Tag Archive: சோற்றுக்கணக்கு

உங்கள் கதைகள்-கடிதம்

ஜெ, தங்களது இணய தளத்தில் வட கிழக்குப் பயணம் பற்றிய கட்டுரைகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஐம்பது வயதுகளைத் தாண்டி, நாயர் புலி வாலைப் பிடித்த கதையாக, வர்த்தக உலகின் ஓட்டத்தில் இருந்து விடுபட முடியாமல் தவிக்கும் எனக்கு, உங்களைப் பார்க்கும் போது பொறாமையாக இருக்கிறது. மனதுக்கு இனிய நண்பர்களுடன், வட கிழக்கின் இயற்கைச் சூழலில் சுற்றி வருவது ஒரு பெரிய பாக்கியம். பத்து ஆண்டுகளுக்கு முன் உங்களது எழுத்துக்களைப் படிக்க முயன்று தோல்வி அடைந்திருக்கிறேன். தி.ஜானகிராமன், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19545

கதைகள் சிந்தனைகள் கடிதங்கள்

வணக்கம்ங்க.. இப்பத்தான் சோற்றுக்கணக்கு கதை படிச்சு முடிச்சேன். சத்தியமா நான் அதிகமா சிறுகதைகள் படிப்பதே இல்லை. அப்படியே படிச்சாலும் நகைச்சுவையான கதைகள் மட்டுமே படிப்பேன். ஆனா இந்தக் கதை படிக்கும்போது பல இடங்களில் சிலிர்ப்பினை உணர்ந்தேன். இந்தக் கதையின் தாக்கத்தில் இருந்து வெளியே வருவதற்கு கண்டிப்பா இரண்டுநாட்களுக்கு மேல ஆகும். கண்ணுல தண்ணி வருதா இல்ல , எனக்கு இப்ப என்ன ஆகுதுனே தெரியாம இருக்கேன். என் மனதினை முழுவதும் உள்ளவந்து உட்கார்ந்தது போல இருக்கு. இனிமேல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13993

சோற்றுக்கணக்கு-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், நலமா? உங்கள் எழுத்தை என்னவென்று சொல்ல? அறம், சோற்று கணக்கு கதைகள் பற்றி எல்லோரும் நிரம்ப எழுதியாகிவிட்டது. இவ்விரு கதைகளை ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் மனம் பொங்குகிறது. இது வரை தமிழில் உங்களுக்கு எழுதியதில்லை. தவறு இருந்தால் மன்னிக்கவும். நான் தஞ்சையில் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவள். கூட்டுக்குடும்பம். எங்கள் குடுமபம், சித்தப்பா குடும்பம், பாட்டி என ஒன்பது பேர். ஓயாமல் விருந்தினர். எனக்கு கிடைத்த அன்புக்குக் குறைவில்லை. நல்ல சாப்படு கிடைக்கும். ஆனால், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12971

தாயார்பாதம்,சோற்றுக்கணக்கு,மத்துறுதயிர்-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார் அவர்களுக்கு , மத்துறு தயிர் சிறுகதையை வாசித்தேன். சார், குரு-சீடன் உறவின் அதி அற்புத நிகழ்வுகளைத் தன்னுள் பொதிந்து நகரும் சிறுகதை. .. கம்பராமாயணத்தை தேவசகாயம் நாடாரு சொல்லி அறிமுகமானது. அந்த நிலையிலிருந்து தற்போது பேராசிரியர் மூலம்; வியக்கும் படியான வாசகர்கள் இருவரும் ; பேராசிரியர் ஐ ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்களின் மூலமாக உங்களின் நினைவுகளே புனைவுகளாக மாறுகிறது என்று தொகுத்து கொண்டேன்.  மேலும் ராஜம் சொல்லவே வேணாம் ராஜமார்தண்டனையே என்று நினைக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12754

கதைகள், கடிதங்கள்

அன்புள்ள ஜெ கெத்தேல் சாகிப் பாணி கடைகள் இன்று சாத்தியமா, இல்லையென்றால் என்ன காரணம்? நன்மை தீமை அனைத்து காலத்திலும் உள்ளது தானே, இப்பொழுது நாணயம் முற்றிலும் அற்றுப்போய் விட்டதா?. இந்த சூழல் தொடரும் பட்சத்தில் எதிர்கால அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக நாணயமே இல்லா உலகமாக மாறிவிடுமா?. உங்கள் பார்வை… அன்புடன் அரவிந்த் சொக்கன் கெத்தேல் சாகிப் பாணி கடைகள் இன்றும் உள்ளன. கேரளத்தில் ஒருமுறை பயணம் செய்யும்போது மலப்புரத்தில் ஓர் ஓட்டலில் சாப்பிட்டிருக்கிறேன். அந்த பாய் காசு வாங்கவில்லை, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12332

