Tag Archive: ஜீவா.

பின்நவீனத்துவம் -விளையாட்டுக்கையேடு

பின்நவீனத்துவம் என்பது பொதுவாக ஒரு மிரட்டுவதற்குரிய சொல்லாகவே இங்கே அறிமுகமாகியது. அதை அன்றைய சூழலை அறிந்து , அது உருவான பினன்ணியைப் புரிந்துகொண்டு பேசாமல் சிக்கலான மொழியாக்க நடையில் எழுதப்பட்ட நீள்கட்டுரைகள் வழியாகவும் தூக்கிவீசும் ஒற்றை வரி விமர்சனங்கள் வழியாகவும் முன்வைத்தார்கள். அன்று இணையம் போன்ற தொடர்புவசதிகள் இல்லாதிருந்தமையால் நூல்களும் பெயர்களும் மிரட்சி அளிப்பவையாக இருந்தன. ஒரு தேனீர்க்கோப்பைப் புயலாக அது நிகழ்ந்து முடிந்தது காரணம் முதன்மையாக இங்கே நவீனத்துவம் சார்ந்த விவாதங்களே அதுவரை பெரியதாக நிகழவில்லை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74687

ஜீவா வலைப்பூ

ஜீவாவை எனக்கு பத்து வருடங்களாகத்தெரியும். அதற்கு முன்னரே நாஞ்சில்நாடன் நிறையச் சொல்லியிருந்தார். நிறைய விசித்திரங்கள் கொண்டவர். வழக்கறிஞர், ஆனால் அவரது தொழில் விளம்பரப்பலகைகள் உருவாக்குவது. ஓவியர், ஆனால் சினிமாவைப்பற்றிய கட்டுரைகள் வழியாகவே அவர் புகழ்பெற்றிருக்கிறார். ரசனை இதழில் அவர் எழுதும் சினிமாக்கட்டுரைகள்தான் தமிழில் சினிமா குறித்து எழுதப்பட்டும் மிகச்சிறந்த கட்டுரைகள் என்று நான் நினைக்கிறேன். தெளிவான மொழி. மிகையான அரசியல் தத்துவ அலட்டல்கள் இல்லாத கோணம். முக்கியமான படங்களை தேர்வுசெய்யும் முறை முதலியவை அவரது பலங்கள். ஜீவா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1006

ஹாரி போட்டரும் பனிமனிதனும்: ஜீவா

ஒரு மொழியின் மிகச்சிறந்த எழுத்தாளன்தான் அங்குள்ள குழந்தைகளுக்காக எழுதவேண்டும் என்று கூறப்படுவதுண்டு . தமிழில் முக்கியமான எழுத்தாளர்கள் அனேகமாக எவருமே குழந்தைகளுக்காக எழுதியதில்லை. அதற்கு அவர்களுடைய எழுத்து முறை ஒத்துவந்ததில்லை. இங்கு பெரியவர்களுக்காக எழுதி தோற்றுப்போன எழுத்தாளர்களும் துணுக்கெழுத்தாளர்களும்தான் குழந்தைகளுக்காக எழுதியுள்ளார்கள். இத்தகைய எழுத்தில் ஏற்கனவே குழந்தைகளுக்கு சொல்லப்பட்ட கதைகளே மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டிருப்பதை காணலாம் .ராஜாராணி கதைகள், மந்திரஜாலக் கதைகள், சாகசக்கதைகள் போன்றவை. குழந்தைகளுக்காக எழுதும்போது அவர்களுக்கு நற்செய்திகள், நீதிகள் சொல்லவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/431