குறிச்சொற்கள் செபாஸ்டின்

குறிச்சொல்: செபாஸ்டின்

செபாஸ்டின் கவிதைகள்

கண்ணிலெழுத... ======== பத்திரப்படுத்துகிறேன், முன்பு கண்டிராத இந்த மழைத்துளியை இன்றிரவு அதை உனக்காகக் கொடுத்தனுப்புவேன், இங்கு பெய்யும் தாய்மழையின் கையில். அவள் இன்றே அங்கே பெய்து அத்துளியை உனக்கு தருவாள். உறங்கக் கிடக்கும்போது நீ அதை கண்ணில் எழுதவேண்டும். திடீரென்று காட்சியாகும், மழைவிதைகள் விதைத்து முளைத்து வளரும் ஆகாய நிலங்கள். அவை மரமாகி பூவாகி காயாகி பொங்கித் ததும்பும்போது பொறுக்கியெடுத்து பூமிநோக்கி வீசும்...