Tag Archive: சோபானம்

சோபானம் பற்றி…

அன்புள்ள ராம் சோபானம் வாசித்தேன். கதை நன்றாக உள்ளது. ஒரு சிறுகதைக்குரிய இரு இயல்புகள் அழகாக நிகழ்ந்திருக்கின்றன. அது ஒரு மனிதனைக் காட்டுகிறது. ஒரு முரண்பாட்டைச் சித்தரிக்கிறது கான்சாகிபின் தோற்றம் , ஆளுமை, அவரது தேடல் ஆகியவை நுட்பமாகவே சித்தரிக்கப்பட்டுள்ளன. கலைகள் எல்லாமே மனிதனின் முழுமைக்கான தேடலின் விளைவுகள். எங்கோ தன்னை நிறையாத பாத்திரம் என அவன் உணர்வதன் வெளிப்பாடுகள் அவை . ஆகவே எல்லாக் கலைகளும் எதையோ தேடுகின்றன. மனிதர்கள் வழியாக எங்கோ சென்றுகொண்டிருக்கின்றன. ஆகவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36412/

வேஷம், சோபானம்- விமர்சனம் -அரவிந்த்

வேஷம் பிரகாஷின் “வேஷம்” சிறுகதைகளுக்கே உரிய செறிவானதொரு வாசிப்பு அனுபவத்தை தந்தது. சூழல் சார்ந்த விவரிப்புகளை ஆசிரியர் கடகடவென சொல்லியபடி தாண்டிப்போவதில்லை என்பதால் கதை நம்முன் அழகாக விரிகிறது. திருவிழா நடக்கும் அந்த வெளியை, அதில் கலந்துகொள்ளும் மக்கள்திரளை, அவர்களது மனநிலையை எல்லாம் தேவைக்கேற்ப நன்றாக விவரித்திருக்கிறார். இந்தக் கதைக்கு பலவிதமான வாசிப்புகள் வரும் என்று நான் ஊகித்தேன். அது போலவே நடந்தது. கடிதம் எழுதிய ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான வாசிப்பை முன்வைத்திருக்கிறார்கள். அது இந்தக்கதையின் வெற்றிதான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38416/

பீத்தோவனின் ஆவி,சோபானம்-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், வேதாவின் “பீத்தோவனின் ஆவி” படித்தேன். சேராவின் துக்கம் சரியோ தவறோ தெரியவில்லை. ஆனால், ஒரு அடிப்படை இசையறிவு கூட இல்லாத நானும் அதே உணர்வை அனுபவித்திருக்கிறேன். சேராவுக்கு பெயர் தெரியாத இந்துஸ்தானி பாடகனின் ஆலாபனை, எனக்கு மதுரை சோமுவின் “என்ன கவி பாடினாலும்”. http://www.youtube.com/watch?v=ZiiDf-HmkCE சம்பிரதாயங்களை நினையாமல் அனிச்சையாக “ஆஹா” என்பதும் வயலினுக்கு “சபாஷ்” சொல்வதும் மிகவும் இயல்பாக, தன்னைக் கரைத்துக் கொண்ட இரு கலைஞர்களின் வித்தை கேட்பவர்களையும் கரைக்கிறது. வண்ணதாசன் அவர்கள் முகநூலில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38193/

ராம், சோபானம்-கடிதங்கள்

ஜெ, சோபானம் கதையை வாசித்து வியந்தேன். தமிழில் இந்தத் தலைமுறையில் சங்கீதம் பற்றி நுட்பமாக எழுதப்பட்ட நல்ல கதைகள் வெளிவருவதில்லை. சிதம்பரசுப்ரமணியன், ஜானகிராமன் போன்றவர்கள் எழுதிய நல்ல கதைகளை பலமுறை வாசித்து மகிழ்ந்திருக்கிறேன். பிரபஞ்சன் சில கதைகள் எழுதியிருக்கிறார். ஆனால் அவற்றில் கொஞ்சம் பாசாங்கு இருக்கிறதோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு. நீண்ட இடைவெளிக்குப்பிறகு இளைஞர் ஒருவர் எழுத்தில் இப்படி ஒரு அற்புதமான சங்கீதக்கதை வந்திருப்பது மிகுந்த மனமகிழ்ச்சியைகொடுக்கிறது. உஸ்தாத் படேகுலாமலிகானை இசைமேதை ஜிஎன்பி வணங்கினார் என்றும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38189/

புதியவர்களின் கதைகள் 8, சோபானம் – ராம்

கான்சாகேப் நிதானமாக படிகளில் ஏறி வந்துகொண்டிருந்தார். அவர் வந்த கார் இன்னும் உறுமிய படி போர்டிகோவில் நின்றிருந்தது. ராம் நாராயணும், ரஷீதும் தம்பூரையும், சுர்மண்டலையும் காரிலிருந்து எடுத்துக் கொண்டிருந்தார்கள். தரையில் சதுர்லாலின் சந்தன நிற தபலா பை இறக்கிவைக்கப்பட்டிருந்தது. ஒன்னரை ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டிருந்த அந்த பங்களா, செட்டியார் அவரது விருந்தினர்களுக்காக கட்டியது. பால் வெள்ளையில் வண்ணம் தீட்டப்பட்டு, இரண்டு மாடிகளும், மேலே ஒரு கூம்பு கோபுரமும் கொண்ட கட்டிடம். விசாலமான போர்டிகோ, சுற்றிலும் தோட்டம். பர்மா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36408/