Tag Archive: ஜரை

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 13

[ 9 ] ஜரையன்னையின் இளையமைந்தன் அவன் குடியினரால் பாதியுடல்கொண்டவன் என்றழைக்கப்பட்டான்.  சுட்டுவிரலில் பாதியை கட்டைவிரலால் தொட்டு அவனை அவர்கள் குறிப்பிட்டனர். குழவியென அவன் குடிக்கு வந்தபோது தன் உடன்பிறந்தானின் உடலை ஒட்டி ஒற்றைக்கையால் கவ்வி அவன் புண்ணில் வாய்பொருத்தி உறிஞ்சிக்கொண்டிருந்தான். வாயிலும் மார்பிலும் செங்குருதி வழிந்தது. அவன் புலிக்குருளை போன்றவன் என்று முதுஜரை ஒருத்தி சொன்னாள். அவனை அவர்கள் அஞ்சினர். ஜரர்களில் எவருமே அவனை தங்கள் கைகளால் தொடவில்லை. இரவெல்லாம் தன் உடன்பிறந்தவனை கவ்வி உறிஞ்சிக்கொண்டிருந்தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86639

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 12

[ 7 ] முதல்கதிர் எழுவதற்குள்ளாகவே இருமைந்தரையும் அரசத்தேரில் ஏற்றி அகம்படியினர்தொடர, மங்கல இசை முன்செல்ல நகரிலிருந்து கொண்டுசென்றனர். அரசமைந்தர் நகர்நீங்குகிறார்கள் என்னும் செய்தியை முரசங்கள் நகருக்கு அறிவித்தன. சாலையின் இருமருங்கும் கூடி நின்றிருந்த ராஜகிருஹத்தின் குடிகள் வாழ்த்தொலி எழுப்பி அவர்களை வழியனுப்பி வைத்தனர். அரண்மனை முகப்பில் பத்மர் தலைமையில் ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் கூடிநின்று முறைமைசெய்து தேரை அனுப்பிவைத்தது. கோட்டை முகப்பில் குடிமூத்தார் எழுவர் நின்று வாழ்த்தி விடையளித்தனர். முரசுகளும் கொம்புகளும் முழங்கிக்கொண்டிருந்தமையால் அச்சடங்குகள் நடந்துகொண்டிருக்கையில் எப்போதோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86516

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 10

[ 3 ] பிரம்மனில் தோன்றிய பிரஜாபதியாகிய ஆங்கிரஸுக்கு உதத்யன் பிறந்தான். உதத்யனில் பிறந்தவர் மானுடப் பிரஜாபதியான தீர்க்கதமஸ். நால்வேதம் முற்றோதியறிந்த தீர்க்கதமஸின் மைந்தர்நிரையில் முதல்வர் வேதமுனிவரான கௌதமர். கீழைவங்கத்தின் தலைநகரான கிரிவிரஜத்தில் தவக்குடில் அமைத்துத் தங்கிய கௌதமர் அங்கே தனக்கு பணிவிடை செய்யவந்த உசிநாரநாட்டைச் சேர்ந்த சூத்திர குலத்து காக்ஷிமதியில் தன் தந்தைக்கு நீர்க்கடன் செய்ய ஒரு மைந்தனைப் பெற்றார். அவனுக்கு காக்ஷீவான் என்று பெயரிட்டார். தந்தையிடமிருந்து வேதங்களை பயின்றார் காக்ஷீவான். அச்சொற்கள் மேல் தவமிருந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86463

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 9

பகுதி இரண்டு: வைகாசி [ 1 ] மகதத்துக்கு கிழக்கே, கங்கையின் கரையில், ஜராவனம் என்னும் காட்டில் வாழ்ந்த தொல்குடியினர் ஜரர்கள் என்றழைக்கப்பட்டனர். எப்போதும் மழைபொழியும் அக்காடு இலையும் கிளையும் செறிந்து செம்போத்துகளும் ஊடுருவிப் பறக்கமுடியாததாக இருந்தது. அதனூடாக குனிந்தும் தவழ்ந்தும் அலைந்தமையால் ஜரர்கள் குறிய உடல்கொண்டனர். சிறுவளைகளிலும் குகைகளிலும் மரப்பொந்துகளிலும் உடல்சுருட்டி ஒடுங்கி வாழ்ந்தனர். மழையீரம் ஒழியாத அவர்களின் உடலின் தோல் இளமையிலேயே வரிசெறிந்து வற்றிச் சுருங்கியது. முடிநரைத்து விழிகள் மங்கின. இளமையிலாதவர் எனும்பொருளில் அவர்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86431

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 34

பகுதி ஏழு : பூநாகம் – 4 விதுரர் நீராடிக்கொண்டிருக்கையில் கனகன் வந்து காத்து நிற்பதாக சுருதை சொன்னாள். வெந்நீரை அள்ளி விட்டுக்கொண்டிருந்த சேவகனை கை நீட்டித் தடுத்து “என்ன?” என்றார். “துரியோதனன் வந்திருக்கிறார் என்கிறார்” என்றாள் சுருதை. விதுரர் “துரியோதனனா?” என்றார். “ஆம்…” என்றாள் சுருதை. நீரை விடும்படி விதுரர் கைகாட்டினார். சுருதை “விரைந்து செல்வது நல்லது” என்றபின் திரும்பிச்சென்றாள். விரைந்து நீராடி புத்தாடை அணிந்து கூந்தல் நீர் சொட்ட விதுரர் வந்து கனகனை நோக்கி “வெறும் வரவா?” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65993

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 47

பகுதி ஒன்பது : ஆடியின் ஆழம் [ 5 ] தண்டகர் என்ற நாகசூதர் சொன்னார். “வீரரே, பருந்துகளுக்கு தொலைப்பார்வையையும் எலிகளுக்கு அண்மைப்பார்வையையும் அளித்த அன்னைநாகங்களை வாழ்த்துங்கள். பார்வையின் எல்லையை மீறியவர்கள் தங்களை இழக்கிறார்கள். அவர்கள் மீண்டுவருவதற்கு பாதைகள் இல்லை.” அவர் முன் அமர்ந்திருந்த பீஷ்மர் “திரும்புவதற்கு பாதையில்லாமல் பயணம் செய்பவர்களே வீரர்கள் எனப்படுகிறார்கள்” என்றார். “ஆம், அவர்கள் ஒவ்வொரு தலைமுறையிலும் பிறந்து வந்துகொண்டே இருக்கிறார்கள்” என்றார் தண்டகர். “வீரரே, முடிவின்மையை உணராத எவரும் இப்பூமியில் இல்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/45499