Tag Archive: ஜம்மு

காஷ்மீரில் நிகழ்வது…

எந்த ஒரு விஷயத்தையும் நாளிதழ்களின் ஒற்றைவரிச்செய்திகள் வழியாகவே அறிந்துகொண்டு அரசியல் முன்முடிவுகளையும் பல்வேறு காழ்ப்புகளையும் கலந்து எழுதும் அரசியலெழுத்தாளர்களையே நாம் பெற்றிருக்கிறோம். எழுதும் விஷயத்தின் பின்புலத்தைப்புரிந்துகொள்வதோ, அதற்கென ஓர் எளியபயணத்தையாவது மேற்கொள்வதோ இங்கே மிக அரிது. இவர்கள் உருவாக்கியளிக்கும் சித்திரங்களை ஒட்டியே நம் சராசரி மனங்கள் தங்கள் அரசியல் பார்வைகளை உருவாக்கிக்கொண்டுள்ளன காஷ்மீர், வடகிழக்கு அரசியலைப்பற்றி இங்கு முன்வைக்கப்படும் பார்வைகள் மிகமிக உள்நோக்கம் கொண்டவை, பிழையானவை என்பதை நான் எப்போதுமே சொல்லிவந்திருக்கிறேன். அங்குள்ள நடைமுறைக்கும் யதார்த்தத்துக்கும் இவர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66702

இமயச்சாரல் – 21

பில்லாவரிலிருந்து மாலையிலேயே கிளம்பி நேராக பாசோலி என்ற சிற்றூரை அடைந்தோம. உண்மையில் அது ஒரு நகரம். ஆனால் அங்கே பயணிகளின் வருகை அறவே இல்லாத காரணத்தால் தங்கும் வசதிகள் இல்லை. செய்திகளில் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல் என்று செய்தி வந்துகொண்டிருப்பதனால் பெரிதும் பாதிக்கப்படுவது அமைதிப்பகுதியான ஜம்முதான். பாசோலியில் ஒரு அரசு விருந்தினர் மாளிகையை தேடிப்பிடித்து கெஞ்சி இடம்பெற்று தங்கினோம். மெத்தையில் இருந்து வந்த மட்கும் நெடியையும் கழிப்பறை வாடையையும் தாங்கிக்கொண்டு தூங்க வைத்தது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/60484

இமயச்சாரல் – 20

ஜம்மு பகுதியை ஆலயங்களின் மாபெரும் இடுகாடு என்று ‘அலங்காரமாக’ சொல்லிவிடலாம். இந்தியக் கட்டிடக்கலையின் பிறப்பிடங்களில் ஒன்று இது. ஏனென்றால் காஷ்மீர சைவமும் பௌத்தமும் ஓங்கியமண். நேரடியாக காந்தாரக் கட்டிடக்கலையின் செல்வாக்கு இங்கே வந்தது. ஆகவே குறிப்பிடத்தக்க இரு கட்டடக்கலைகள் இங்கே உருவாயின. ஒரு முறையின் உச்சம் மார்த்தாண்ட் ஆலயம். ஜம்மு முழுக்க இன்னொரு வகையான கட்டடக்கலை உருவாகி வளர்ந்ததன் தடயங்கள் உள்ளன. அத்தனை கோயில்களும் இடிக்கப்பட்டன. பெரும்பாலானவை அடித்தளங்களாக எஞ்சுகின்றன. பாதிப்பங்கு இடிக்கப்பட்டு எஞ்சும் ஆலயங்களே நூற்றுக்கணக்கானவை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/60459

இமயச்சாரல் – 2

ரியாசி நகரில் ஒரு சர்தார்ஜியின் விடுதியில் தங்கினோம். எங்களைத்தவிர அங்கே வேறு விருந்தினர் எவருமில்லை. பொதுவாக ஜம்மு அமைதியான ஊர். ஆனால் ஜம்மு-காஷ்மீர் என்று பெயர் இருப்பதனாலேயே இங்கும் சுற்றுலாப்பயணிகள் அதிகம் வருவதில்லை. அமர்நாத் பயணம் செல்பவர்கள் மட்டுமே ஓரளவு இப்பகுதியின் சுற்றுலாத்தொழிலை நிலைநிறுத்துகிறார்கள். காலையில் எழும்போது நல்ல வெளிச்சம். இங்கே இரவு எட்டரைக்குத்தான் ஒளி மறைகிறது. காலை ஐந்துக்கே விடிந்தும் விடுகிறது. ஆனால் பகல் முழுக்க இளந்தூறலுடன் மழை இருந்தது. எழுந்ததும் அருகே மலையடிவாரத்தில் சீனாப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/58550