Tag Archive: சேலம் பகடால நரசிம்மலு நாயிடு

சேலம் பகடால நரசிம்மலு நாயுடு

சுந்தரராமசாமியின் நூலகத்தில் இருந்து சேலம் பகடால நரசிம்மலு நாயிடு எழுதிய’ தென்னாட்டு யாத்திரை என்ற நூலை வாசித்தேன். கன்யாகுமரிக்குச் செல்லவேண்டுமென்றால் நாகர்கோயிலில் இருந்து நடந்து அல்லது மாட்டுவண்டியில்தான் செல்லவேண்டும் என்றும் , அங்கே சில அர்ச்சகர் வீடுகள் மட்டுமே உள்ளன என்றும், அங்கே அரிசி கொடுத்தால் சமைக்க பாத்திரங்களும் தண்ணீரும் கொடுபபர்கள் என்றும் வாசித்தபோது அதிர்ந்து வருடத்தை பார்த்தேன். 1908 ல் வெளிவந்த நூல் அது. மணல்மேடுகள் நடுவே ஏகாந்தமாக இருக்கும் கன்யாகுமரியின் அழகை அவர் வர்ணித்திருந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9512

ஹிந்து பைபிள்

நரசிம்மலு நாயுடுவின் ஹிந்து பைபிள் அந்தப்பெயர் சுட்டுவதுபோல பைபிளை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நூல் அல்ல. பைபிள் மூலநூல்களின் பெருந்தொகை. அதில் வரிகள், அல்லது வசனங்கள், எண்ணிக்கையிடப்பட்டு அளிக்கப்பட்டிருக்கும். இந்நூல் நரசிம்மலு நாயுடு அவர்களின் சொந்த நூல்தான். இந்து ஞான மரபைப் பற்றிய தன்னுடைய விரிந்த வாசிப்பை அவர் இந்நூலில் தொகுத்தளித்து கூடவே மூலநூல்களின் பல பகுதிகளையும் மொழியாக்கம் செய்து அளித்திருக்கிறார். இந்நூல் ஒரு பெரிய கலவை. முதற்பகுதியை பெரிய அறிமுக உரையாக எழுதியிருக்கிறார் நரசிம்மலு நாயுடு. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9579