைசொல்லியின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40805

அப்பாவின் குரல்-கடிதங்கள்

ஆசிரியருக்கு, வணக்கம். மனதை உலுக்கும் கதை. உறவு என்பது அன்பினால் இல்லாமல் போனால், அன்பின் சுவடுகளை அடையாளம் காணாமல் போனால் வரும் தனிமையையும், அன்பு மறுக்கப்பட்டவர் தரும் அருகாமையையும் கடும் வறட்சியை காட்டுகின்றன. வாசிப்பும், வாசிப்பை தொடர்ந்த சிந்தனையும்,வாசிப்பின் வரிகளை மீண்டும் மீண்டும் தனக்குள் பேசி கொள்வதும் அருகில் உள்ளவர்களை அப்பாலும், எழுத்தில் உள்ளவர்களை அருகிலும் வைக்கின்றது. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. என்புதோல் போர்த்த உடம்பாக இல்லாமல் இருக்க உயிர்நிலையை கை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40734

2. அப்பாவின் குரல் – ஜெயன் கோபாலகிருஷ்ணன்

மீண்டும் புதியவர்களின் கதைகள் அப்பா இறந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நான் திருமணம் செய்தபொழுது எடுத்த முடிவு இதுதான். எந்த ஒரு சூழ்நிலையிலும் மனைவியை இரண்டு சொற்களால் திட்டக்கூடாது. “தேவடியா பலவட்டறை”. அதற்கான காரணம் என்னிடம் இருந்தது. அப்பா கோபம் கொள்ளும்பொழுதெல்லாம் அந்த இரண்டு சொற்களாலேயே அம்மாவை திட்டுவார். அம்மா அதற்கான எதிர்வினையாக லேசான புன்முறுவல் மட்டுமே புரிவாள். ஆனால் அந்த இரண்டு சொற்களும் அம்மாவின் மனதை மிகவும் காயப்படுத்துபவை என்று எனக்குத் தெரியும். அப்பா திட்டுவது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40431