Tag Archive: செவ்விலக்கியம்

சிவராம் காரந்த்தின் ‘மண்ணும் மனிதரும்’

செவ்விலக்கியம் என்பதை பெரும்பாலும் கவிதைகளை வைத்துத்தான் மதிப்பிட்டு வருகிறோம். காரணம் செவ்விலக்கியம் என்பதற்கு ஒரு பழைமை தேவை; இலக்கிய வகைகளில் பழைமைச் செறிவுள்ள வரலாறு கவிதைக்கு மட்டும்தான் உள்ளது. உரைநடைப் படைப்புகளைத் தனியாகப் பிரித்துக் தொகுத்துக் கொள்ள வேண்டும். காலகட்டத்தை வைத்து அதை மதிப்பிட்டுவிட முடியாது. செவ்விலக்கியம் என்பதைப் பற்றிய வரையறையை வழக்கமாக டி.எஸ். எலியட்டிலிருந்து தொடங்குவதே மரபு. எலியட் செவ்விலக்கியம் என்பதை ‘பிற்காலத்திய இலக்கிய பரிணாமகதிகளுக்கு முழுக்க அடிப்படை அமைத்துத்தரும் முதல் தளம்’ என்று வரையறுக்கிறார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/196

வரலாறும் செவ்வியலும் – மழைப்பாடல்

ஜெ மழைப்பாடலை இப்போதுதான் முழுமையாக வாசித்துமுடிந்த்தேன். இரண்டு முழு வாசிப்பு தேவைப்பட்டது. அதன் அமைப்பில் உள்ள unity யும் ஒன்றுடன் ஒன்று அனைத்தும் கொண்டிருக்கும் conformity யும் வியப்புகொள்ளச் செய்கின்றன. ஒட்டுமொத்தமாக பெண்களின் கதை. இரண்டு பெண்கள். காந்தாரி,குந்தி. அவர்களுக்கு முன்னால் மேலும் இரு பெண்கள். அம்பிகை அம்பாலிகை. அவர்களுக்கு முன்னால் சத்யவதி. அவர்கள் சதுரங்கக் கட்டத்திலே ஒவ்வொரு காயாக தூகி வைத்துவிட்டு அவைகளே ஆடிக்கொள்ளட்டும் என்று சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றுவிட்டார்கள் என்று நினைத்தேன் நாவலின் கட்டுமானத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/58277

செவ்வியல்,ஒருகடிதம்

அன்புள்ள ஜெ, செவ்வியல் என்பதே மானுட மனத்தின், வரலாற்றின் இருட்டையும் கசப்பையும் அதிகமாகச் சொல்லக்கூடியதாகவே இருக்கும். அங்கதமே அதன் மையச்சுவையாக திரண்டு வரும் அப்படியா? நீங்கள் முன்பு எழுதியிருந்த ஒரு கட்டுரையில் வேறுமாதிரி சொல்லியிருந்தீர்கள்.. நவீனத்துவம் மானிட அகத்தின் இருட்டறைகளுக்குள்ளேயே சஞ்சரிக்கிறது, அதையே திருப்பித் திருப்பிப் பேசுகிறது. ஆனால் காம,குரோத,மோகங்களாகிய இந்தத் திரைகளை விலக்கி உள்ளே சென்றால் அதன் சாரமாக இருப்பது ஆனந்தம் மட்டுமே. நவீனத்துவம், பின்நவீனத்துவம் போன்ற கோட்பாடுகளையெல்லாம் தாண்டி இந்திய தத்துவ ஞானத்தின் முடிபும், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/7303