Tag Archive: சென்னை

வெண்முரசு கலந்துரையாடல், சென்னை

  வெண் முரசு கலந்துரையாடல் { சென்னை} வருகிற 21/02/16 {ஞாயிற்றுகிழமை } அன்று சென்னை வெண் முரசு கலந்துரையாடல் நடைபெறும். வெண் முரசின் ஓவியங்கள் என்கிற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற இருப்பதால் , வரும் நண்பர்கள் தங்களுக்கு பிடித்த ஓவியங்களையும் , அதன் மீதான பார்வையையும் முன் வைத்து கலந்துரையாடலாம், என்பது திட்டம் சௌந்தர் SOUNDAR.G Satyananda Yoga -Chennai 11/15, south perumal Koil 1st Street Near hotel saravana bhavan & …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84469

சென்னை வெண்முரசு விவாதச் சந்திப்பு: அக்டோபர்

அக்டோபர் மாத வெண்முரசு விவாதக் கூட்டம். அக்டோபர் 11 ஆம் தேதி சென்னை. முகவரி மற்றும் நேரம்: SATHYANANDHA YOGA CENTRE, 15/11, SOUTH PERUMAL KOIL, 1ST STREET, VADAPALANI (NEAR HOTEL SARAVANA BHAVAN – ARCOT ROAD) Phone No.: 9952965505 Timing:- 4 PM – 8 PM அனைவரையும் வரவேற்கிறோம். [வெண்முரசு நாவல் தொடரை வாசிப்பவர்களுக்கு மட்டுமான கலந்துரையாடல் நிகழ்ச்சி இது] ரகுராமன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/79261

சென்னையில் இன்று உரையாற்றுகிறேன்

தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (Tamil Heritage Trust) சார்பில் சென்னையில் நிகழும் கூட்டத்தில் பழந்தமிழ் பண்பாட்டின் சேரநாட்டு எச்சங்கள் என்னும் தலைப்பில் உரையாற்றுகிறேன். நாள் 2- 5 2015 [மே 2, சனிக்கிழமை]e நேரம் மாலை ஐந்து மணி இடம் தக்கர்பாபா வித்யாலயா, வினோபா ஹால், திநகர், சென்னை தலைப்பு பற்றி: குமரி மாவட்டம் பழைய சேரநாடு. இங்கு தொன்மையான தமிழ் நாகரிகத்தின் பண்பாட்டு நீட்சி இப்போதும் ஓரளவு இருக்கிறது. இவற்றை விழாக்களில். ஆலயச்சடங்குகளில் நாம் காணலாம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74905

சென்னை, ஸ்ரீவில்லிப்புத்தூர், சங்கரன்கோயில்…

டிசம்பர் பதினைந்து முதல் பத்துநாள் சென்னையில் இருப்பதாக திட்டம் இருந்தது, சினிமா வேலையாக. ஆகவே சென்னை அடையாறில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெவெலப்மெண்டல் ஸ்டடீஸ்-ல் டிசம்பர் 19 அன்று நடந்த அயோத்திதாசர் கருத்தரங்குக்கு செல்ல ஒப்புக்கொண்டபோது அது ஓரு தனிப்பயணமாக அமையும் என நினைக்கவில்லை, பயணச்சீட்டு முன்பதிவும் செய்யவில்லை. அந்த சினிமாச் சந்திப்பு ஜனவரிக்கு ஒத்திப்போனது. ஆனால் ஒத்துக்கொண்டபடி கருத்தரங்குக்குச் சென்றுதான் ஆகவேண்டும் ஆகவே பதினெட்டாம் தேதி பேருந்தில் கிளம்பி சென்னை சென்றேன். படுக்கை வசதிகொண்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68486

