Tag Archive: ஜனநாயகம்

மதமாற்ற தடைச்சட்டமும் ஜனநாயகமும்

தமிழகத்தின் மதமாற்ற தடைச் சட்டம் ஏற்கத் தக்கதல்ல என்பதற்கு இக்கருத்தரங்கில் கூறப் பட்ட காரணங்களை நான் வழி மொழிகிறேன். இந்தச் சட்டம், சமூகங்களுக்கு இடையே மனக் கசப்பையும் அவநம்பிக்கையையும் வளர்க்கக் கூடியதாக உள்ளது. நம்முடைய தேசத்தில் மதம் சில தளங்களை தவிர்த்துப் பார்த்தால் தனிப்பட்ட நம்பிக்கை என்ற தளத்தில் இயங்கவில்லை. தனிப்பட்ட நிலைபாடு என்ற தளம் அதற்கு முற்றிலும் இல்லை.இங்கே மதம் என்பது மத அடிப்படையிலான சமூகங்கள் என்றே பொருள் படுகிறது. ஆகவே மத விஷயங்களில் கூட்டாகச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/601

அமெரிக்க இலட்சியவாதம்

திரு ஜெ உங்களுடைய இன்றைய கட்டுரை ’அமெரிக்கா கனடா ஐம்பது நாட்கள்’ சுருக்கமாக நன்றாக இருந்தது. நீங்கள் சென்று 50 நாட்கள் ஆகிவிட்டது என்பது வியப்பாக இருக்கிறது. ஒரே ஒரு விளக்கம் தந்தால் நல்லது. கட்டுரையில் “அமெரிக்க வழிபாட்டாளர் , ஆனால் அந்நாட்டின் செல்வம் வெற்றி ஆகியவற்றுக்கு மேலாக அதன் இலட்சியவாதமே அவரை கவர்ந்திருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அமெரிக்க இலட்சியவாதம் பற்றி கொஞ்சம் விரிவாக விளக்க முடியுமா ? தளத்தில் முன்னரே எங்கேனும் இதைப்பற்றிய விளக்கங்கள் உள்ளதா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77501

ஜனநாயகம் என்பது -கடிதங்கள்

“ஜனநாயகத்தைப்புரிந்துகொள்ளாத ஒருவர் அந்தச் சர்வாதிகாரத்தை அமைதி என்றும் உறுதி என்றும் விளங்கிக்கொள்வார். ஜனநாயகத்தை கூச்சல் என்றும் என்றும் நினைப்பார். அத்தனை தடுமாற்றங்களுடனும் நிலையின்மையுடனும் ஜனநாயகம் சரியான பாதையில் செல்கிறது, அத்தனை உறுதியுடன் சர்வாதிகாரம் மக்களுக்கெதிரான பாதையில் செல்கிறது என்பதே அதற்கான பதிலாகும்.” இந்திய ஜனநாயகத்தையும், சீன எதேச்சதிகாரத்தையும் ஒப்புநோக்கி, விமர்சிப்பவர்கள் பலரும் கொண்டிருக்கும் கருத்துக்கான விளக்கமும் பதிலும் இதுவே. இதையே காந்தி, தனது உரை ஒன்றில், “Their railways, telegraphs and telephones – did they …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/45296

சாதிக்கட்சிகள்

மதிப்புக்குரிய ஜெ, நலமா? இளவரசனின் மரணம் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்ப்படுத்தி இருக்கிறது. அரசியல் காரணங்களுக்காக இரு குடும்பங்கள் முழுதாக சிதைக்கப்பட்டிருக்கிறது. பா.ம.க மீது தொடுக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. பா.ம.க போன்றச் சாதிக் கட்சிகள் எந்த காலக்கட்டத்திலும் நாட்டிற்குக் கேடுதான். ஆனால் ஒரு குறிப்பிட்ட கட்சியை மட்டும் நோக்கி நாம் பாய்வது அர்த்தம்முள்ளதா? சாதி வெறி தூண்டும் கட்சிகளை மட்டும் நாம் எதிர்க்கிறோம் என்பது மீண்டும் அவர்களை ஒருங்கிணைத்துக்கொள்ள மட்டுமே வழி வகுக்குமல்லவா? …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38638

கலங்கியநதி – கடிதங்கள்

அன்புள்ள சார், “இன்னொருவகையில்கூடப் பார்க்கலாம். ரமேஷ் அவனுடைய தந்தையிடம்தான் தொடங்குகிறான். அவர் தன் காலகட்டத்து இலட்சியவாதமான காந்தியத்தால் ஈர்க்கப்பட்டது போல அவன் தன் காலகட்டத்து இலட்சியவாதமான மார்க்ஸியத்தால் ஈர்க்கப்படுகிறான். ஆனால் அவரைப்போலவே அவனும் நதியில் இறங்காமல் கரையில் கால்நடுங்கக் காத்து நிற்கிறான். அந்தக் கலக்கம்தான் இந்நாவல் முழுக்கப் பலகோணங்களில் விவரிக்கப்படுகிறது. ஆர்வமும் விரக்தியும் எழுச்சியும் கசப்பும் மாறி மாறி வரும் அவன் மனநிலை அதையே காட்டுகிறது. நேர்மாறானவர் ராஜவன்ஷி. அவர் நதியில் குதித்து நீந்துபவர். கடைசிக் கணம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25825

