Tag Archive: ஜெகே

ஜெகே- ஒரு மனிதன் ஒரு வீடு ஓரு உலகம்

ஹென்றியும், ஓங்கூர் சாமியும் வெவ்வேறு பெயரில் உலாவந்த ஒருவரே. ஹென்றியின் பிற்காலம் ஓங்கூர் சாமியாகக் கழிந்திருக்கும் – மானுட மனங்கள் மீது பாயும் கனிவின் முதிர்ச்சியாக. பேபி ஓடிப்போனதும் ‘இந்த வீட்டில் வாசற் கதவுகளும் தோட்டத்துக் கதவுகளும் எப்போதும் அவளுக்காகத் திறந்தே கிடக்கும்’, என நாவலை முடித்த ஜெயகாந்தனுக்கும் முன்முடிவுகளையும் பின்நினைவுகளையும் பொருட்படுத்தாத அப்பழுக்கற்ற கனிவையும் அகங்காரமற்ற ஆளுமையையும் வெளிப்படுத்தும் இவ்வரிகள் பொருந்தும். ஜெயகாந்தனின் ஒருமனித ஒருவீடு ஒரு உலகம் பற்றி பைராகி எழுதிய குறிப்பு

Permanent link to this article: https://www.jeyamohan.in/74223

‘ஜெகே”- கடிதங்கள்

பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, நான் ஓர் எளிய வாசகன், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் ஜெயகாந்தனை வாசிக்க ஆரம்பித்தேன்,அவரது பல படைப்புகளை வாசித்த பின்னர் தங்கள் படைப்புகளை வந்தடைந்தேன். தங்கள் வலைதளத்தில் ஜெ.கே அவர்களை பற்றி நீங்கள் எழுதிய அனைத்தையும் வாசித்தேன். ஜெகே படைப்புகளை எப்படி நெருங்க வேண்டும், வாசகன் கதையில் அவன் சென்றடைய வேண்டிய தளம் பற்றி அறிந்தேன். அதன் பின்னர் மறுபடியும் ஜெ கெவை படித்த பொழுது நான் தவற விட்ட கணங்களை கண்டேன்,என்னுள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74055

‘ஜெகே ‘ கடலூர் சீனு

இனிய ஜெயம், நள்ளிரவு வழக்கம்போல வெண்முரசு வாசிக்க மொபைலை திறந்தேன். முதல் பதிவாக ஆசானுக்கான அஞ்சலியை கண்டேன். மிகுந்த சோர்வு அழுத்த , மொட்டை மாடி சென்று அப்படியே மல்லாந்து படுத்தேன். இந்த வீட்டுக்கு குடி வர, இந்த வீட்டை சுத்தம் செய்கையில், தோட்டத்தில் பிறந்து சில வாரமே ஆன கருப்பு குட்டி நாய் ஒன்று கிடந்தது. தெரு நாய். அம்மா பிளாக்கி என பெயர் இட்டார்கள். தெரு நாய். கல்லடி பட்டு ஒரு காலும், கண்ணும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73941

ஜெகே

ஒருவாரத்துக்கும் மேலாக விழித்திருக்கும் நேரமெல்லாம் வேலை. இரு மலையாளப்படங்கள் தொடங்கிவிட்டன. ஒரு தமிழ்த்தொடர்- இன்னமும் முறையான அறிவிப்பு வரவில்லை. ஒரு மெகா தமிழ் சினிமாவின் தொடக்கக் கட்ட பணிகள். நாங்களே தொடங்கவிருக்கும் ஒரு புதிய முயற்சியின் தொடக்க கட்டப் பணிகள். விரைவில் அறிவிப்போம். நடுவே வெண்முரசு. காலையில் எழுந்ததுமே வெண்முரசு ஒரு அத்தியாயம். பின்னர் நள்ளிரவில்தான் அடுத்த நினைப்பு. திடீரென்று காலையில் ஒரு சோர்வு. அன்று ஒன்றுமே எழுதவில்லை. அதீதமான செயலூக்கம் திடீரென்று அப்படி சோர்வு நோக்கிக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73921