Tag Archive: ஜப்பான் – ஒரு கீற்றோவியம்

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -16

  மே 16, ஜப்பானில் இருந்து கிளம்பும் நாள். செந்திலின் இல்லத்தில்தான் முதல் ஐந்துநாட்களும் தங்கியிருந்தோம். விசாவுக்காக விடுதி அறை போடவேண்டியிருந்தது. அதை ரத்துசெய்தாலும் பாதி செலவாகும். ஆகவே இறுதி இரண்டு நாட்கள் விடுதியில் தங்கினோம். ஜப்பானிய விடுதிகள் வசதியானவை. ஆனால் சிறியவை. ஆடம்பரங்கள் இருப்பதில்லை. அதேசமயம் உபசரிப்பு மிக மிக தொழில்முறையானது. ஒரு சிறிய கோரிக்கைகூட நிறைவேற்றப்படும்.காலையுணவு ஜப்பானிய முறைப்படி இருந்தது. காலையில் செந்திலின் இல்லத்திற்குச் சென்று விடைபெற்றுக்கொண்டோம். அவருடைய மனைவி காயத்ரி குழந்தைகள் கவின்,காவ்யா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123625/

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -15

[இணையத்திலிருந்து- உதாரணத்துக்காக] காமகுராவின் வழியாக ஜப்பானின் தொன்மையில் இருந்து இன்றைய ஜப்பானின் மையமென தோன்றிய ஒடைய்பா (Odaiba)வுக்குச் சென்றோம். ஒடைய்பா என்பது டோக்கியோ வளைகுடாவில் உள்ள ஒரு பெரிய செயற்கைத்தீவு. வானவில் பாலம் என்னும் பெரிய அமைப்பு மையநிலத்துடன் ஒடைவாவை இணைக்கிறது. 1850ல் பாதுகாப்புக் காரணங்களுக்காக இது அமைக்கப்பட்டது. அன்று இது ஒரு துறைமுக வாயில்.1990ல் இது ஒரு வணிக- கேளிக்கை மையமாக மாற்றியமைக்கப்பட்டது. இதை நியூயார்க்கின் மன்ஹாட்டன் ஸ்கைலைனின் ஒரு ஜப்பானிய மாதிரியாக ஆக்க முயன்றிருக்கிறார்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123609/

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -14

ஒரு நகரை நாம் ஒற்றைநோக்கில் பார்க்க முடியாது. அதிலும் வரலாற்று நகர்களை ஒன்றன்மேல் ஒன்றென அடுக்கப்பட்டவையாகவே பார்க்கவேண்டும். தொன்மையான வரலாற்று நகர்கள் பற்பல காலகட்டங்கள், பற்பல பண்பாட்டுத் தளங்கள் கொண்டவை. மதுரையைப் பார்க்க விழையும் ஒருவர் முதலில் மதுரையைச் சூழ்ந்திருக்கும் எண்பெருங்குன்றங்களைப் பார்க்கவேண்டும். மதுரையை வடிவமைத்த சமணப் பண்பாட்டிலிருந்து தொடங்கி அறுதியாக திருமலைநாயக்கர் மகால் வரை வந்து சேரவேண்டும். அதுவே மதுரையின் பரிணாமத்தை அறியும் வழி. ஆனால் இது ஒரு கீற்றுப்புரிதலை அடைவதற்கான பயணம்தான். இன்னொரு கோணத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123581/

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -13

  காமகுரா  ஜப்பானின் வரலாற்றின் அடித்தளத்தில் மண்ணில் படிந்து கிடக்கும் நகரம். ஜப்பானிய வரலாறே அதிலிருந்துதான் தொடங்குகிறது. ஒப்புநோக்க நம்முடைய மாநகர் மதுரைக்கு நிகரானது. மதுரை இரண்டாயிரம் ஆண்டுகளாக தொடர்ச்சியாக பெருநகராகவும் தலைநகராகவும் திகழ்ந்திருக்கிறது. காமகுரா கிபி இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் ஜப்பானின் அதிகாரமையமாக திகழ்ந்து தலைநகரமாக ஆகி ஏழாம் நூற்றாண்டு வரை தொடர்ந்திருக்கிறது. அதாவது சங்க காலத்திலிருந்து களப்பிரர் காலம் முடிய என்று எண்ணிக்க்கொள்ளலாம். இன்று சுற்றுலா நகரமாக காமகுரா திகழ்கிறது. காமகுரா ஜப்பானின் தலைநகரமாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123524/

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -12

தலைநகரங்களில் அரசர்களின் அரண்மனைகள் இருப்பது வழக்கமாகக் காணக்கிடைப்பது .அவை சுற்றுலாத்தலங்களாக மாறிவிட்டிருக்கும். யானை கோமாளிவேடம் அணிந்து சர்க்கஸ் வளையத்திற்கு வருவதுபோன்றது அது. அரண்மனை என்றாலே அரண் கொண்ட இல்லம்தான். அது காட்சியிடமாகும்போது அங்கே அரண் இல்லை. எஞ்சுவது வெறும் மனை. நான் பார்த்தவற்றில் மலைப்பூட்டிய அரண்மனை பிரான்ஸின் வெர்ஸேல்ஸ் அரண்மனை. அது  கலைக்கூடம், அருங்காட்சியகம், சிறை, நினைவில்லம் ஆகியவற்றின் கலவை. மிக எளிமையாக இருந்தது இந்தோனேஷியாவில் யோக்யகர்த்தாவில் கண்ட சுல்தானின் அரண்மனை. நம்மூர் பண்ணையார் வீடு போல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123490/