காங்கிரஸும் அண்ணாவும்

அண்ணா ஹசாரேவை காங்கிரஸ் எதிர்கொள்ளும் விதம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவர்கள் ஜனநாயக முறைப்படித்தானே செயல்படுகிறார்கள்? அதை நீங்கள் பாராட்டவில்லையா? சாமிநாதன் அன்புள்ள சாமிநாதன் இன்றைய செய்தி, சற்றுமுன் பார்த்தது. அண்ணா ஹசாரே போராட்டத்தை எதிர்க்க மதச்சிறுபான்மையினரை ஒருங்கிணைத்துள்ளது காங்கிரஸ் அரசு http://expressbuzz.com/nation/foxed-upa-government-tries-to-play-minority-card/306758.html இவர்கள் எல்லாருமே முன்னர் அண்ணாவை ஆதரித்துப்பேசியவர்கள். சட்டென்று நேரெதிராக திரும்புகிறார்கள். திருப்பப்படுகிறார்கள். அண்ணா ஹசாரே போராட்டம் உயர்சாதிப்போராட்டமாம், சில தலித் தலைவர்களை காங்கிரஸ் முன்னிறுத்துகிறது. அவர்கள் அண்ணா ஹசாரேவுக்கு எதிராகப் போட்டிப் போராட்டம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20057

அண்ணா ஹசாரே- ஜனநாயகக் கேள்விகள்

இவர்கள் சொல்கிற ஜன்லோக்பால் உண்மையிலேயே சக்தி வாய்ந்ததுதானா?அது பாராளுமன்றத்துக்கு வெளியே ஒரு கடுமதிகாரசக்தியாக உருவெடுக்கும் என சிலரின் ஐயத்தில் நானும் சேர்ந்துகொள்கிறேன்.குறுக்குவழியில் புதிய தலைவீங்கி தலைவர்கள், தலைவலிகளை உருவாக்கும் அமைப்பாக இது மாறிவிடாதா? போகன் அன்புள்ள போகன் இதே கேள்வியை எத்தனையோ முறை எத்தனையோ விதங்களில் சந்தித்திருக்கிறேன். முக்கியமாக எண்பதுகளில் சுற்றுச்சூழல் சார்ந்த மக்களியக்கங்கள் உருவாகி வந்தபோது இந்தக் கேள்வி இப்படியே கேட்கப்பட்டது. ‘இந்த அமைப்புகளை நடத்தும் குழுக்கள் அரசு நிறுவனங்கள், அரசியல்வாதிகள் மேல் அதிகாரம்செலுத்தும் தனியார் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19989

அண்ணா ஹசாரே- மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன?

அன்புள்ள ஜெயமோகனுக்கு, திரும்ப திரும்ப அன்னாவைப் பற்றி உங்களிடம் கேள்விகள் வருவதில் எனக்கு ஆச்சர்யம் இல்லை. அநேகமாக உங்களுக்கும்? :). இப்போதைக்கு காந்தியை பற்றி தெரிந்து கொள்ள, இருக்கும் வெகு சிலரில் நீங்களும் ஒருவர் என்ற எண்ணம பரவலாக இருப்பது ஒரு முக்கியமான காரணம் என்றே நினைக்கிறன். ஆகவே கோபப்படாமல் மேலும் ஒரு சில கேள்விகளுக்கு உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். (உண்மையிலேயே உங்கள் கோபம மட்டும்தான் என்னை பயமுறுத்துகிறது அதுவும் எழுத்து மூலமாக மட்டும்!! நேரில் எப்படியோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19896

பொங்கல்,பண்பாடு -கடிதங்கள்

அன்புள்ள ஜே எம் இந்த வேகமான காலத்தில் பொங்கல் கொண்டாடுவது குறைந்து விட்டது. ஆனால் மறைந்து விடவில்லை. இன்னும் எங்கள் வீட்டிலும் மற்றும் திருநெல்வேலி சைவ பிள்ளைமார் வீடுகளில் பொங்கல் மிகவும் பிரசித்தம் ஐயா. மார்கழி மாதம் பூராவும் வீட்டை வெள்ளை அடித்து, எங்களை வேலை வாங்குவார்கள். தை மாதம் முதல் தேதி பொங்கல், மறுநாள் மாட்டு பொங்கல், அப்புறம் சிறு வீட்டு பொங்கல் என்று மூன்று பொங்கல்கள் உண்டு. மண் கட்டி அடுப்பு வைத்து மூன்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11615