Tag Archive: சென்னை புத்தகக் கண்காட்சி 2011

புத்தகக் கண்காட்சி, வாசகர்கள், எழுத்து…

சென்ற சிலநாட்களாகவே பேச்செல்லாம் புத்தகக் கண்காட்சி பற்றி. நான் பயணம் எழுத்து என பல திசைகளில் இருந்தாலும் என்னிடம் பேசுபவர்கள் கிளர்ச்சியடைந்த நிலையில் இருந்தார்கள். வருடத்திற்கு ஒருமுறை சென்னை புத்தகக் கண்காட்சியை ஒட்டித்தான் இந்தப் பரபரப்பு இருக்கிறது. இது நம் பண்பாட்டுச்சூழலுக்கு உதவக்கூடிய ஒரு பரபரப்பு. ஹரன் பிரசன்னா சொன்ன விஷயம், புத்தகக் கண்காட்சிக்கு கூட்டம் அவர் எதிர்பார்த்ததை விட குறைவு என்று. ஆனால் கிழக்கு பதிப்பகத்திற்கு எப்போதும் வழக்கம்போல, அல்லது மேலாகவே கூட்டம் இருந்தது என்றார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11539

நாஞ்சில் சென்னையில்…

நாஞ்சில்நாடன் இன்றும் நாளையும் சென்னை புத்தகக் கண்காட்சியில் தமிழினி புத்தக அரங்கில் வாசகர்களைச் சந்திப்பார். கையெழுத்து போட்டு கொடுப்பார். புத்தக அரங்கு இன்றும் நாளையும் காலையிலேயே ஆரம்பித்துவிடும். அவரது சூடிய ’பூ சூடற்க’ இந்த வருடத்தின் மிகப்பெரிய விற்பனை. 1200 பிரதிகள் தீர்ந்துவிட்டன. 4000 பிரதிகள் இந்த ஒரே கண்காட்சியில் முடிந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. தமிழின் புத்தக வரலாற்றில் முதல்முறையாக ஒரு நூலுக்கு மட்டுமாக ரசீது புத்தகம் அச்சிட்டிருக்கிறார்கள். ’கான்சாகிப்’ சிறுகதை தொகுதி புதியதாக வெளிவந்திருக்கிறது ஜெ

Permanent link to this article: https://www.jeyamohan.in/11512

புத்தகக் கண்காட்சி-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், புத்தகக் கண்காட்சியில் ‘உலோகம்’ வாசித்தேன். கிழக்கு கடை அருகிலேயே நின்று வாசித்து முடித்தேன். நீங்கள் இதுவரை இத்தனை வேகமான ஒரு நாவலை எழுதியதில்லை. வழக்கமாக ‘திரில்லர்’ நாவல்கள் தொடர்ச்சியாக சம்பவங்களை சொல்லிக்கொண்டே செல்லும். உலோகத்திலே மன ஓட்டங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் திரில் குறையவில்லை. என்ன காரணம் என்றால் நம்பகத்தன்மைதான். நாவல் முழுக்க உளவுத்துறையின் செயல்பாடுகளும் இயக்கங்களின் செயல்பாடுகளும் ஆச்சரியமூட்டும்படி ரொம்ப பர்ஃபக்டாக இருந்தன. அந்த காரணத்தால் மேலெமேலே என்று மனசு சென்றுகொண்டே இருந்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11451

புத்தகக் கண்காட்சி 2011

சென்னையில் மூன்றாம் தேதி நாஞ்சில்நாடன் விழா முடிந்தபின் ஏழாம் தேதி வரை இருந்தேன். பிரதாப் பிளாசாவில் என்னுடன் நாஞ்சில்நாடனும் இருந்தார். எனக்கு பகலெல்லாம் சினிமாச்சந்திப்புகள். காரிலிருந்து காருக்கு தாவிக்கொண்டிருந்தேன். நான்காம் தேதி மாலை ஆறுமணிக்கு அறைக்குவந்தபின் நாஞ்சிலை அழைத்தேன். புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருப்பதாகச் சொன்னார். நான் ஆட்டோ பிடித்து வருவதாகச் சொன்னேன். அதற்குள் ராஜகோபாலன் அழைத்து அவர் பைக்கில் என்னை கொண்டுசெல்வதாகச் சொன்னார் கொஞ்ச நேரத்தில் அரவிந்த் வந்தார். அமெரிக்காவில் ஆராய்ச்சி செய்கிறார். டிசம்பர் அமெரிக்காவிலிருந்து இந்தியா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11394