Tag Archive: ஜி.நாகராஜன்

கடைத்தெருவை கதையாக்குதல்…

  1962 நான் பிறந்த அதேவருடம் மலையாள எழுத்தாளர் எஸ்.கெ.பொற்றேகாட் ஒருநாவல் எழுதிவெளியிட்டார். ’ஒரு தெருவின் கதை’. கோழிக்கோடு நகரத்தின் முக்கியமான கடைவீதியான மிட்டாய்த்தெருவின் கதை அது. உண்மையில் தெருவின் கதை அல்ல, தெருவாழ் மக்களின் கதை. தெருவில் வாழும் பிச்சைக்காரர்கள், தினக்கூலிகள், அனாதைப்பையன்கள், வேசிகள் ஆகியோரின் கதை. கூடவே கடைவணிகர்களின் கதை. அவர்கள் எழுச்சிகளின் வீழ்ச்சிகளின் சரித்திரம். கேரள சாகித்ய அக்காதமி விருது பெற்ற அந்நாவல் இன்றும் மலையாள இலக்கியத்தில் ஒரு பெரிய வெற்றியாகக் கருதப்பட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9185/

புறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்?

[க.நா.சு] அன்புள்ள ஜெ திராவிட இயக்க எழுத்தாளர்கள் இலக்கியவாதிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருவது ஏன்? இதைப்பற்றி பலர் எழுதியிருக்கிறார்கள். இதற்கு தங்களிடமிருந்து ஒரு சிறந்த பதிலை எதிர்பார்க்கிறேன் [வைரமுத்து தன் சிறுகதைத் தொகுதி வெளியிடப்படுவதை ஒட்டி தி ஹிந்துவில் எழுதிய கட்டுரையை சார்ந்து நடந்த விவாதங்களை வைத்து இந்தக்கேள்வியை கேட்கிறேன்] எஸ். மகாலிங்கம் [புதுமைப்பித்தன்] அன்புள்ள மகாலிங்கம், இதற்கான பதிலையும் தொடர்ந்து பலமுறை எழுதியிருக்கிறேன். ஒருவேளை இதைப்போன்ற வரலாற்றுத்தகவல்களை இப்படித்தான் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கவேண்டும் போலும். எத்தனை முறை எத்தனை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79847/

இலக்கியவாதிகளும் அமைப்புகளும்

ஜெ என் நண்பருடன் ஒரு இலக்கிய அரட்டையில் ஒருவிஷயம் பேச்சுவந்தது. அதை உங்களிடம் எழுதிக்கேட்காமல் இருக்கமுடியவில்லை. விஷ்ணுபுரம் அமைப்பு பற்றிய பேச்சு வந்தபோது வந்தது இது என்பதையும் சொல்லவேண்டும். அதாவது முன்பிருந்த எழுத்தாளர்களான புதுமைப்பித்தன் , க.நா.சுப்ரமணியம் போன்றவர்களெல்லாம் தனியர்களாக நின்று போராடினார்கள் என்றும் இன்றைக்குள்ள எழுத்தாளர்கள் அமைப்புகளை உருவாக்க முயல்கிறார்கள் என்றும் இதெல்லாம் ஒரு வீழ்ச்சி என்றும் நண்பன் சொன்னான். ஓர் இளம்கவிஞர் எங்கோ எழுதியதை அவன் சுட்டிக்காட்டினான். இப்படிச் சொல்வது உண்மையா? இதை வீழ்ச்சி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79381/

தஞ்சை பிரகாஷ், ஜி.நாகராஜன், இலக்கியப்பட்டியல்- கடிதங்கள்

அன்பின் ஜெ, நலம் தானே? நான் உங்களுக்கு அலைபேசியில் தெரிவித்தபடி, என் வசம் இருக்கும் மலையாளப் புத்தகங்களின் பட்டியலை விரைவில் அனுப்புகிறேன். ஒரு நாயர் நண்பர் இந்த வார இறுதியில் பெயர் விவரங்களைப் படித்து சொல்ல வருகிறார். உங்களுக்கு வேண்டியதை அனுப்பி வைக்கிறேன். அண்மையில் நாகர்கோவிலைக் கடந்து திருவட்டார் செல்லும் போது உங்களை சந்திக்காமல் வந்தது நான் தவற விட்ட வாய்ப்பு. உள்மனசில் நீங்கள் தான் விஸ்வரூபமாய் இருந்தீர்கள். உள்ளே ஆதிகேசவன் புரண்டுவிடுவாரோ என்று தான் எதிர்பார்த்தேன்! …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79821/

