Tag Archive: சோமன்

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 83

[ 13 ] அஸ்தினபுரியின் விரித்த கைகளில் வைத்த தாமரைபோல் வடிவுகொண்டிருந்த பன்னிரு பகடைக்களத்தின்மீது வானமென கவிந்திருந்த குவைக்கூரைப் பரப்பை பின்னிநிறைந்த உடல்களாக மாற்றிப் பரவியிருந்த தேவர்களும் அசுரர்களும் நாகங்களும் இருட்தெய்வங்களும் பூதங்களும் கின்னரரும் கிம்புருடரும் கந்தர்வர்களும் எண்திசைக்காவலரும் ஏழுமீன் முனிவரும் அருந்தவத்தோரும்  விழிதிறந்து கீழே நோக்கிக்கொண்டிருந்தனர். பெருமூச்சுடன் வசிஷ்டர் “முதற்பிழை” என்றார். விஸ்வாமித்திரர் “எப்போதும் முதலில் எழுவது அமுதே” என்றார். கரியநாகம் ஒன்று நெய்யருவிபோல வழிந்திறங்கி தருமனுக்குப் பின்னால் சென்று வளைந்து அவன் இடத்தோளுக்கு மேலாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88320

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 44

[ 17 ] ஜராசந்தனும் பீமனும் காற்றில் சறுக்கி நழுவியிறங்குபவர்கள் போல மிகமெல்ல மற்களத்திற்குள் புகுந்து கால்களை நிலைமண்டியில் ஊன்றி கைகளை கடகபாகமாக விரித்து ஒருவர் உடல்மேல் ஒருவர் விழி ஊன்றியிருக்க அசையாமல் நின்றனர். புழுதியில் அடிமரம்போல் ஊன்றியிருந்தன நரம்போடிய கால்கள். இரையை முறுகப்பற்றி இறுக்கிக் கொண்டிருக்கும் மலைப்பாம்பு போலிருந்தன தசைகள். களிற்றேறின் முற்றிய திமில் என தோள்கள் சிலிர்த்தசைந்தன. காற்றில் இரைநோக்கும் நாகமுகங்கள் போல கைகள் மெல்ல துழாவின. தொடைகளில் இழுபட்ட வில்நாண். இடையில் இழுத்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87585

வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 20

பகுதி நான்கு : ஆடி   [ 1 ] பிரம்மனின் மைந்தராகிய மரீசிக்கு மைந்தராகப் பிறந்தவர் காஸ்யப பிரஜாபதி. அவர் தட்சனின் மகள்களாகிய அதிதி, திதி, தனு, அரிஷ்டை, சுரஸை, கசை, சுரஃபி, வினதை, தாம்ரை, குரோதவசை, இரை, கத்ரு, முனி என்பவர்களை மணந்தார். ஒவ்வொருவரும் பெருவல்லமை கொண்ட மைந்தர்களைப்பெற்று புவியை நிறைத்தனர். தாம்ரை கனவுகாண்பவளாக இருந்தாள். கனவுகளுக்கு எடையில்லை என்பதனால் அவள் கருவுற்றபோதிலும் வயிறுபெருக்கவில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அவள் தன் கனவுக்குள் இனிதே சுருண்டிருந்தாள். விழித்துக்கொண்டபோது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86969

மலைச்சாரலில்…

இருபத்துநான்கு முதல் குற்றாலத்தில் இருந்தேன். பழையகுற்றாலம் அருகே எசக்கி விடுதியில். பாபநாசம் படப்பிடிப்பு. கருமேகம் மூடிய மலையடுக்குகள். ஒருநாளில் ஐம்பதுமழை. வந்ததும் தெரியாது போனதும் தெரியாது. மொத்தப்படப்பிடிப்பையும் ஜித்துவுக்கும் மழைக்குமான போராட்டம் என்று சொல்லவேண்டும். கமலுடனும் அவருக்கு நெல்லை வட்டார வழக்கு சொல்லிக்கொடுக்க வந்திருந்த நண்பர் சுகாவுடனும் பேசி அவர்களுடைய அற்புதமானநகைச்சுவைக்காகச் சிரித்து கண்ணீர்மல்கிக் கொண்டிருந்தேன். நடுவே மதன் கார்க்கி சுகாவை கூப்பிட்டு ஒரு பாடலுக்காக நெல்லையின் சிறப்புச் சொற்களைக் கேட்டார். அவற்றை பாட்டில் சேர்க்கமுடியாது என்பதே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61084