Tag Archive: ஜெயகாந்தன்

ஜெயகாந்தனின் நினைவில்…

தமிழில் மிகக்குறைவாகவே எழுத்தாளர்கள் கொண்டாடப்பட்டிருக்கிறார்கள். எழுதும்போது மிகப்பெரிய செல்வாக்குடன் இருக்கும் வணிக எழுத்தாளர்கள் எழுத்தை நிறுத்தும்போது அப்படியே மறைந்துபோய்விடுவதைக் காணலாம். ஒருமுறை சேலத்தில் ஓர் இலக்கியக்கூட்டத்தில் ஒருவரைச் சுட்டிக்காட்டி ”அவர்தான் மகரிஷி, எழுத்தாளர்” என்றனர். என்னுடனிருந்த எவருக்கும் அவரைத் தெரிந்திருக்கவில்லை. எழுபதுகளில் அவர் குமுதம் வார இதழ் வாசகர்கள் நடுவே மிகப்பெரிய நட்சத்திரம். அவரது பலநாவல்கள் சினிமாக்களாகியிருக்கின்றன. ஒன்றில் ஜெயலலிதா நடித்திருக்கிறார், நதியைத்தேடிவந்த கடல். ஜானகிராமனின் பாதிப்புள்ள, காமம் கலந்த, மென்மையான உணர்ச்சிகரமான கதைகள். வணிக எழுத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81414

இலக்கியவாதிகளும் அமைப்புகளும்

ஜெ என் நண்பருடன் ஒரு இலக்கிய அரட்டையில் ஒருவிஷயம் பேச்சுவந்தது. அதை உங்களிடம் எழுதிக்கேட்காமல் இருக்கமுடியவில்லை. விஷ்ணுபுரம் அமைப்பு பற்றிய பேச்சு வந்தபோது வந்தது இது என்பதையும் சொல்லவேண்டும். அதாவது முன்பிருந்த எழுத்தாளர்களான புதுமைப்பித்தன் , க.நா.சுப்ரமணியம் போன்றவர்களெல்லாம் தனியர்களாக நின்று போராடினார்கள் என்றும் இன்றைக்குள்ள எழுத்தாளர்கள் அமைப்புகளை உருவாக்க முயல்கிறார்கள் என்றும் இதெல்லாம் ஒரு வீழ்ச்சி என்றும் நண்பன் சொன்னான். ஓர் இளம்கவிஞர் எங்கோ எழுதியதை அவன் சுட்டிக்காட்டினான். இப்படிச் சொல்வது உண்மையா? இதை வீழ்ச்சி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79381

கலாச்சார இந்து

அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு, வணக்கம். எனது குடும்பத்தில் அனைவருமே கடவுள் பக்தி உடையவர்கள். நான் மட்டும் எனது பதின்பருவத்தில் இருந்து ஒரு பின்பற்றும் இந்துவாக (Practicing Hindu) இல்லாமல் இருந்துவருகிறேன். சிறுவயதிலேயே படிக்கக்கிடைத்த ஈவேரா பெரியாரின் கருத்துக்கள் இதில் கணிசமாக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும் என்ற போதிலும் இதற்கு முக்கியகாரணம் எனது  தர்க்க புத்திதான். ஆயினும் மூர்க்கத்தனமாக இறைவழிபாட்டை ஒதுக்கியவனும் கிடையாது. எவராவது திருநீற்றை தந்தால் பூசிக்கொள்வதும் உண்டு. உறவினர்கள் நண்பர்கள் கோயிலுக்கு அழைத்தால் சென்று கும்பிடுவதும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27843

தமிழ் ஹிந்து- இரு எதிர்வினைகள்

பி.ச.குப்புசாமி அவர்கள் எனக்கும் ஜெயகாந்தனுக்குமான உறவைப்பற்றி தமிழ்ஹிந்துவில் எழுதியிருக்கிறார். நான் அவற்றில் சொல்லப்பட்ட எந்த விஷயத்தைப்பற்றியும் கட்டுரைகளிலோ நேஎர்ப்பேச்சிலோ எதுவுமே சொன்னதில்லை என்று சுட்டிக்காட்டி பல நண்பர்க்ள் அது ஏன் என்று கேட்டிருந்தனர். அவை பதிவுசெய்யப்படவேண்டியவை என்று சிலர் எழுதியிருக்கிறார்கள். மூத்தபடைப்பாளிகளைப்ப்ற்றி அவர்கள் இருக்கும்போதோ மறைந்தபின்னரோ நான் எழுதிய குறிப்புகள் அனைத்திலும் ஓரு பொதுக்கூறைப் பார்க்கமுடியும். அவர்களின் புனைவுலகைப்புரிந்துகொள்ள உதவக்கூடிய அளவில் அவர்களின் தனியாளுமையை நானறிந்தவகையில் முழுமையாகச் சொல்ல மட்டுமே முயன்றிருப்பேன். அப்பதிவுகள் அவர்களோ பிறரோ முன்னரே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74968

ஆலமர்ந்த ஆசிரியன்

1991இல் நான் விஷ்ணுபுரம் எழுதிக்கொண்டிருந்த நாட்கள். நானும் சென்னை நண்பர்கள் சிலரும் ஜெயகாந்தனைச் சந்திப்பதற்காகச் சென்றிருந்தோம். மடம் என நண்பர்களால் அழைக்கப்பட்ட அந்த மூன்றாவது மாடிக்கொட்டகையில் ஜெயகாந்தன் வருவதை எதிர்பார்த்து ஏற்கனவே நால்வர் காத்திருந்தனர். சாம்பல் படிந்த பழைய நீண்ட மேஜைக்கு முன் ஜெகெ அமரும் பழைய மரநாற்காலி. அதில் அவரது பிரதிநிதி போல ஒரு பழைய துண்டு கிடந்தது. அவர் முந்தையநாள் போட்டுவிட்டு போனது. அங்கிருந்தவர்கள் அவரது இன்மையையே ஓர் இருப்பாக உணர்ந்துகொண்டிருந்தனர். நாங்கள் அமர்ந்துகொண்டோம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74240

