Tag Archive: சொல்வனம்

எம்.எஸ்.வி ஒரு கட்டுரை- வெ சுரேஷ்

விஸ்வநாதன்- ராமமூரத்தியின் இசையில் அறுபதுகளில் வெளிவந்த பாடல்களுக்கு எந்தவொரு புதிய பாராட்டும் தேவையில்லை. அவை அவற்றுக்கான உயரங்களுக்குச் சென்று அமர்ந்துவிட்டவை. ஆனால் எழுபதுகளில் எம்எஸ்வி இசையில் வெளிவந்த பாடல்கள் அவற்றுக்குரிய இடத்தை இன்னும் பெறவில்லை என்றுதான் எண்ணுகிறேன். – See more at: http://solvanam.com/?p=41097#sthash.hF7Kv5l6.dpuf

Permanent link to this article: https://www.jeyamohan.in/76989

தமிழ் மின்னிதழ்

சி.சரவணக்கார்த்திகேயன் ஆசிரியத்துவத்தில் வெளியாகும் மின்னிதழான ’தமிழ்’ நேற்று பிரசுரமாகியிருக்கிறது. இதை பரீக்‌ஷா ஞாநி வெளியிட்டிருக்கிறார். வெளியீட்டு விழாவும் இணையத்திலேயேதான் இணையத்தில் உதிரி குறிப்புகளாக வெளியாகிக்கொண்டிருக்கும் எழுத்துக்களை ஒரே இடத்தில் பிரசுரிப்பது இதன் நோக்கம். பொதுவாக இணையதளம் என்பதே இணையஇதழாக இங்கே கொள்ளப்படுகிறது. ஆனால் இவ்விதழ் இணையம் மூலம் வாசிக்கக் கிடைக்கும் இதழ்.தரவிறக்கம் செய்தோ நேராகவோ வாசிக்கலாம் ஏற்கனவே வெளிவந்த சில இணையஇதழ்கள் கணிசமான பங்காற்றியிருக்கின்றன. குறிப்பாக சொல்வனம் இதழ் தமிழ் இணையஇதழ்களில் முக்கியமானது என நினைக்கிறேன் பதாகை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69786

ஒரு லண்டன் கூட்டம்

இந்திய எதிர்ப்பு அரசியல் என்பது பார்ப்பனிய எதிர்ப்பில் தொடங்கி இந்து எதிர்ப்பு வழியாக சென்றுசேரும் ஒரு புள்ளி. அது பெரும்பாலும் இங்குள்ள இடைநிலைச்சாதிகள் அவர்களின் வெறுப்பு நிறைந்த சாதிய அரசியலை மறைத்துக்கொள்ள உதவும் போர்வை. பார்ப்பனிய எதிர்ப்பு பேசும் எவரிடமும் ஒரு அடி அருகே சென்றால் நாற்றமடிக்கும் தலித் எதிர்ப்பைக் காணமுடியும். இந்த அரசியல் பல்வேறு நிதியூட்ட முறைகளால் இங்கே பேணி வளர்க்கப்படும் ஒரு தரப்பு. அடிப்படை சிந்தனை, எளிய வரலாற்று அறிவுகூட இவர்களிடம் இருக்காதென்பதை காணலாம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61282

உடலைக் கடந்த இருப்பு

ஐம்புலன்களின் வழியாகவே மனிதனுக்கு அறிதல் சாத்தியமாகிறது. புலன்களோ உடலுள் பொருந்தியவை. எனவே ‘நான் அறிகிறேன்’ என்று அறியும் தூய தன்னுணர்வு இந்தப் பரு உடலுக்குக் கட்டுப்பட்டது. இப்போது, உடல் மனிதனுக்கு அறிதலின் பாதைகளை நோக்கித் திறந்திருக்கும் வாசலா அல்லது புலன்களைச் சார்ந்தே இருப்பதால் உடல் அறிதலின் பரப்பைக் கட்டுப்படுத்தும் வேலியா? உடலைக் கடந்து மனிதனின் தன்னுணர்வு தன் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியுமா? அவ்வாறு முடியுமென்றால் அறிதலுக்கு வாய்ப்பே இல்லையா அல்லது நேரெதிராக அறிதல் எல்லைகளற்று விரிந்துவிடுமா? – …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/58245

இணையமும் நூல்களும்

இணையத்தில் வரும் எழுத்துக்களைப்பற்றி நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். வலைப்பூ எழுத்துக்கள் மிகமிகக் குறைந்துவிட்டன என்று சொன்னார்கள். பெரும்பாலானவர்கள் ஃபேஸ் புக் எழுத்தாளர்களாக ஆகிவிட்டனர். ஃபேஸ்புக்கில் அப்படி என்னதான் எழுதுகிறார்கள் என்றேன். பெரும்பாலும் விவாதத்தைக் கோரும் சுருக்கமான குறிப்புகள், கவன ஈர்ப்பு கருத்துக்கள் மட்டுமே என்றார்கள். அதில் உள்ள உடனடி எதிர்வினைதான் அவ்வெழுத்தை வடிவமைக்கும் தூண்டுதல் என்றனர். எழுதுபவர்கள் கொஞ்சநாள் அந்த எதிர்வினையை முழுமையாகவே கவனிக்காமலாகிவிடவேண்டும். எத்தனை வாசகர்கள் என்பதை முற்றிலுமாக உதாசீனம் செய்துவிடவேண்டும் என நான் சொல்வேன். சில …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/48646

