Tag Archive: சௌந்தர்

வண்ணமும் மென்மையும்…. சௌந்தர்

இந்த தேசத்தின் ஒவ்வொரு நகரத்தின் கடைசி தெருவிலும் தொடங்குகிறது ஒரு கிராமம், ஒவ்வொரு கிராமத்தின் தெருக்கள் தோறும், வழியனுப்பி வைத்திருக்கிறது அந்த நகரத்தின் மாந்தர்களை. இங்கு நகரமெங்கும் தொட்டிகளிலேனும் வளர்க்கப்படுகிறது ஒரு செடி. தன் கிராமத்தில் விட்டு வந்த பசுமையான நினைவை, அந்த காட்டை, பசுமையை தொலைக்க மனமுமில்லாமல், ‘’பிழைப்பு’’ என்கிற காலில் கட்டப்பட்ட இரும்புக்குண்டை கழட்டிடவும் முடியாமல், அறுபடாத தொப்புள்கொடி உறவாய், தொட்டிகளில் வளர்கிறது அந்த ஒரு செடி. ‘’பாரம்’ மிகுந்த அல்லது மகிழ்ச்சி பொங்குகிற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/93140

சென்னையில் நண்பர்களுடன்…

சென்னையில் வரும் 30-4-2016 முதல் மூன்றுநாட்கள் இருப்பேன். சென்னையில் என் நண்பரும் யோகக்கலை ஆசிரியருமான சௌந்தர் அவர்கள் கட்டியிருக்கும் சத்யானந்தா யோகப்பயிற்சி நிலையத்தின் திறப்புவிழா. சௌந்தர் முன்னரே யோகநிலையம் நடத்திவருகிறார். அங்குதான் வெண்முரசு விமர்சனக்கூட்டம் மாதம்தோறும் நிகழ்ந்து வருகிறது. அதை இப்போது விரிவாக்கிக் கட்டியிருக்கிறார். மே மாதம் ஒன்றாம் தேதி யோகநிலையம் திறப்பு. அன்றே அங்கு நண்பர் டாக்டர் சுநீல் கிருஷ்ணன் அவர்களின் ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை நிலையமும் தொடங்கப்படுகிறது.  அன்று மாலை 4.00 மணிக்கு நடைபெறும் வெண்முரசு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87389

மெட்ராஸ் கலை பண்பாட்டுக் கழக சந்திப்பு- சௌந்தர்

மாகாவில் திரு ஜெயமோகன் சொற்பொழிவு ஒரு திருமண மண்டபம் போல் ஜோடனை செய்யப்பட்டிருந்த அரங்கு. அதற்கேற்ப இருவர் அமரும் மேடை. எல்லோரும் வந்துவிட்டார்களா என்ற விசனத்துடன் அங்குமிங்கும் நடைபயிலும் மணமகளின் தந்தையார் போல் நீண்ட ஜிப்பாவில் கையில் பொன்னாடையுடன் மாகாவின் ஒருங்கிணைப்பாளர் இரகுராமன் ஒருபக்கம். சிற்றுண்டியுடன் நல்ல வரவேற்பு மறுபக்கம். கையில் அழைப்பிதழ் போன்ற தமிழ்த்தாய் வாழ்த்து வேண்டியவருக்கு நான் விநியோகம் செய்து கொண்டிருந்தேன். கோயில் குருக்களும் அருகிலேயே இருந்தார். ‘என்ன நடக்க இருக்கிறது இங்கே, கல்யாணமா? …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76371