Tag Archive: ஜயதேவ அஷ்டபதி

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’

வண்ணக்கடல் எழுதத் தொடங்கும்போது அதில் கிருஷ்ணனின் கதையும் வந்துவிடும் என்றே நினைத்தேன். வண்ணக்கடல் என்னும் தலைப்புக்கே அந்த நோக்கம் இருந்தது. ஆனால் அந்தக் கட்டமைப்புக்குள் கண்ணன் வரமுடியாது என்பது போகப்போகத் தெரிந்தது. மகாபாரதத்தில் உள்ள கிருஷ்ணனுக்கும் பாகவதத்தில் உள்ள கிருஷ்ணனுக்கும் ஏராளமான வேறுபாடுண்டு. மூலமகாபாரதம் கிருஷ்ணனின் இளமைலீலைகளை எல்லாம் விரிவாகச் சொல்வதில்லை. அதில் வரும் கிருஷ்ணன் கவிஞனும் ஞானியும் ராஜதந்திரியுமான யாதவஅரசன் மட்டுமே. மகாபாரத காலம் முடிந்தபின்னர் இந்தியநிலத்தின் பெரும்பகுதி வெவ்வேறு யாதவ அரசுகளால் ஆளப்பட்டது. மகதம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/58240