மின்தமிழ் பேட்டி 4

38. ஆண்டுதோறும் இலக்கியவாதிகளை அடையாளங்கண்டு விருது வழங்குதல், ஊட்டியில் நடைபெறும் இலக்கிய முகாம் – இவை தவிர விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் செயல்பாடுகள் என்ன? நீங்கள் ஆரம்பத்தில் உத்தேசித்திருந்தபடி அது செயல்படுகிறதா? (அமைப்புகளோடு அடையாளப்படுத்திக் கொள்வது ஏதேனும் ஒருவகையில் கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கும், அல்லது குறைந்தபட்சம் கருத்துச் சாய்வையேனும் ஏற்படுத்தும் எனக் கருதுவதால் நான் அதில் இணையவில்லை). பதில் இலக்கியம் தனிமனிதர்கள் வழியாக சமூக நிகழ்வாக வளர முடியாது. ஆகவே அதற்கு ஓர் இயக்கம்தேவை என்று க.நா.சு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73137

சு.ரா- குரல்

[embedyt]http://www.youtube.com/watch?v=TQCM9WhukhI[/embedyt] இனிய ஜெயம், என் இலக்கியத் தோழமை அனுப்பிய சுட்டி இது. நான் பொதுவாக யூ ட்யுப் சென்று எந்த எழுத்தாளர் பேட்டியும் பார்த்ததில்லை. அவர்கள் எழுத்தின் வழியே என் அகத்தில் உருவாகி வந்திருக்கும் பிம்பம் அப்படியே இருக்கட்டும் என்றொரு எண்ணம்தான். முன்பு ஒரு முறை ஜெயகாந்தன் அவர்களை கடலூர் ஞானியார் மடத்தில் ஒரு எளிய நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் ஒரு இருபது நண்பர்கள் மத்தியில் வைத்து முதன்முதலாக பார்த்தேன். சிறுமை தீண்டாதவன் எத்தகு ஆணவம் கொண்டிருப்பானோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66335

மகாபாரதம் பற்றி ஜெயகாந்தன்

[embedyt]http://www.youtube.com/watch?v=hqwT6uU7KvQ[/embedyt] மகாபாரதம் பற்றி ஜெயகாந்தன் [EPSB] [/EPSB]

Permanent link to this article: https://www.jeyamohan.in/64699

ஜெயகாந்தனும் வேதமும்

மேடையில் அபாரமான படைப்பூக்கம் கொள்ளும் எழுத்தாளர்களில் ஒருவர் ஜெயகாந்தன். அரசியல் மேடைகளில் அவரது சினமும் ஆவேசமும் பதிவாகியிருக்கின்றன. அதிகமும் அரசியல், இலக்கியம் சார்ந்தே அவர் பேச நேர்ந்திருக்கிறது. ஆனால் அவரது தனிப்பட்ட உரையாடல்களை வைத்துப்பார்த்தால் அவர் மிகச்சிறப்பாக உரையாடச்சாத்தியமான கருக்கள் முறையே திருக்குறள், வள்ளலார், தாயுமானவர், சித்தர்பாடல்கள், திருமூலர், பாரதி என்று சொல்வேன். அத்தகைய கருக்களில் மேடையில் அவர் அதிகம் பேச நேரவில்லை. வேதம் என்றால் என்ன என்ற தலைப்பில் ஜெயகாந்தன் ஆற்றிய இந்த உரையில் அவரது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63008

ஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி, வாசிப்பு குறித்து…

அன்புள்ள ஜெயமோகன் பட்டறிவு, கேட்டறிவு, படிப்பறிவு என்றெல்லாம் கேட்கிறோம் பட்டறவு சரி, கேட்டறிவு சரி  படிப்பறிவின் முக்கியத்துவம் தான் இங்கே கேள்வி  இந்த இடத்தில்  பழைய  விஷயம்  ஞாபகப்  படுத்திப் பார்க்கிறேன். நாகர்கோவிலில் முன்பொரு தரம் சு.ரா அவர்கைளப்  பார்க்க வந்திருந்த தோழர் நெல்லை கிருஷியுடன் நண்பர்கள் குழாமாக சேர்ந்து சென்றோம்.  சம்பாஷணைக்கு நடுவே கிருஷி சு.ரா விடம் கேட்டார்  “ஜெயகாந்தன் ஒரு முறை எங்கோ சொல்லியிருக்கிறார்  நான் என்னுடைய தனித்துவம் மற்றும் சுதந்திர  சிந்தனையைப் பாதிப்பின்றி பாதுகாக்கும் விதம் பிறர்  படைப்புகளை முக்கியத்துவம் கொடுத்துப் படிப்பதில்லை என்று” ……. சு.ரா எங்களை கூர்ந்து பார்த்தார் பின்பு நிதானமாக சொன்னார் அது கத்தியைத் தீட்டத் தீட்ட மழுங்கி விடும் என்பது போல. சு.ரா வுக்குப் பின் தன் மிகத் தெளிவானப் பார்வையால் நான் ஆராதிப்பது சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களை. தன்னிலையில் வாழ்க்கையை உணர்வதையே மையமாகக் கொண்டது அவரது பார்வை. ஒருகேள்விக்கு அவர் இங்ஙனம் பதிலளிக்கிறார் To become a Philosopher is made quite simple …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2358

Older posts «

» Newer posts