Tag Archive: ஜாம்பவதி

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 33

பகுதி ஆறு : மணிமருள் மலர் – 6 துவாரகையின் அரண்மனை வளாகத்துக்குள்ளேயே கல்பரப்பப்பட்ட பெரிய சதுக்கத்திலிருந்து இரு பிரிவாக பிரிந்து சென்ற பெருஞ்சாலையின் இறுதியில் இடது பக்கத்தில் கடலை நோக்கி ஒரு முகமும் நகர் பெரு முற்றத்தை நோக்கி மறுமுகமும் கொண்டு வெண்சுண்ணம் பூசப்பட்ட மரச்சுவர்கள் கடல் துமி நனைத்து காலை ஒளியில் மின்னிக் கொண்டிருக்க ஏழுமாடங்கள் கொண்டு ஓங்கி நின்றிருந்தது ஜாம்பவதியின் அரண்மனை. அதன் முகப்பில் கரிய பெருங்கைகளை மல்லிட அழைப்பதுபோல் விரித்து எரியும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76528/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 31

பகுதி ஆறு : மணிமருள் மலர் – 4 திருஷ்டத்யும்னன் விருந்தினர் அரண்மனையை அடைந்து தன் அறைக்குச்செல்ல இடைநாழியில் நுழைந்தபோது எதிரே சாத்யகி வருவதைக் கண்டான். புன்னகையுடன் “எனக்காகக் காத்திருந்தீரோ?” என்றான். சாத்யகி “ஆம், சந்திப்பு இவ்வளவு நீளுமென நான் எண்ணவில்லை” என்றான். “நெடுநேரம் பேசவில்லை என்றே உணர்கிறேன்” என்றான் திருஷ்டத்யும்னன். “யாதவ அரசி எவருடனும் மிகச் சுருக்கமாகவே பேசும் இயல்புடையவர்” என்றான் சாத்யகி. “ஆணைகளை பிறப்பிப்பது மட்டுமே அவரது இயல்பு. மீறமுடியாத ஆணைகள் எப்போதுமே மிகச்சுருக்கமானவை.” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76405/

» Newer posts