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -11

  ஒரு நாட்டின் தலைநகரைப் பார்ப்பதென்பது அதன் பிற இடங்களைப் பார்ப்பதைவிட அரிதான ஓர் அனுபவம். பிற நகர்களில் வணிகம், தொழில், சுற்றுலா என பல கூறுகள் இருக்கும் .தலைநகர்களில் நேரடியாகவே அதிகாரம் திகழும். அதிகாரம் என பொதுவாகச் சொல்கிறோம். நான் அதன் வெளிப்படையான அடையாளங்களை மட்டும் சொல்லவில்லை. அதிகாரச் சின்னங்களான கோட்டைகள், அரண்மனைகள், அரசகுடிகளுக்கான சமாதியிடங்கள், வெற்றித்தூபங்கள் என பல அங்கே இருக்கும். அவற்றுக்கு அப்பால் நாம் அந்த இடத்திற்கே உரிய ஓர் குறீயீடை நாமே  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123464/

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -10

  குரு நித்யா மறைந்தபோது  ஊட்டி நாராயணகுருகுலத்தில் அவருடைய சமாதியிடம் ஜப்பானிய முறைப்படி அமைக்கப்பட்டது. குருவின் ஜப்பானிய மாணவியான மியாகோ அதை அமைக்க முயற்சி எடுத்துக்கொண்டார். அதைச்சுற்றி குருவின் விருப்பப்படி ஒரு ஜப்பானியத் தோட்டமும் அமைக்கப்பட்டது. பத்தாண்டுகளுக்குப்பின் தொடர்ச்சியான பராமரிப்பின்மையால் அது அழிந்தது அந்த ஜப்பானியத்தோட்டம் உருவாக்கப்படுகையில் நான் உடனிருந்தேன். ஜப்பானியத் தோட்டக்கலை என்றால் என்ன என்பதை அணுகி அறிந்தேன். ஜப்பானியத் தோட்டக்கலையின் நெறிகள் மூன்று. ஒன்று: மிகக்குறுகலான இடத்திற்குள் அது அமைக்கப்படுகிறது. இருநூறு சதுர அடி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123425/

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -9

டோக்கியோ உலகின் மக்கள் தொகை மிகுந்த நகரங்களில் ஒன்று. ஏறத்தாழ ஒருகொடிப்பேர் வாழ்கிறார்கள். நகரின் மையப்பகுதிகள், உச்சிப்பொழுதுகளில் மிகமிக நெரிசலானவை. ஆனால் குடியிருப்புப் பகுதிகளில் பூங்காக்கள், நீண்ட கால்நடை பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் விரிந்த திறந்த வெளி பேணப்படுகிறது. நகரின் 36 சதவீதம் இயற்கைக்காடாக பேணப்படுகிறது என்கிறது ஆவணக்குறிப்பு நான் இதுவரைக்கும் சென்ற உலக நகரங்கள் அனைத்துமே திறந்த வெளிகளை மிகப்பெரிய செல்வமாக கருதுகின்றன .மக்கள் நெரிசலாக வாழும் நகரங்களில் திறந்த வெளிகள் இல்லையேல் அது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123408/

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -8

  ஜப்பானியப் பயணத்தை திட்டமிடும்போதே என் உள்ளத்தில் இருந்தது ஃப்யூஜியாமா. வெவ்வேறு திரைப்படங்களிலும் ஆவணப்படங்களிலும் அந்த தொன்மையான எரிமலையை நான் பார்த்திருக்கிறேன். ஒரு படத்தில் ஜாக்கிசான் மாபெரும் பலூன் ஒன்றுக்குள் புகுந்து அதிலிருந்து உருண்டே கீழே வருவார். மிகச்சிறுவனாக இருந்த போது பாடப்புத்தகத்தில் உலகின் மகத்தான் எரிமலைகளில் வெசூவியஸ், ஃபியூஜியாமா என்று படித்த நினைவு. கலைக்களஞ்சியத்தில் ஃப்யூஜியின் கருப்பு வெள்ளை படங்களைப் பார்த்திருக்கிறேன். மீண்டும் சில ஆண்டுகள் கழித்து நேஷனல் ஜியோகிராபிக் இதழில் இருபக்கங்களிலாக விரிந்த மாபெரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123351/

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -7

ஹிரோஷிமா அளித்த ஆழ்ந்த அதிர்ச்சியை வெவ்வேறு வகையில் பேசிப்பேசிச் சீரமைத்துக்கொண்டிருந்தோம். ஹிரோஷிமாவைப்பற்றி பேசுவது ஒருவகை. ஹிரோஷிமா அல்லாதவற்றைப் பேசுவது இன்னொரு வகை. ஹிரோஷிமா பற்றிய பேச்சு எப்போதுமே நம்மை அதிலிருந்து விலக்கிக்கொள்வதாகவே அமைவதைக் கவனித்தேன். அதாவது அணுகுண்டுவெடிப்புக்கு முழுக்காரணமும் மேலைநாட்டு அறிவியல் மேலாதிக்கம், அதை கருவியாகக் கொண்டு உலகைவெல்லவேண்டும் என்னும் அவர்களின் மிதப்பு, அதற்கு வழிவகுத்த தொழிற்புரட்சி, அதன் விளைவான நுகர்வு வெறி. உடனே தாயக்கட்டை மறுபக்கம் திரும்பி ஜப்பானின் போர்வெறி, உலகமெங்கும் ஜப்பான் இழைத்த மன்னிக்கமுடியாத …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123325/

Older posts «