ஒருகெத்தேல் சாகிப்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, கடந்த மூன்று வருடங்களாகத் தங்களது படைப்புகளை உங்களது இணையதளத்திலும் உங்களது புத்தகங்களின் வாயிலாகவும் வாசித்தும் ரசித்தும் வருகிறேன். கடந்த வாரங்களில் தங்களின் சிறுகதைப் பிரவாகத்தில் மிகவும் ஈர்த்த சிறுகதை ”கெத்தேல் சாகிப்”. இன்றைய இந்து ஆங்கில நாளிதழில் மதுரையிலும் அவரைப் போல, எளியோரின் பசிப்பிணி தீர்க்கும் ஒரு முதியவர் பற்றிய தகவலை நான் வாசித்தேன். அந்த இணைப்பை இத்துடன் உங்களுக்கு அனுப்பி அச்செய்தியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். http://www.hindu.com/mp/2011/03/10/stories/2011031050650200.htm மனிதநேயம் எங்கெங்கும் நிறைந்திருக்கிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13355

சோற்றுக்கணக்குபற்றி ஒரு கடிதம்

அன்புள்ள ஆபிதீன், நீங்கள் என்னுடைய சோற்றுக்கணக்கு கதையைப்பற்றி ஒரு அபத்தமான கட்டுரையை எழுதியிருப்பதாகச் சொன்னார்கள். நீங்கள் ஒருபோதும் அப்படி எழுதமாட்டீர்கள் என நான் சொன்னேன். இல்லை எழுதியிருக்கிறார் என்று இந்த இணைப்பை அனுப்பினார்கள். உங்கள் மேலுள்ள மதிப்பால் அதை பார்த்தேன். ஆம்,நீங்கள் எழுதவில்லைதான், ஆனால் ஒரு மதவெறியரின் அபத்தமான கட்டுரையை வெளியிட்டதன் வழியாக என் மதிப்பில் மிகவும் தாழ்ந்துவிட்டீர்கள் என்று சொல்ல விரும்புகிறேன். இன்றுவரை உலக அளவில் எழுதப்பட்ட புனைவுகளில் ஏறத்தாழ நேர்ப்பாதி ’நான்’ என்ற தன்மைநிலையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13036

அறம், சோற்றுக்கணக்கு -கடிதங்கள்

அன்புள்ள மோகன், அறம், சோற்றுக்கணக்கு இரு கதைகளையும் வாசித்து மனம் நெகிழ்ந்தேன். எனக்கு எப்போதுமே செண்டிமென்ட் மேல் அதிருப்தி உண்டு. உங்களுக்கு தெரியும். நான் பெரிதாக எல்லாம் உறவுகளைப்பற்றி அலட்டிக்கொள்பவன் கிடையாது. நான் கல்யாணம்கூட பண்ணிக்காதது அதுக்குத்தான் என்று நினைக்கிறேன். மிகையாக மனித உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. உங்களுடைய நல்ல கதைகளில் எல்லா உணர்ச்சிகளும் கம்மியாகவே இருக்கும் என்பதனால்தான் நிறைய கதைகளை விரும்பியிருக்கிறேன். ஆனால் இந்தக்கதைகள் கொஞ்சம் அதிகமாக இருக்கிறதோ என்று தோன்றினாலும்கூட என் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12192

வணங்கான், அறம், சோற்றுக்கணக்கு- கடிதங்கள் மேலும்

அன்புள்ள ஜெயமோகன் சார், நலம் தானே? சோற்றுக்கணக்கு கதை படித்ததும் எனக்குள் எழுந்த முகம் “கறிசாப்பாடு” பாய் என்கிற பெரியவருடையது. பத்தாண்டுகளுக்கு முன் நான் ஓவியக்கல்லூரியில் சேர்ந்தபோது என்னுடன் சென்னைக்கு எடுத்து வந்தது ஏழ்மையை மட்டுமே. விளம்பர பலகைகள் வரைந்து கிடைக்கும் காசில் தான் படித்தேன். கையில் கிடைக்கும் பத்திருபது ரூபாயில் தெருக்கடைகளில் தான் பெரும்பாலும் சாப்பாடு. அதிலும் மட்டமான ஆரோக்கியமில்லாத உணவு. அப்போது மிக ஒல்லியாக இருப்பேன். கறி சாப்பாட்டிற்கு நாவு ஆசைப்படும் காலம். ஓவியக்கல்லூரிக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12467

» Newer posts