Tag Archive: ஜலன்

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-3

இரு கைகளையும் தூக்கி ஆர்ப்பரித்தபடி செருகளத்தின் முகப்பு நோக்கி ஓடிய அம்பையைத் தொடர்ந்து இருபக்கமும் அம்பிகையும் அம்பாலிகையும் சென்றனர். அவர்களின் குரல் கேட்டு அங்கே துயின்றுகிடந்த போர்வீரர்கள் அனைவரும் எழுந்தனர். ஒற்றைச்சரடால் கோக்கப்பட்ட பாவைகள் என ஒருவரால் ஒருவர் தூக்கப்பட்டு எழுந்து படைக்கலங்களைத் தூக்கி ஆட்டி போர்க்கூச்சலெழுப்பியபடி அவளுடன் பெருகிச்சென்றனர். துறுத்த கனல்விழிகளும் இளித்த வெண்பற்களும் பெருகிச்சுழலும் கைகளுமாக ஆழுலகத் தெய்வங்கள் அவர்களுடன் ஊடுகலந்து கொந்தளித்தன. கன்னங்கரு நிறத்தில் ஒரு நதி அலையடித்துச் சரிவிறங்குவதுபோல அப்படை முன்னால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112750

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-2

பாண்டவப் படைகளின் நடுவினூடாக காசிநாட்டு இளவரசி அம்பை கூந்தல் எழுந்து நீண்டு பறக்க பெருங்குரலெழுப்பியபடி ஓடினாள். ஒவ்வொரு ஆயிரத்தவர் குழுவுக்கும் இருவர் என காவலர் சிறிய மரமேடைமேல் வேலுடன் விழித்து அமர்ந்திருந்தனர். ஒவ்வொரு அக்ஷௌகிணியின் தொடக்கத்திலும் சிறு காவலரணில் எழுவர் தாழாப் படைக்கலங்களுடன் இருந்தனர். எவரும் அவளை காணவில்லை. பெருவெள்ளம் அகன்ற பின் சேற்றில் பரவிக் கிடக்கும் சருகுகளும் சுள்ளிகளும் தடிகளும்போல பாண்டவப் படை நிலம்படிந்து துயின்றுகொண்டிருந்தது. இரவிலெழுந்த நீர்வெம்மை மிக்க காற்று அவர்களின்மேல் அசையாது நின்றிருக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112713

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-1

பகுதி ஒன்று : விண்புரள்தல் குருக்ஷேத்ரத்தில் பாண்டவரின் படைமுகப்பில் அமைந்த கொடிமேடையில் காவலிருந்த பாண்டவ வீரனாகிய ஜலன் கீழ்வானில் ஒரு சிறிய செந்தீற்றலை கண்டான். அது ஓர் எரிவிண்மீன் என எண்ணி அதை சொல்ல தன்னருகே அமர்ந்திருந்த துணைக்காவலனாகிய சோமிதனை நோக்கினான். அவன் அரைத்துயிலில் கொடித்தூணுடன் உடலைச் சேர்த்து தலைகுனிந்து முகவாய் மார்பில் படிந்திருக்க அமர்ந்திருந்தான். அவனைத் தொட்டு “எரிவிண்மீன்!” என்றான் ஜலன். “ஆம்” என துயிலிலேயே சோமிதன் மறுமொழி சொன்னான். “எரிவிண்மீன்” என்றான் ஜலன். “ஆம், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112683