அதிகாரமெனும் நுண் தளை – வெள்ளை யானை

எழுத்து பிரசுர வெளியீடாக வந்திருக்கும் ஜெயமோகனின் புதிய நாவல் வெள்ளையானை மிக முக்கியமான வரலாற்று நிகழ்வை புனைவின் மொழியில் ஆவணப்படுத்துகிறது. இந்தியாவின் முதற் தொழிலாளர் வேலைநிறுத்தம், இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கை காவுவாங்கிய அதி உக்கிரமான தாது வருஷ பஞ்சத்தின் பின்புலத்தில், சென்னையின் ஐஸ் ஃபேக்டரியில் 1878 ஆம் ஆண்டில் நடந்தேறியது. நாவல் அந்தப் போராட்டத்தின் பின்னணியை ஆங்கிலேய ராணுவ அதிகாரியின் பார்வையில் விரித்து எடுக்கிறது. சொல்வனம் விமர்சனக்கட்டுரை

Permanent link to this article: https://www.jeyamohan.in/41488

திருத்தம்

அன்புள்ள ஜெ, சொல்வனம் இதழை நடத்துபவர்கள் உறுதியாக சொல்கிறார்கள் – பேயோன் யார் என்றூ அவர்களுக்குத் தெரியாது. ஆனால் ராமன் ராஜா கட்டாயம் பேயோன் என்ற பெயரில் எழுதுவதில்லை.. உங்கள் தகவலுக்காக.. அன்புடன், ஜடாயு

Permanent link to this article: https://www.jeyamohan.in/37391

சொல்வனம்-க.நா.சு சிறப்பிதழ்

கருத்தியல் சார்புகளோ, அரசியல் நிலைப்பாடுகளோ, சமுதாயப் பண்பாட்டு அணிவகுப்புகளில் சாரிகளோ இல்லாத ஒரு நபர் பல பத்தாண்டுகள் தமிழிலக்கியத்தில் தாக்குப் பிடித்து நின்று பல தரப்பினரின் மரியாதையைப் பெறுவதென்பது அத்தனை எளிதான விஷயம் இல்லை. க.நா. சுப்ரமண்யம் என்கிற ஒரு நபர் 20ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் வாழ்ந்து இதைச் சாதித்திருக்கிறார். இந்த ஆண்டு அவர் தோன்றி நூறாண்டு ஆகிற வருடம். சொல்வனத்தின் 75ஆம் இதழை, அவருடைய நூற்றாண்டு நினைவுச் சிறப்பிதழாகக் கொண்டு வரத்தீர்மானித்ததற்கு இந்தப் பொது நிலையை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30903

நயினார்

‘காந்திமதி’யின் கொட்டடிக்கு அருகிலேயே மாட்டப்பட்டிருக்கும் ஓவியம் ஒன்றில், நயினார் பிள்ளை தாத்தாவுடன் இணைந்து ‘குட்டி யானை நயினார்’ நின்று கொண்டிருக்கும். மனபிரமைதான் என்பது அறிவுக்குத் தெரிந்தாலும், மனதுக்குள் ‘சும்மாயிருக்கியா மக்கா’ என்று நான் தொட்டு உறவாடி, விளையாடிய நயினார் என்னிடம் கேட்பதாகவே உணர்கிறேன். யானை பற்றிய எந்தச் சித்தரிப்பையும் நான் விரும்புவேன். நண்பர் சுகா சொல்வனம் இதழில் எழுதியிருக்கும் இந்தக்கட்டுரை சமீபத்தில் வாசித்த அழகிய சித்தரிப்பு.

Permanent link to this article: https://www.jeyamohan.in/25356

அள்ளக் கிடைக்காத அம்பாரம்

பூமணியின் சிறுகதைகளில் இப்படிப்பட்ட ஒருமையைக் கண்டுபிடிப்பது கடினம். சில கதைகள் கிராம வாழ்வைப் பேசுகின்றன, சில நகர வாழ்வை, சில கதைகள் சாதி குறித்து, சிலவற்றில் சாதி பற்றிய பேச்சே கிடையாது. சில கதைகள் சிறுவர்கள் பார்வையில் சொல்லப்படுகின்றன, சில பெண்களின் பார்வையில் என்று ஒவ்வொரு கதையும் மாறுபட்ட ஒன்றாக இருக்கிறது. பெரும்பாலும் சாதி அடையாளங்களுடன் பேசப்படும் பூமணியின் எழுத்தில் ஒரு மெல்லிய நகைச்சுவை சில கதைகளின் அடித்தளத்தில் காணப்படுகிறது. சொல்வனம் இதழில் பூமணியின் கதைகளைப்பற்றி மித்திலன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/23164

Older posts «