Tag Archive: செல்வேந்திரன்

பாலையின் களிப்பு

பாலைநிலப்பயணம் வாங்க   நான் நண்பர்களுடன் சென்ற ஆண்டு சென்ற பாலைநிலப் பயணம் நிலக்காட்சிகளால் ஆன ஒரு நினைவு. நாட்கள் செல்லச் செல்ல நாம் கண்ட நிலக்காட்சிகள் கனவென ஆகிவிடுகின்றன. அந்தப் பயணத்தில் செல்வேந்திரனும் உடன் வந்தார். அவ்வனுபவத்தை கிண்டிலில் நூலாக பதிப்பித்திருக்கிறார் அப்பயணத்தில் சென்ற ஒவ்வொரு இடத்தைப் பற்றியும் நுட்பமான நேரடி விழிப்பதிவுகள், கூடவே விரிவான செய்திகள் உளக்கொப்பளிப்புகள் என விரிகிறது அவருடைய கட்டுரை. வெடித்துச் சிரித்தபடியே வாசிக்கநேர்ந்த பயணக்குறிப்புகளில் ஒன்று என்று சொல்வேன். செல்வேந்திரனின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129985

நெல்லை நினைவலைகள் -செல்வேந்திரன்

செல்வேந்திரன் எழுதிய பதிவு.நெல்லையை விட்டுச்செல்லும் நினைவுகள்.விமர்சனம் இருக்கிறது, ஆனால் அதை நாலைந்து உறைபிரித்துத்தான் வாசிக்கவேண்டும். வேண்டிய அத்தனைபேருக்கும் சீராகப் புகழ்மொழிகள், மரியாதைகள். எத்தனை சாமர்த்தியமான எழுத்து. விற்பனைநிபுணரியம் அல்லது விநியியம் என்னும் அழகியல் மரபை தமிழில் தோற்றுவிக்கும் பெருமை செல்வேந்திரனுக்கு உண்டு   நெல்லை நினைவலைகள்! 17 மாத வனவாசம் முடித்து மீண்டும் கோவைக்கே கிளம்புகிறேன். தலைப்பையும் முதல் வரியையும் பார்த்ததும் ‘அம்பி நோஸ்டால்ஜியாவை ஆரம்பிச்சுட்டன்’ என தலை தெறிக்க ஓடாதீர் உலகத்தீரே.. நிகழ்ச்சியின் இறுதியில் கேட்கப்படும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88771

இலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும். ஒரு கேள்வி

சொல்புதிது விவாதக்குழுமத்தில் நண்பர் செல்வேந்திரன் இந்த வினாவை எழுப்பியிருந்தார். நாற்பதுக்கும் மேற்பட்ட எதிர்வினைகள் இதற்கு வந்தன. முக்கியமான கேள்வி இது என நினைக்கிறேன்.   நீங்கள் எழுதிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டடித்தும் ஏன் ஒரு பாடலாசிரியராக வசனகர்த்தாவாக சினிமாவில் நீடிக்க இயலவில்லை என கவி பிரான்சிஸ் கிருபாவிடம் அவர் தள்ளாடாத தருணத்தில் கேட்டேன். குடி ஒரு காரணமில்லை. எத்தனையோ திரைக்கலைஞர்கள் போதை இல்லாமல் தொழிலுக்கு வருவதில்லை. உண்மையில் போதையில் மட்டுமே அவர்களால் இயல்பாக இருக்க முடியும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85792

இளவெயினியும் செல்வேந்திரனும்

பெண்ணழகையும் பொருளழகையும் தேவர்களின் அழகையும் அவளழகு வழியாகவே அவன் அளந்தான். தெய்வங்களை அவள் வழியாகவே அவன் வணங்கினான். அழகியரே, தந்தையின் கண்வழியாகவே பெண் முழு அழகு கொள்கிறாள். தட்சனோ ஆயிரம் தலைகளில் ஈராயிரம் கண்கள் கொண்டவன். வெண்முரசு இரண்டாவது ஆண்டுகொண்டாடும் இளவெயினிக்கு அன்பும் முத்தங்களும். செல்வேந்திரனுக்கு வாழ்த்துக்கள் இளவெயினி http://www.selventhiran.com/2014/01/blog-post_13.html

Permanent link to this article: https://www.jeyamohan.in/44843

நாகர்கோயில் எக்ஸ்பிரஸ்

கம்பார்ட்மெண்ட் முழுக்க நிலக்கடலை தொலி கிடக்கும். கூடவே, பனங்கிழங்கு பீலியும், தும்புகளும். இதுவே பண்டிகைகளைப் பொறுத்துக் கரும்புச் சக்கைகள், சம்பா அவல் சிதறல் எனக் கிடக்கலாம். டி.டி.ஆர்., வள்ளென்றுதான் விழுவார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. நாகர்கோவிலிலோ வள்ளியூரிலோ ஏறின அண்ணாச்சி ‘கண்டக்டர் தம்பி… திர்னெலி எப்பொ வரும்’ எனக் கடுப்பைக் கிளப்பி இருப்பார். செல்வேந்திரன் எழுதிய நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் ஒரு நல்ல பதிவு. இயல்பான நகைச்சுவை.

Permanent link to this article: https://www.jeyamohan.in/21951

யானை டாக்டர் நினைவு கூரல்-செல்வேந்திரன்

யானை டாக்டர் நினைவு கூரல்’ நிகழ்விற்கு நானும் அருணும் சென்றிருந்தோம். சுமார் 120 பேர்கள் வந்திருந்தனர். பெரும்பாலும் இளைஞர்கள். ஜெயராமன், ஜெயபிரகாஷ், டால்ஸ்டாய், மரவளம் வின்சென்ட், ஆனந்த் போன்ற உள்ளூர் சூழலியல் ஆர்வலர்களும் இருக்கக் கண்டேன். செல்வேந்திரன் பதிவு

Permanent link to this article: https://www.jeyamohan.in/16879

பெற்றியாரைப் பேணிக் கொளல்!

அன்பின் அரங்கசாமிக்கு, விழா பற்றிய என்னுடைய பதிவு. பெற்றியாரைப் பேணிக் கொளல்! மிக்க அன்புடன், செல்வேந்திரன். http://selventhiran.blogspot.com/2010/05/blog-post_11.html

Permanent link to this article: https://www.jeyamohan.in/7258