புறப்பாடு II – 13, காற்றில் நடப்பவர்கள்

சந்தியா அச்சகத்தில் சாலையோரமாக ஒரு பெரிய திண்ணை இருந்தது. பழங்கால வீடு அது. சென்னையில் அத்தகைய தெலுங்குமணம் வீசும் வீடுகள் பல இருந்தன. இரண்டுபக்கமும் திண்ணை. நடுவே உள்ள பள்ளம் வழியாக உள்ளே செல்லும் பாதைக்கு அப்பால் இருண்ட தாழ்வான அறைகள். திண்ணையில் கரிய சிமிண்ட்தரை நெடுங்காலம் பலர் படுத்து புரண்டதனால் உளுந்து போல வழவழப்பாக இருந்தது. வளையோடு போட்ட மேல்கூரை கீழே வந்து பாதி தெருவை மறைப்பதனால் உள்ளே இருந்துபார்த்தால் தெருவில் நடப்பவர்களின் இடுப்புக்குக் கீழேதான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40189

புறப்பாடு II – 12, புரம்

மான்வேட்டைக்குச் சென்றிருந்தபோது வழிதவறி பேச்சிப்பாறை உள்காட்டுக்குச் சென்றுவிட்ட தேவநேசன் பெருவட்டரின் கதையை எனக்கு அப்பு அண்ணா சொல்லியிருக்கிறார். புல்மூடிக்கிடந்த பெரும் குழி ஒன்றில் அவர் விழுந்துவிட்டார். இருபதடிக்குமேல் செங்குத்தாக ஆழம் கொண்ட குழி அந்தக்காலத்தில் யானைபிடிக்க அனுமதி இருந்தபோது வெட்டப்பட்டது. அதன்பின் அப்படியே விட்டுவிட்டார்கள். உள்ளே விழுந்த பெருவட்டருக்கு அடி ஏதும் படவில்லை. ஆனால் அடுத்த அரைமணிநேரத்தில் தெரிந்துவிட்டது பிறர் உதவி இல்லாமல் மேலே ஏறுவது சாத்தியமே இல்லை என்று. மேலே இருந்து வந்த வேர்களும் கொடிகளும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40125

இருநகரங்களுக்கு நடுவே- அசோகமித்திரனின் புனைவுலகு

அசோகமித்திரனின் வாழ்க்கையை ஒரு பெருநகரத்தில் இருந்து இன்னொரு பெருநகரத்துக்கான இடமாற்றம் என்று ஒரே வரியில் சொல்லிவிடமுடியும். அவரது இளமைப்பருவம் செகந்திராபாதில் கழிந்தது. சுதந்திரத்துக்கு முந்தைய செகந்திராபாத் அப்போதுதான் உருவாகிக்கொண்டிருந்த ஒரு பெருநகரம் என்று சொல்லலாம். முதல் உலகப்போர் காலத்தில்தான் செகந்திராபாத் ஒரு ராணுவக்குடியிருப்பு என்பதைவிட்டு வளர்ந்து நகரம் என்ற நிலையை நோக்கிச்செல்ல ஆரம்பித்தது. இரண்டாம் உலகப்போர் அடுத்தகட்ட வளர்ச்சியை சாத்தியமாக்கியது. இடைப்பட்ட அந்த வளர்ச்சிக்காலகட்டத்தில் அங்கே இளமைப்பருவத்தைக் கழிக்க நேர்ந்தவர் அசோகமித்திரன் அசோகமித்திரனின் கதைகளை செகந்திராபாத் பின்னணி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21471

சென்னை பற்றி…

முழுக்க முழுக்க சென்னையைப்பற்றிய தகவல்களை மட்டுமே அளிக்கக்கூடிய  ஓர் இணையதளம் நம்ம சென்னை  . ஆச்சரியமான முயற்சிதான். சென்னையை எனக்குப் பிடிக்காது. மாதத்தில் பாதிநாள் நான் சென்னையில்தான் இருக்கிறேன், ஆனால் ஓட்டல் அறை,கார் தவிர வெளியே இறங்குவதே இல்லை. சென்னையின் காற்றே என் மேல் படுவதில்லை. பட்டாலே மூச்சுத்திணறல்,இரவில் தலைவலி. என் நுரையீரலும் எதிர்ப்புசக்தியும் நிறைவாக இருப்பதற்கான ஆதாரம் அது என்கிறார் டாக்டர் நண்பர். [லா.ச.ரா] ஆனால் சென்னைமேல் எனக்கு வரலாற்று ரீதியான ஈடுபாடு உண்டு. ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17982