ஜி.நாகராஜன் என்னும் கலைஞன்

ஜெ, உங்கள் தஞ்சை பிரகாஷ் பற்றிய கட்டுரை எனக்கிருந்த குழப்பங்களைத் தீர்த்துவைத்தது. நானும் தஞ்சை பிரகாஷ் எழுதிய இருநாவல்களை வாசித்து என்னது இது என்று நினைத்தவன். ஆனால் இன்னொரு கும்பல் சமீபமாக ஜி.நகாராஜனை போலி என்றும் பாவலா எழுத்தாளர் என்றும் சொல்ல ஆரம்பித்திருக்கிறது. ஜி.என் பற்றி உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன். ஜி.என் பாலியலைத்தான் எழுதினார். அவர் எழுத்து ஏன் நுட்பமானதாக இருக்கிறது என அறிய விரும்புகிறேன், ஏனென்றால் அப்படி முன்னரே சொல்லியிருக்கிறீர்கள். சண்முகம் அன்புள்ள சண்முகம், ஜி.நாகராஜனை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79605/

எரியும் தேர்

ராஜன் ராதாமணாளன் எழுதிய இந்தக்கதை [ தேர்க்கால் ] சமீபத்தில் வாசித்த குறிப்பிடத்தக்க கதைகளில் ஒன்று. நவீனத் தமிழ் இலக்கியம் இயல்பாகவே மேலிருந்து தொடங்கியது. உயர்குடி வாழ்க்கையின் நுட்பமான சில தளங்களைச் சொல்வதாகவே அது அமைந்தது. அடுத்தடுத்த கட்டத்தில்தான் அது அடித்தள வாழ்க்கையின் சித்திரங்களை அளிக்கத் தொடங்கியது. ஜி.நாகராஜன் அதற்கான தொடக்கம் எனலாம். இமையம்,சு.வேணுகோபால், ஜோ.டி.குரூஸ்,அழகியபெரியவன் போன்றவர்களும் அடுத்த தலைமுறையில் எஸ்.செந்தில்குமார், லட்சுமி சரவணக்குமார், வா.மு.கோமு, கெ.என்.செந்தில் போன்றவர்களும் அடித்தளவாழ்க்கையை எழுதுபவர்களாக இன்று அறியப்படுகிறார்கள். தீவிரமான கணங்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/67095/

பிறழ்வெழுத்து

அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். பாரதி, கல்கி போன்றவர்களின் படைப்புகளைப் படித்தே வளர்ந்ததாலோ என்னமோ, என்னைப் பொறுத்தவரையில் எழுத்து மனிதர்களிடையே நேர்மறையான மாற்றங்களைத் தோற்றுவிப்பதற்கே என்ற எண்ணம் ஆழ வேரூன்றி இருக்கிறது. சமீபத்தில் “டிரான்ஸ்க்ரேசிவ் பிக்சன்” என்ற சொற்றொடரைப் படிக்க நேர்ந்தது. தமிழில் இத்தகைய படைப்புகள் வந்துள்ளனவா? இத்தகைய படைப்புகள் ஏதேனும் சமூக நன்மையை    அளிக்கவல்லனவா? அல்லது முழுக்க முழுக்க பொழுதுபோக்கு உத்தியாகவே இத்தகைய நாவல்கள் எழுதப்படுகின்றனவா? உங்களின் கருத்தைக் கூறுங்களேன்? நன்றி கணேஷ் நியூ டெல்லி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21260/

கடிதங்கள்

அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு, சென்ற வாரம் தொழில் நிமித்தம் சீனா சென்றிருந்தேன். குறிப்பாக ஷாங்காய் மற்றும் பீஜிங் நகரங்கள். எனக்கு சாதாரணமாகவே சீனாவின் கட்டுப்பாடு மிக பிடிக்கும். ஒரு பத்து பதினைந்து வருடங்களில் இரு நகரங்களை இப்படி மாற்ற முடியும் என்பதற்கு இவ்விரு நகரங்களும் ஒரு எடுத்துக்காட்டு. நகர அமைப்பு அதற்கான உள்கட்டமைப்புகள் சாலைகளின் மேன்மை வாகன நடமாட்டத்தில் ஒரு கட்டுப்பாடு ,பொது இடங்களில் மக்கள் நடத்தையில் ஒரு ஒழுக்கம். ஆனால் சாதாரண மக்கள் சீன கலாச்சாரத்திலிருந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21398/

திராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி 2

திராவிட இயக்கத்தின் அறிவுப்புலத்தில் உருவானவர் நீங்கள்…அந்த தாக்கம் உங்கள் எழுத்தில் எந்தவகையில் நீடிக்கிறது? நான் எழுதும் நடை என்பது முதலில் திராவிட இயக்கத்தில் இருந்து ஊக்கம் பெற்றுக்கொண்டதே. அந்த இயக்கத்தின் மொழிநடையின் சிறந்த அம்சங்களை மட்டுமே நான் எடுத்துக்கொண்டேன். திராவிட இயக்க அழகுத் தமிழ் வீச்சும், லா.ச.ராமமிருதம், தி. ஜானகிராமன், புதுமைப்பித்தன் போன்றவர்களது இலக்கிய நடையழகும்சேர்ந்ததொரு தத்துவமயக்க எழுத்து நடை எனது ஆரம்பகாலக் கதைகளில் பாலில் தண்ணீர் கலப்பு போல வந்தமைந்திருந்தது. உதாரணத்திற்கு, ‘பாம்பு உறங்கும் பாற்கடல்’, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9385/